அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 21 செப்டம்பர், 2016

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

வள்ளலார் சொல்லி உள்ள  சுத்த சன்மார்க்கம் என்பது ,சாதி, சமயம் மதங்களை கடந்தது,

வள்ளலார் சொல்லி உள்ள சிவம் வேறு,! சமய மதங்கள் சொல்லிய சிவன் வேறு ...வள்ளலார் சொல்லிய சிவம் என்பது அருட்பெருஞ் ஜோதியைக் குறிப்பது,...மக்கள் இரண்டும் ஒன்று நினைத்து விடுவார்கள் என்றுதான் 'சுத்த சிவம் 'என்று பெயர் வைத்து உள்ளார் ..சுத்த சிவம் என்பது அருட் பெரு வெளியில் உள்ள அருள் ஒளியைக் குறிப்பதாகும்...

மேலும் சிவம் ,என்பது வேறு ...சிவன் என்பது வேறு ..ம் ,,க்கும் .ன் ,னுக்கும் வித்தியாசம் உள்ளது.

அடுத்து நடராஜர் என்பது சமய மதங்கள் சொல்லிய சிதம்பரம் நடராஜர் அல்ல ...சிற்றம்பலம் என்னும் அருட் பெரு வெளியில் உள்ள .அருட்பெருஞ்ஜோதி நடராஜ பதியே என்று ''நடராஜ பதி மாலை ''என்ற தலைப்பில் 34,பாடல்கள் உள்ளன அதைப் படித்துப் பாருங்கள் ,வள்ளலார் சொன்ன நடராஜர் யார் ? என்பது தெரியும்,

அதிலே வள்ளலார்.... தான் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கத்தைப் பற்றி ஒரு பாடல் பதிவு செய்து உள்ளார் ..

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எல்லாம்
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப் பிள்ளை
விளையாட்டு என்று என உணர்ந்திடாது உயிர்கள்
பல பேதம் உற்று அங்கும் இங்கும்
போர் உற்று இறந்து வீண் போயினர்
இன்னும் வீண் போகாத படி விரைந்தே
புனிதம் உறு ''சுத்த சன்மார்க்க '' நெறி காட்டி
மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏறுற்ற சுகநிலை அடைந்திடப் பரிதி நீ
என் பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டனன்
மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்க் குணானந்த பர நாதாந்த வரை யோங்கும்
நீதி நடராஜ பதியே !

என்னும் பாடல் வாயிலாக நடராஜ பதி யார் என்பதை தெளிவுப் படுத்து கின்றார் ......அடுத்து ஞான சரியை என்னும் தலைப்பில் 27,வது பாடலில் சன்மார்க்கத்தை சார்ந்தவர்களுக்கு பதிவு செய்து உள்ள பாடல்,

சன்மார்க்கப் பெருங் குணத்தார் தம்பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும் பதியைத் தனித்த சபாபதியை
''நன்மார்க்கம்'' எனை நடத்திச் சன்மார்க்க சங்கம்
நடுவிருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனைப்
''புன் மார்க்கர்  '' அறிவு அரிதாம் புண்ணியனை ஞான
பூரணப் மெய்ப் பொருளாகிப் பொருந்திய மாமருந்தை
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடஞ் செய்
அருட்பெருஞ்ஜோதியை உலகீர் தெருட் கொளச்சார் வீரே !

என்று அனைவருக்கும் புரியும் படை எழுதி வைத்து உள்ளார் ..பாடல்களை ஊன்றி படித்தால் உண்மை விளங்கும்.

மேலும் உரை நடைப்பகுதியில் சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன என்பதை விளக்கம் தந்து உள்ளார் .அதில் ஒருப்பகுதி !

சாத்திய நிலை !

சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கை கூடும் ! என்றும்  சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும் ..

மற்றச் சமய ,மத மார்க்கங்கள் எல்லாம் ''சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ் படி ,ஆதலால் ,அவற்றில் ஐக்கியம் என்பதே இல்லை.''தாயுமானவர்'' முதலானவர்கள் சுத்த சன்மார்க்கி அல்லர் ...மத சன்மார்க்கி என்று ஒருவாறு சொல்லலாம் ,இதில் நித்திய தேகம் கிடையாது .இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியம் அல்ல ....நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும் போது இவர்கள் யாவரும் ,உயிர் பெற்று மீளவும் வருவார்கள் .

முன் இருந்த அளவைக் காட்டிலும் விஷேச ஞானத்தோடு ''சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆகி வருவார்கள்.பின் சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள் ...என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்கள் ..இன்னும் திரு அருட்பாவில் பாடல்களிலும் உரை நடப்பகுதிகளிலும் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் ...

மேலும் சன்மார்க்க கொள்கை !என்னும் தலைப்பில் ;--

சர்வ சித்தியை உடைய தனித் தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தபசு செய்து சிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ''பிரமன்'' ;,சிருட்டி திதி,ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன்,''விஷ்ணு'' ,...சிருட்டி,திதி,சங்காரம்,ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ,''ருத்திரன்''..

இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டிக் கின்றவர்கள் .இவர்களை அந்த அந்த சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வந்தார்கள்.இம் ''மூர்த்திகளுடைய சித்திகள்'' சர்வ சித்தி உடைய கடவுள் சித்தியின் இலேசங்கள் ! ''அதில் ஏக தேசம் கூட அல்ல'' ...ஆகையால் ,இவர்கள் அந்தச் சர்வ சித்தியை உடைய {அருட்பெருஞ்ஜோதி } கடவுளுக்கு ஒப்பாகார்கள்...கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள் .

ஆகையால் ,சமயத் தெய்வங்களை வழிபாடு செய்து ,அந்தச் சமயத் தெய்வங்களிடம் பெற்றுக் கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி, மகிழ்ந்து, அகங்கரித்து ,மேலே ஏற வேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் ''பூரண'' சித்தியை அடையாமல் ,தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல் ...''சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் ''உண்டு என்றும் .அவரே அருட்பெருஞ்ஜோதியர்  என்றும்'',.அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டும் என்றும்.பின்பற்றிக்  கொள்ள வேண்டுவது சுத்த சன்மார்க்கத்தவர்கள் உடைய கொள்கை ....இதை ஆண்டவர் தெரிவித்தார் ..என்று வள்ளலார் சொல்லி எழுதி வைத்து உள்ளார் .....

நாம் தான் உண்மையை அறிந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நான் சன்மார்க்கத்தை குழப்ப வரவில்லை ..வளர்க்க வந்துள்ளேன்...குழம்பி உள்ளவர்கள் தெளிவு அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் ..வள்ளலாரின் விருப்பமும் அதுதான்....

வள்ளலார் சொன்ன சிவம் ,,வேறு ...சமய மதங்கள் சொல்லிய சிவன் வேறு...அதேபோல் வள்ளலார் சொன்ன நடராஜர் வேறு ,,சமய மதங்கள் சொல்லிய நடராஜர் வேறு .../வள்ளலார் சொல்லிய அருட்பெருஞ்ஜோதி  நடராஜர் ,,சமய மதங்களைக் கடந்தவர் ..எல்லோருக்கும் பொதுவானவர் .அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ....

யார் மீதும் எனக்கு வருத்தம் இல்லை .நீங்கள் அனைவரும் என்னுடைய ஆன்மநேய உடன் பிறப்புக்கள் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
சுத்த சன்மார்க்கம் சுக நிலைப் பெருக !

இன்னும் விரிக்கில் பெருகிக் கொண்டே இருக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .    

2 கருத்துகள்:

  1. வள்ளல் பெருமான் சொன்னது இறைவன் ஒருவனே அவன்... அருட்பெருஞ்சோதி வடிவானவன்..
    அதேபோல் தமிழர்களின் சைவ சமயமும் இறைவன் ஒருவனே என்றும் அருட்பெருஞ்சோதி என்றும் மாணிக்கவாசக பெருமான் கூறுகிறார்.. (எகன் அனேகன்)..
    சைவ சமயத்தில் சொன்ன சிவனும், சன்மார்கத்தில் சொன்ன சிவமும் ஒன்றுதான்.. இரண்டுமே தமிழர்களின் சமயம் தான்.. சைவ சித்தாந்தத்தின் கடைசி நிலையே சன்மார்கம்.. சரியை, கிரயை, யோகம், ஞானம் இவை சைவசித்தாந்தம்.. இதற்க்கு அடுத்த நிலை ஞானசரியை இது சன்மார்கம்..
    சைவ சமயத்திலும் இறைவன் ஒருவனே அவனே ஐந்தொழில் புரிகிறான.. இதையே தான் சன்மார்கமும் வழிமொழிகிறது.. ஐந்தொழில் புரியும் அந்த இறைவனின் பெயர் தான் சிவம்,சிவன்,அருட்பெருஞ்சோதி,

    பதிலளிநீக்கு
  2. ரவிகுலம் கூடுவாஞ்சேரி சன்மார்கம்7 ஆகஸ்ட், 2024 அன்று 7:34 AM

    ஐயா ஐயா மணிவாசகர் பற்றி சொல்லி இருக்கீங்க. அவரே இந்த சிவத்த தான் சொல்லி இருக்கிறார் என்று. அப்படி இருந்தால் உங்கள் மணிவாசகப் பெருமான் சமய தெய்வங்கள் ஆகிய இருக்கின்ற பதநிலையில் மாணிக்கவாசகர் வான் கலந்து இருக்கின்றார் இருப்பதாக வள்ளலார் கூறியிருப்பது எங்கள் நினைவு கூறத்தக்கது மேலும் வள்ளலார் முன்பு வந்த தாயுமான சுவாமிகள் கூட சமய சன்மார்க்கித்தான் என்றும் அவரும் மீண்டும் சுத்த சன்மார்க்க கொள்கை கொண்டு சர்வ சக்தி உடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் கலப்பார் இது உண்மை என்று சொல்லி இருக்கிறார் ஆகவே கதிர்வேல் அய்யா சொல்லி அது போல சிவபெரு சிவன் வேறு.

    பதிலளிநீக்கு