அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

எல்லா மார்கங்களையும் மறுக்க வந்தது தான் சுத்த சன்மார்க்க
ம்

 எல்லா மார்கங்களும் நல்லது சொல்லி இருந்தால் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கம் தேவை இல்லை .

நல்லது சொல்லுவது போல் மக்களை மூலச்சலவை செய்பவர்கள் சமய மதவாதிகள் .

மதம் பிடித்து ஆடுகின்றோர் எல்லோரும் மாநடம் காண்குவரோ ? என்று கேள்வி கேட்கின்றார் வள்ளலார் .

மக்கள் அறியாமைக்கும் தவரான வழியில் சென்று கொண்டு இருப்பதற்கும் .மன மாற்றத்திற்கும் உண்மை தெரியாமல் அழிந்து கொண்டு இருப்பதற்கும் காரணம் யார் ?

சாதி சமயம் மதங்களைத் தேரற்றுவித்தவர்கள் தான் என்று வள்ளலார் சொல்லும் போது ,

இல்லை இல்லை நான் அவர்கள் சொல்லுவதையும் கேட்பேன் ,நீங்கள் சொல்லுவதையும் கேட்பேன் அது என்னுடைய விருப்பம் .என்று சொல்பவர்களை வள்ளலார் குருடர்கள் என்று சொல்லுகின்றார .

பைத்தியக்காரர்கள் என்று சொல்லுகின்றார் .

பைத்தியத்திற்கு வைத்தியம் பார்த்த கதைதான். சமய மதவாதிகள் திறுந்துவதும் அவர்களைத் திருத்துவதும் என்று வள்ளலார் பதிவு செய்கின்றார் .

எவ்வுலகில் எவ் எவர்க்கும் அருட்பெருஞ்ஜோதி யரே

இறைவர் என்பது அறியாதே இம் மதவாதிகள்

கவ்வை பெறு "குருடர்" கரி கண்ட கதைபோலே

கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார்

நவ்வி விழியால் இவரோ சில புகன்றாய் என்றாய்

ஞான நடங் கண்டேன் மெய்த் தேன் அமுதம் உண்டேன்

செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம் தனிலே

சேர்ந்தேன் அத் தீ மொழியும் தே மொழி யாய் ஆயினவே !

என்கிறார் வள்ளலார்

எனவே சமய மதத்தில் இருந்தால் நல்லதா? சன்மார்க்கத்தில் இருந்தால் நல்லதா ?

மேலும் சமய மதங்களின் நிலை எப்படி உள்ளது என்பதை சொல்லுகின்றார் .

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம்

"பேய்"" பிடிப்பு உற்ற பிச்சுப் பிள்ளை விளையாட்டு என்று

உணர்ந்திடாது உயர்கள் பல பேதம் உற்று

அங்கும் இங்கும் போர் உற்று இரந்து வீண் போயினார்

இன்னும் வீண் போகாதபடி விரைந்தே

புனிதம் உறும் சுத்த சன்மார்க்க நெறி காட்டி

மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம் ஏருற்ற சுக நிலை அடைந்திடப் புரித நீ

என் பிள்ளை யானதினாலே இவ் வேலை புரிக என்று இட்டனன்

மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே

நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே

நிர்க் குணானந்த பர நாதாந்த வரை ஓங்கும் நீதி நடராஜ பதியே !

 என்று சொல்லி உள்ளார் .இவற்றை படித்து தெரிந்து புரிந்து கொண்டு தான் என் வாழ்க்கை அமைத்து கொண்டு

சமய மதங்களின் சூழ்ச்சி தெரியாமல் வாழும்  ஆன்ம நேய  உடன் பிறப்புகளுக்கு என்னால் முடிந்து அளவுக்கு சுத்த சன்மார்க்க கொள்கையை சொல்லி வருகிறேன் .

விருப்பம் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளலாம் விருப்பம் இல்லாதவர்கள் விட்டு விடலாம் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

 கொல்லா  நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

 ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

1 கருத்து: