வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
இந்தப்பாடலை ஊன்றி கவனித்து படிக்கவும் !
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய்ந் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !
இன்புறலாம் இவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்
அன்புடையீர் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவம் இங்கு அனக வடிவாகிப்
பொன்புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற் அரிதாம் மணியே சிற்சபையின்
மாமருந்தே என்று உரைமின் தீமை எலாம் தவிர்த்தே !
நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவலனோ
நெடு மொழியே உரைப்பன் அன்றிக் கோடு மொழி சொல்வேனோ
சார்புரவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றித்
தனித்த பெருஞ் சுகம் அளித்த தனித்த பெரும் பதி தான்
சீர் பெறவே திருப் பொதுவில் திருமேனி தரித்துச்
சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
ஒர்புரவே இது நல்ல தருணம் இங்கே வம்மின்
உலகியலீர் உன்னியவார் உற்றிடுவீர் விரைந்தே !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக