அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 4 மே, 2016

சுத்த சன்மார்க்க உணவு என்பது எது ?

உணவில் மூன்று வகை உண்டு

தாவர உணவு
புலால் உணவு
அருள் உணவு

தாவர உணவு உடம்புக்கு வியாதி வராமல் ( ஆபத்து ) வராமல் பாதுகாப்பான உணவாகும் .

மாமிசம் என்னும் புலால் உணவு உணபதால் உடம்பிற்கு வியாதிவரும் துர்மரணம் வரும் அடிக்கடி ஆபத்துக்கள் வந்து கொண்டே இருக்கும்

மேலே கண்ட இரண்டு வகை உணவும் உடம்பையும் உயிரையும் பாதுகாப்பாது .

 உண்ணும் உணவிற்கு தகுந்தாற் போல் தான் அறிவும், ஜுவனும்  புத்தியும் ,மனமும் செயல் படும் ,

மேலே கண்ட உணவு வகைகள் வேறு பட்டாலும் செயல்கள் வேறு பட்டாலும் மரணம் என்பது நிச்சயம் உண்டு .பிறப்பு என்பது நிச்சயமாக உண்டு .

தாவர உணவும் புலால் உணவும் வேறு வேறு குணங்கள் இருந்தாலும் வாயின் வழியாகத்தான் உடம்பிற்கு செல்கிறது .

வாயின் வழியாக எந்த பொருள் சென்றாலும் அவை மலமாக வெளியே வந்து கொண்டே இருக்கும் .

அதற்கு பெயர் புழுக்கின்ற உணவு ,
புழுக்கின்ற உணவு எதுவாக இருந்தாலும் மலமாகும் உணவு எதுவாக இருந்தாலும் .வாயின் வழியாக செல்லும் எந்த உணவாக இருந்தாலும் மரணம் என்பது நிச்சயமாக உண்டு ,

எனவே அருள் உணவு ஓன்றினால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் .

அருள் உணவு எங்கே இருக்கிறது அதை பெறும் வழி எப்படி எனபதை தெரிந்து கொள்வது தான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் .

அதற்கு பெயர் சுத்த சன்மார்க்க உணவு என்பதாகும் .

நாம் பழுக்கின்ற உணவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து புழுக்காத உணவை உட்கொள்ள வேண்டும் .

புழுக்காத உணவு வகைகள் !

தேன் ,வெல்லம் ,நாட்டு சர்க்கரை , கற்கண்டு ,அயம் முதலிய செந்தூரம் ,தாமிரம் அயம் முதலிய பஸ்பம் ,இவைகளை உட்கொள்ள பழகி தேகத்தை நீட்டிக்க வைத்து கொள்ள வேண்டும் ,

இவைகள் யாவும் புழுக்காத உணவுகள் மலம் வராத உணவு வகைகள்

இந்த உணவால் உடம்பு நீண்ட நாள் நீட்டிக்கலாம் அருள் பெருவதற்கு சகாயமாக இருக்கும் .

அருள் பெறாமல் இந்த உணவே உட்கொண்டே இருந்தாலும் ,நீண்ட வருடம் உயிர் உடன் வாழலாம் இறுதியில் மரணம் வந்தே தீரும் ,

இவைகள் யாவும் தேகம் நீட்டிக்க .அருளைப் பெற உபாய வகையாகும் அதற்கு பெயர் உபாய மார்க்கம் என்பதாகும் .

சுத்த சன்மார்க்கம் என்பது உண்மை மார்க்கம் ,

உணமையை அறிவினால் அறிந்து வள்ளலார் சொல்லி உள்ள  உண்மை ஓழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால் அருளை சீக்கிரம் பெற்று விடலாம் .

ஆதலால் உபாயத்தைக் கொண்டு செல்லாமல் உண்மையான வழியில் செல்ல வேண்டும் ,

உடம்பையும் உயிரையும் சீக்கிரம் அழிப்பது நான்கு அவை.

ஆகாரம்,நித்திரை,மைத்துனம் ,பயம்

இதற்கு அடிப்படைக் காரணம் உணவு தான் என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும் .

உணவை மாற்றம் செய்ய இரண்டு வழிகள் வள்ளலார் தெளிவாக சொல்லுகின்றார் .

இறைவன் மேல் இடைவெளி விடாத அன்பும் ,எல்லா உயிர்களும் தம் உயிர் போல் என்னும் ஆன்ம நேய ஓருமைப் பாட்டு உரிமையையும் வரவழைத்துக் கொள்ள வேண்டும் .

அதற்கு பெயர் தான் சத்விசாரம் பரோபகாரம் என்றும் பெயர் வைத்து உள்ளார் ,

சுத்த சன்மார்க்கம் எனபது அருளைப் பெறும் மார்க்கம் ,

அருளைப் பெறுவதற்கு எவை தடையாக இருக்கின்தோ அவைகளை எல்லாம் தாமதம் இல்லாமல் தூக்கி எறிய வேண்டும் .

முக்கிய தடையாக இருப்பது எது ?  

சுதத சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள் ,மதங்கள் , மார்க்கங்கள் எனபவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் ,

வருணம் ,ஆசிரமம்,முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் தடை யாக இருக்கிறது .

தடைகளை துணிச்சல் உடன் அகற்றுங்கள்

அதுதான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் மாயா திரைகள்

திரைகளை நீக்குங்கள் அருள் உடனே ஆன்மாவில் இருந்து சுரக்கம்

அருள் உணவு ஒன்றினால் மட்டுமே மரணத்தை வென்று பேரின்ப பெருவாழ்வு வாழ வழி கிடைக்கும் ,

வேறு எந்த குறுக்கு வழியாலும் அருள் சுரக்காது ,கிடைக்காது ,

புழுக்கின்ற உணவை நீக்கி புழுக்காத உணவை உட்கொண்டு

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணை யால் அருளைப் பெற்று மரணத்தை வெல்லுவோம்

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்
 9865939896 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக