அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 13 மார்ச், 2016

ஆன்ம இன்பம் இரண்டு வகைப்படும்.!

ஆன்ம இன்பம் இரண்டு வகைப்படும்.!



அபர இன்பம் என்பது ஒன்று...பர இன்பம் என்பது ஒன்று !

அபர இன்பம் என்பது;-- உடம்பு உயிர்,ஆன்மா வுடன் அனைவராலும் பாராட்டும்படி மா மனிதனாக வாழ்வது,ஆனால் அவர்களுக்கும் இறுதியில் மரணம் உண்டு.

பர இன்பம் என்பது;--உடம்பு,உயிர் இரண்டையும் ஒளியாக.மாற்றி ஆன்மாவுடன் கலந்து ,பின் இறைவனுடன் கலந்து வாழ்வது.அதற்குப் பெயர்தான் பரஇன்பம் என்பதும்,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

மேலும் பர இன்ப வாழ்வு வாழும் ஆன்மாவிற்கு மூன்று தகுதி வகைகள் உண்டு.!

அவை யாவன ? ;--

இம்மை இன்ப வாழ்வு...மறுமை இன்ப வாழ்வு...பேரின்ப வாழ்வு என்னும் மூன்று தகுதியான வகைகள் உண்டு..என்கின்றார் வள்ளலார்..

உலகத்தில் உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பை பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத் தக்க ஆன்ம இன்பத்தைக் காலம் உள்ள போதே அடையவேண்டும்...

இம்மை இன்ப வாழ்வு என்பது என்ன ?

நம்முடைய தேகத்தில் இரண்டு கரணங்கள் உண்டு அவை சிறிய கரணங்கள் பெரிய கரணங்கள்,என இரண்டு வகை உள்ளன.

மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,உள்ளம், என்ற ஐந்து வகை கருவிகள் உண்டு. அதற்கு கரணங்கள் என்று பெயர்..

நம்முடைய உடம்பில் வேலைக் கொடுப்பது ஒன்று,...வேலை வாங்குவது ஒன்று.

வேலை வாங்குவது பெரிய தேக கரணங்கள்,..வேலை செய்வது சிறிய தேக கரணங்கள்...இரண்டும் புறக் கண்களுக்குத் தெரியாது மின் காந்த அலைகள் போல் வேலைகளை ,உடனுக்குடன் வேலைகளை வாங்கும்,வேலைகளை செய்யும் கருவிகளாகும்..

கரணங்கள் சொல்லுவதைக் கேட்பது இந்திரியங்கள் என்னும் கருவிகள்.அதாவது கண்,காது,மூக்கு, வாய், உடம்பு என்னும் புறக் கருவிகள் வேலைகளை செய்யும்..

சிறிய தேக கரணங்கள் ஆணை இடுவதைக் கேட்டு இந்திரியங்கள் வேலை செய்வது இம்மை இன்ப வாழ்வு என்பதாகும்.

இம்மை இன்ப வாழ்வு !

அதைத்தான் வள்ளலார் சிறிய தேக காரணங்களைப் பெற்று சிறிய முயற்ச்சியால் சிறிய விடயங்களைச் சிலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை இம்மை இன்ப வாழ்வு என்கின்றார்..

இம்மை இன்ப லாபம் என்ன ?

இம்மை இன்ப லாபமானது ? மனிதப் பிறப்பில்,தேகத்திலும்,சிறிய கரணங்களிலும், புவனத்திலும்,,போகங்களிலும்,குறைவின்றி நல்ல அறிவு உடையவர்களாய்,பசி,பிணி,கொலை முதலிய தடைகள் இல்லாமல்,

உறவினர்,சிநேகிதர்,அயலார்,முதலிய யாவரும், மதிக்க சந்ததி விளங்கத் தக்க ,சற்குணம் உள்ள மனைவியோடு,சிறந்த வாழ்க்கையை சில நாள் அனுபவிக் கின்றதை இம்மை இன்ப லாபம் என்று அறிய வேண்டும்.

இம்மை இன்பத்தை அடைந்தவர் பெருமை எது ? என்று அறிய வேண்டும்..

அன்பு,தயவு,ஒழுக்கம்,அடக்கம்,பொறுமை,வாய்மை,
தூய்மை, முதலிய நற்குணங்களைப் பெற்று உலக இன்பங்களை வருந்தி முயன்று அனுபவித்துப் புகழ் பட வாழ்தல் என்று அறிய வேண்டும்.

மேலே கண்ட வாழ்க்கை வாழ்வது இம்மை இன்ப வாழ்வு,இம்மை இன்ப லாபம் என்பதாகும்.இதுதான் மனிதன் மனிதனாக வாழும் வாழ்க்கையாகும்,

இனி அடுத்து மறுமை இன்ப வாழ்வு,பேரின்ப வாழ்வு என்ன என்பதை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்,

ஆண்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக