கேள்வி பதில் விளக்க உரை !
கேள்வி பதில் விளக்க உரை !
நாம் அடைய வேண்டுவது எவை?
நாம் அடைய வேண்டுவது லாபம்
அவை ஆன்ம லாபமாக இருக்க வேண்டும் .
அவை ஆன்ம லாபமாக இருக்க வேண்டும் .
ஆன்ம லாபம் என்றால் என்ன ?
நம்முடைய உடம்பில் ஆன்மா என்னும் உள்ஒளி உள்ளது .அந்த ஆன்மா துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருப்பதே ஆன்ம லாபம் என்பதாகும் .
நம்முடைய உடம்பில் ஆன்மா என்னும் உள்ஒளி உள்ளது .அந்த ஆன்மா துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருப்பதே ஆன்ம லாபம் என்பதாகும் .
ஆன்மா எதனால் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கின்றது .?
ஆன்மாவிற்கு விருப்பம் இல்லாத செயல்களை செய்வதால் இன்பம் அடையாமல் துன்பம் அடைகின்றது .
விருப்பம் இல்லாத செயல்கள் என்றால் எவை?
நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் சாதி சமயம் மதம் சார்ந்த செயல்களாகவே இருக்கின்றது அதனால் கடவுளின் அருள் வெளிப்படுவது தடை உண்டாகிறது அதனால் துன்பம் உண்டாகின்றது .
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?
கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் என்ற உண்மை அறிவு விளங்க வேண்டும் .
உண்மை அறிவு விளங்கும் போது ஆன்மா மகிழ்ச்சி அடையும் .
உண்மை அறிவு விளங்க என்ன செய்ய வேண்டும் ?
ஜீவ காருண்யத்தை கடைபிடிக்க வேண்டும் .
ஜீவ காருண்யம் என்றால் என்ன ?
இறைவனால் படைக்க பட்ட ஜீவன் என்னும் உயிர்கள் அனைத்திற்கும் துன்பம் கொடுக்காமல் வாழ்வதே ஜீவ காருண்யம் என்பதாகும் .
மீண்டும் தொடரும்
அன்புடன் வாழ்த்துக்கள் ஈரோடு கதிர்வேல்
அன்புடன் வாழ்த்துக்கள் ஈரோடு கதிர்வேல்
நாம் அடைய வேண்டுவது எவை?
நாம் அடைய வேண்டுவது லாபம்
அவை ஆன்ம இன்ப லாபமாக இருக்க வேண்டும் .
ஆன்ம லாபம் என்றால் என்ன ?
நம்முடைய உடம்பில் ஆன்மா என்னும் உள்ஒளி உள்ளது .அந்த ஆன்மா துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருப்பதே ஆன்ம லாபம் என்பதாகும் .
ஆன்மா எதனால் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கின்றது .?
ஆன்மாவிற்கு விருப்பம் இல்லாத செயல்களை செய்வதால் இன்பம் அடையாமல் துன்பம் அடைகின்றது .
விருப்பம் இல்லாத செயல்கள் என்றால் எவை?
நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் சாதி சமயம் மதம் சார்ந்த செயல்களாகவே இருக்கின்றது அதனால் கடவுளின் அருள் வெளிப்படுவற்கு தடையாக உள்ளது .அதனால் துன்பம் உண்டாகின்றது .
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?
கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் என்ற உண்மை அறிவு விளங்க வேண்டும் .
உண்மை அறிவு விளங்கும் போது ஆன்மா மகிழ்ச்சி அடையும் .
உண்மை அறிவு விளங்க என்ன செய்ய வேண்டும் ?
ஜீவ காருண்யத்தை கடைபிடிக்க வேண்டும் .
ஜீவ காருண்யம் என்றால் என்ன ?
இறைவனால் படைக்க பட்ட ஜீவன் என்னும் உயிர்கள் அனைத்திற்கும் துன்பம் கொடுக்காமல் வாழ்வதே ஜீவ காருண்யம் என்பதாகும் .
ஜீவ காருண்யம் நாம் ஏன் செய்ய வேண்டும் ?
கடவுளின் அருளை ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் பெற வேண்டுமே அல்லது வேறு எந்த வழியாலும் பெற முடியாது .
கடவுளின் அருளை ஏன் பெற வேண்டும்.?
அருள் என்பது கடவுள் தயவு,அதாவது கடவுளின் இயற்கை விளக்கம் .அதேபோல் ஜீவ காருண்யம் என்பது ஜீவர்கள் தயவு,
ஜீவர்கள் என்பது உயிர் ...ஜீவர்கள் என்னும் உயிர்,அது
ஆன்ம இயற்கை விளக்கம் ,
அதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும்,இயற்கை விளக்கத்தைக் கொண்டு இயற்கை விளக்கத்தைப் பெறுதல் போலாகும்.,
வேறு ஒன்றினாலும் பெறக் கூடாது என்பது கடவுளின் ஆணையாகும்.
ஜீவ காருண்யம் செய்து வந்தால் அதன் அனுபவம் நமக்கே விளக்கமாக புரியும் அதற்கு அனுபவம் என்று பெயராகும்.
ஜீவ காருண்யத்தைக் கொண்டு அருளைப் பெறுவது நிலையானது .வேறு வழிகளால் அருளைப் பெற்றால் அது நிலைக்காமல் அழிந்துவிடும்.
அதனால்தான் வள்ளல்பெருமான் அருளைப் பெறுவதற்கு ஜீவ காருண்யமே சிறந்த வழி என்றார்.
மேலும் அதற்கு ஞான வழி என்றும்,சுத்த சன்மார்க்கம் என்றும்,ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றும் தெளிவாக விளக்கி உள்ளார் ...
ஜீவ காருண்யம் இல்லாமல் செய்யும் செய்கைகள் அனைத்தும் ,அஞ்ஞான வழி என்றும்,துன்மார்க்கம் என்றும்,அதனால் அழிவு சீக்கிரம் உண்டாகும் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறிவு எப்படி விளங்கும்.?
ஜீவ காருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்.அதனால் உபகார சக்தி விளங்கும்,அந்த உபகார சக்தியால்
எல்லா நன்மைகளும் எல்லா லாபங்களும் விளங்கும்.
ஆதலால் புண்ணியம் என்பது ஜீவ காருண்யம் ஒன்றே என்றும்,
பாவம் என்பது -ஜீவ காருண்யம் இல்லாமை ஒன்றே என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்பம் லாபம் !
ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் (அருள் ) என்றும்,ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும்,அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்.
அந்த விளக்கத்தையும்,இன்பத்தையும், பலகால் கண்டு அனுபவித்துப் பூர்த்தி அடைந்த சாத்தியர்களே ஜீவன் முத்தர் என்றும்,அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறியவேண்டும் என்று சத்தியம் வைத்து வள்ளலார் சொல்லுகின்றார்.
கடவுள் மயம் என்றால் என்ன ?
மீண்டும் தொடர்வோம் சிந்திப்போம்.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,,,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு