அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 17 பிப்ரவரி, 2016

காதல் செய்யுங்கள் !

காதல் செய்யுங்கள் !




காதல் செய்து திருமணம் செய்தால் மட்டுமே சாதி ,மத,சமயங்களை  ஒழிக்க முடியும்.

சட்டத்தாலோ.திட்டத்தாலோ,பேச்சாலோ சாதியை ஒழிக்க முடியாது.

உலகத்தில் மனித நேயம்,ஆனமநேயம்,இல்லாமல் போனதற்கு அடிப்படைக் காரணம்.சாதி,மதம், சமயங்களின்,கொள்கைகள் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு ஆணோ பெண்ணோ,மனம் விரும்பி ,பேசிப்பழகி,அன்பை பகிர்ந்து திருமணம் செய்யும் அளவிற்கு வந்து விடுகிறார்கள்.அவர்களின் அன்பை,காதலை,நேசத்தை தடுத்து நிறுத்துவது, சாதி,சமயம்,மதம் என்ற புழுத்துப் போன பழைய சாதியின், வெறித்தனமான பழக்க வழக்கங்கள்.காரண காரியமாக இருக்கின்றன.

ஆண் பெண் காதல் கொள்வது சாதாரணமாக நிகழ்ந்து விடாது.

ஒரு பெண்ணும் ஆணும், நெருங்கிப் பழகும் போதுதான் அது அன்பாக மாற்றம் அடைகின்றது,அடுத்து அன்பு காதலாக மாறுகின்றது,அடுத்து காதல் பாசமாக மாற்றம் அடைகின்றது ,அடுத்து பாசம், ஆசையாக மாற்றம் அடைகின்றது,அடுத்து ஆசை மோகமாக மாற்றம் அடைகின்றது,அடுத்து மோகம் காமமாக மாற்றம் அடைகின்றது.காமம்வெகுளியாக மாற்றம் அடைகின்றது.

காமம்,வெகுளி இரண்டும் அதிகமாக மாற்றம் அடைகின்றபோது,உடல் உறவு கொள்ளும் நிலை உண்டாகின்றது.

திருமணம் நடக்கின்ற வரையில் உடல் உறவு கொள்ளக் கூடாது.

வீட்டில் எந்த எதிர்ப்பு வந்தாலும் திருமணம்.செய்து கொண்டு வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

தனித்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு படிப்பிற்குக் தகுந்த வேலையைத் தேடிக் கொள்ளவேண்டும்.

வீட்டில் உள்ள தாய் தந்தையர் பெரியவர்கள் முன் பின தெரியாத அறிமுகம் இல்லாத யாரோ ஒருவரை,ஒருவளைப் பார்த்து ஆண்,பெண்,விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைப்பது,அவ்வளவு சிறந்த வாழ்க்கையாக இருக்காது.அமையாது.

எதோ ஒன்று திருப்தியாக இருக்கும் மற்றவை எல்லாம் வாழ்நாள் முழுவதும் திருப்தி இல்லாமல் வாழும் வாழ்க்கையாக  அமைந்துவிடுகின்றது.

எனவே காதலை வரவேற்பதும் காதலித்தவர்களை சேர்த்து வைத்தும் திருமணம் செய்து வைப்பதும் சாலத் திறந்தது.

காதலை வரவேற்று குழந்தைகளை மதித்து பெரியவர்கள் மற்றும் அப்பா, அம்மா, அவர்கள் விருப்பபடி திருமணம் செய்து வைத்தால் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்,

காதலுக்கு சாதி மதம் தடை இல்லை,அன்பு தான் காதலுக்கு ஆணிவேர்..அந்த வேரை பிடுங்காமல் வளர விடவேண்டும்.அது நன்றாகவே வளரும்.அதன் பலனை அனைவரும் பகிர்ந்துகொள்ளலாம்.

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி,

சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி

என்று வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் இறைவன் படைப்பில் சாதி,மதம் சமயம் என்ற வேறுபாடுகள் கிடையாது.

காதலுக்கு இறைவன் தடை இல்லை.

உலகில் உள்ள சாதி மதவாதிகள்,சமயவாதிகள் எல்லாம் மனிதர்களை மனிதர்களே பிரித்து வைத்து விட்டார்கள்.எனவே காதலுக்கு சாதி,மதம்,சமயம் தடையாக இருக்கின்றது..

தடையை உடைத்து எறியுங்கள்.

வருங்கால இளைஞர்கள் மனம் ஒத்த அன்பினால் காதல் செய்யுங்கள்,திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மற்றவர்களுக்கு நல் வழிக் காட்டுங்கள்..

சமுதாயத்தில் வேறு ஊன்றி போன சாதியை,மதத்தை,சமயத்தை ஒழிக்க காதல் திருமணம் ஒன்றே சிறந்த ஒரே வழியாகும்.

வாழ்க காதல் ,வளர்க சமுதாயம் !

அன்புடன் ஆனமநேயன் ஈரோடு கதிர்வேல்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக