24-1-2016...அன்று வடலூரில் தைப்பூசம் !
தைப்பூசம் என்பது சைவ ஆலயங்களில் உருவ வழிப்பாட்டு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
எல்லா வழிபாடுகளையும் விட ''வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்'' மிகவும் சிறப்பு உடையது.ஏன் என்றால் தத்துவங்களைக் கடந்தது ....
பூசம் என்பது நிறைவு என்பதாகும்,அறிவும் அருளும் பூரணமாக நிறைந்த நாளாகும்
உடம்பும்,உயிரும்,ஆன்மாவும் அறிவும் அருளும் ஆண்டவரும் ஒன்றாக இணையும் நாளாகும்
உடம்பில் தனித்தனியாக இயங்கிக் கொண்டு இருந்த ஒளிகள்.அதற்கு துணையாக இருந்த ஏழுவகையான அணுக்கள், அனைத்தும் ஒன்றாக இணைந்து பூரண மாகி ஒரே அருள் ஒளியாக மாற்றம் அடைவதே பூசம் என்பதாகும்.
அதற்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும்.மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.முத்தேக சித்தி என்பதாகும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.
அதேபோல் உலகில் உள்ள உயிர்களுக்கு ஒளி அலைகளைத் தந்து கொண்டு இருப்பது அக்கினி ,சூரியன் ,சந்திரன்,நட்சத்திரங்கள்,என்ற ஒளிகளாகும்
இவைகள் அனைத்தும் படைக்கப் பட்ட ஒளிகளாகும்,அவற்றைப் படைத்தவர் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் நிறைந்த பேரோளியாகும்.
இந்த ஒளிகள் அனைத்தும் தங்களைப் படைத்த அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்கும் நாளே தைப்பூச நாளாகும்.
வருடத்திற்கு ஒருமுறை எல்லா ஒளிகளுக்கும் ஒய்வு கொடுக்கும் நாளாகும் அன்று இரவு 12,மணிக்கு எல்லா ஒளிகளும் பூரணமாக விலகாமல் தற்சுதந்திரம் இல்லாமல் அருட் சுதந்திரம் பெற்றுக் கொள்ளும் நாளாகும் அதுவே தைப்பூசம் என்பதாகும்.
அந்த நன்னாளில் எல்லா ஒளிகளையும் ஒரே நேரத்தில் ஒரே நேர் கோட்டில் காணலாம் .அவைகளை அனைத்தையும் ஒரே இடத்தில் காணும் இடம் தான் வடலூர் ஜோதி தரிசனமாகும்.
''வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலக மக்களுக்கு தெரியப் படுத்திய தினம் தைப்பூசம் நாளாகும்''.
மனித தேகத்தை பெற்றுக் கொண்ட உயர்ந்த அறிவுள்ள ஆன்மாக்களாகிய நாம் நம் உள்ளே உள் ஒளியில் (ஆன்மாவில ) விளங்கும் பேரருளை பெற்று கடவுள் பிரகாசமாகிய பூரண அருள் ஒளியைப் பெற்று அந்த அருள் ஒளி மயமாக விளக்கம் பெற்று கொளவதற்கு ஏற்ற நாளாக ''தைப்பூச நன்னாள்'' அருட்பெருஞ்ஜோதி என்னும் இயற்கையால் அமைக்கப் பட்டுள்ளது
திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் திருவாக்கின் படி 30-01-1874,அன்று இரவு 12-00,மணியளவில் இந்த உலகம் அறிய அருட்பெருஞ்ஜோதி ஆகிய உண்மைக் கடவுள்,வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் சித்தி வளாக திருஅறையில் ...(வள்ளல்பெருமான் அமர்ந்துள்ள திருஅறையில்).. வள்ளல்பெருமானுக்கு தன்னுடைய அருள் உருவைக் காட்டி ..தக்கத் தருணத்தில் சுத்த ,பிரணவ ,ஞான தேகத்தை கொடுத்து ,ஐந்தொழில் வல்லபத்தை கொடுத்த நாள்தான் தைப்பூச திருநாளாகும்.
அந்த அழிவு படாத முத்தேக சித்தியைப் பெற்று கொண்டதன் அடையாளமாகத் தான் வள்ளல்பெருமான் அவர்கள் திருகாப்பிட்டுக் கொண்ட தினம் தைப்பூச நாளாகும்.
வல்லபெருமான் பதிவு செய்துள்ள அருட்பாடல் ;--
என்சாமி எனது துரை என்னுயிர் நாயகமே
இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது
பேர் உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி உடைய பெரிய தவத்தாலே நான்தான்
சாற்றுகின்றேன் அறிந்தது இது சத்தியஞ் சத்தியமே
மின்சாரும் இடைமடவாய் என் மொழி நின் தனக்கே
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே !
என்று மக்களுக்குத் தெளிவாக விளக்கி உள்ளார் ...
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இந்த உலகத்திற்கு வரவழைத்த நாள்தான் தைப்பூசத் திருநாளாகும்...
உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை வழிபடும் நாள்தான் தைப்பூசத் திருநாளாகும்.
வள்ளல்பெருமானுக்கு அழியாத் தேகம் கொடுத்த நாள்தான் தைப்பூசத் திருநாளாகும்.
வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் ;---
காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாத விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே!
மேலே கண்ட பாடல் வாயிலாக மரணத்தை வென்று .என்றும் அழியாத, எதனாலும் அழிக்க முடியாத தேகத்தைப் பெற்றேன் .இறைவன் எனக்கு விரைந்து வந்து அருளினார் ..உங்களுக்கும் அருள்வார் .வாருங்கள் என ஆன்மநேயத்துடன் மக்களை வடலூருக்கு அழைக்கின்றார்.
எனவே தான் தைப்பூசம் காணத் தவறாதீர்கள் என்று வள்ளல்பெருமான் உலக மக்களுக்கு கட்டளை இடுகின்றார்.
வடலூரில் தைப்பூசம் அன்று ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் கண்டு வழிபடுவதே சிறந்த வழிபாடாகும் .அவை உருவ தத்துவங்களை கடந்த உண்மையான அருட்பெருஞ்ஜோதிஆண்டவரின் அருள் வழிபாடாகும்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரடியாக காட்சிக் கொடுக்கும் நாள்தான் வடலூர் தைப்பூச ஜோதி தரிசனமாகும்.
வந்து வந்து தரிசிக்க பெருவீர்களானால் ...எல்லோருக்கும் ,தாய்,தந்தை,ஆண்ணன்,தம்பி,உற்றார் உறவினர்கள் முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ ,
அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமான உதவி கொடுக்கும் படியான இடம் ,,,வடலூர் ஜோதி தரிசனம்... ..வள்ளல்பெருமான் சித்திப் பெற்ற சித்திவளாகத் திருஅறை தரிசனம், இவைகள் இரண்டும் மிகவும் முக்கியமானதாகும் ..
வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே ..
என்று உலக மாந்தர்களை வடலூருக்கு அழைக்கின்றார் வள்ளல்பெருமான் .
வடலூர் செல்வோம் அருளைப் பெறுவோம் மரணத்தை வெல்வோம் ...
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக