அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 2 டிசம்பர், 2015

பெருமழைப் பெய்யக் காரணம் !

பெருமழைப்  பெய்யக் காரணம் !

ஆன்மாவானது  இவ்வுலகில் உயிர் எடுத்து, உடம்பு எடுத்து வாழ்வதற்காகவே  இறைவன் ஐந்து பூதங்களான மண்,நீர், அக்கினி, காற்று,ஆகாயம் போன்ற கருவிகள் படைக்கப் பட்டு உள்ளன்..

அந்த ஐந்து பூதங்களிலும்,ஐந்தும் கலவையாக உள்ளன.,

ஒவ்வொரு பூதங்களிலும் ஐந்தில் நான்கு பாகம் அதன் தன்மையும், மீதி உள்ள  ஒருபாகத்தில்  நான்கும் கலவையாக உள்ளன .

ஒவ்வொரு பூதங்களிலும் எவ்வளவு குறைவு உண்டாகிறதோ அதை சரி செய்வது .இயற்கையின் சட்டம்.

ஒவ்வொரு பூதமும் கூடவும்,குறையவும் மனிதனே காரண காரியமாக உள்ளான்.

காரணம் !

மண்ணில் கலந்து இருக்கும் தண்ணீர் மட்டம் குறைந்து விட்டது .எங்கு பார்த்தாலும் ஆழ் குழாய் கிணறுகள் போட்டு பூமியில் உள்ள தண்ணீர் வெளியே எடுத்து விட்டார்கள்..பூமியில் சுரங்கங்கள் தோண்டி ஆழப் படுத்தி விட்டார்கள்.மேலும் சுரங்கங்கள் தோண்டி அணுக்களை உடைத்து மின்சாரம் போன்ற சக்தியை உருவாக்கி உள்ளார்கள்.

மேலும் தண்ணீரை தேவை இல்லாமல் விரையம் செய்து விட்டார்கள்.

எனவே பூமியில் உள்ள தண்ணீரின்  அளவு குறைந்து விட்டன .

இறைவன் சட்டப்படி ஐந்து பூதங்களின் கலவை சரியாக இருக்க வேண்டும்.எது குறைகின்றதோ அதை சரி செய்ய வேண்டியது இயற்கையின் செயலாகும்..இயற்கையின் சட்டமாகும் .

பூமிக்குள் தண்ணீர் குறைந்து விட்டதால் அதை சரி செய்ய இதுபோன்ற பெரு மழை பெய்துதான் சரி செய்யப்படும்..

மேலும் மனிதர்களுக்கு மட்டும் அல்ல மழை .தாவரங்கள் முதல் அனைத்து உயிர்களுக்கும் மழை வேண்டியது அவசியம்.

எனவே மக்கள் ஐந்து பூதங்களை முறையாக பயன் படுத்த வேண்டும்.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகும் என்பது போலாகிவிடும்

தண்ணீர் மட்டும் அல்ல .மண்,அக்கினி காற்று ஆகாயம் அனைத்தும் மக்கள் அளவுக்கு மீறி பயன் படுத்தினால் இதுபோன்ற அழிவுக்கு காரண காரிய மாகிவிடும்.

ஐந்து பூதங்களில் எது குறைந்தாலும் அதை சரி செய்ய வேண்டியது இயற்கையின் சட்டமாகும்.

மனிதர்கள் அறிவு இருந்தும் பஞ்ச பூதங்களின் செயல்பாட்டை புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக இருக்கின்றார்கள்.அதனால் அதை எதிர்த்து போராட முடியாமல் அதில் சிக்கித் தவித்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

மழையினால் மட்டும் அழிவு என்பது அல்ல ஐந்து பூதங்களாலும் அழிவு உண்டு .

ஐந்து பூதங்களுக்கும் அழிக்க வேண்டும் என்ற குணம் கிடையாது .

அது அது அதன் அதன் வேலைகளை முறையாக சரியாக செய்து கொண்டு உள்ளது.

மனிதன் தான் வாழும் வழி தெரியாமல்,வாழும் இடம் தெரியாமல் வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளான்.

எனவே மனிதன் அழிவதற்கு மழையின் குற்றம் அல்ல ..மனிதர்களின் குற்றமாகும் குற்றமே ...மழையின் குற்றமோ,ஐம் பூதங்களின் குற்றமோ அல்ல .

மழை தங்க வேண்டிய இடத்தில் மனிதன் தங்கினால் என்னவாகும்.துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,மரணம் போன்ற துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.

மேலு மழை நீர் தங்கும் இடத்தில் வீடுகளும்,ரோடுகளும்,தொழிற் சாலைகளும் கட்டி விட்டதால் மழை நீர் பூமிக்குள் செல்லாமல் வடியாமல் மேலே நின்று கொண்டு உள்ளது.

இதுவெல்லாம் யார் குற்றம்,மழையின் குற்றமா ?மனிதர்களின் குற்றமா ?

மழை நீர் தங்கும் இடமான .குளங்கள் குட்டைகள் ,ஏரிகள் வாய்க்கால்கள் ,ஆறுகள்,நதிகள்,கடல்கள் ,எல்லாம் அடைத்து விட்டு ,மனிதர்கள் வாழ்ந்து கொண்டு உள்ளது யார் குற்றம் ? மழையின் குற்றமா ? மனிதர்களின் குற்றமா ?

மேலும் மக்கள் எங்கு பார்த்தாலும் அணு ஆராய்ச்சி என்ற பெயரால் அணுக்களை உடைத்து ,மின்சாரம்,அணு ஆயுதங்கள்,அணு மின் சாதனங்கள் போன்ற கருவிகளை தயார் செய்கின்றார்கள் ,

அதனாலும் மனிதர்கள் ஆபத்தினால் அழிந்து போவார்கள்.

எனவே இவ் உலகில் அணுக்கள் குறைகின்ற போது அதே அணுக்களால் மக்கள் அழிந்து போவார்கள் .

காற்று குறைந்தால் காற்றால் அழிந்து போவார்கள்.

வெப்பம் குறைந்தால் வெப்பத்தால் அழிந்து போவார்கள்.

மண் குறைந்தால் மண்ணால் அழிந்து போவார்கள்.

தண்ணீர் குறைந்தால் தண்ணீரால் அழிந்து போவார்கள்.

ஆகாயம் ( விண்)

ஐந்து பூதங்களிலே பெரிய பூதம்  ஆகாயம்.... ஐந்து பூதங்களையும் ஆகாயம் சுமந்து கொண்டு உள்ளது .
ஆகாயத்தையும் ஐந்து பூதங்களையும் அருட்பெருஞ்ஜோதியின் அணு சக்தி என்னும் அணு துகள்களால் , ஆற்றலால் அருளால் சுழல வைத்துக் கொண்டு உள்ளது.என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் தன்னை உணர்ந்து ,தன் தலைவன் யார் என்பதை உணர்ந்து வாழும் வகை தெரியாமல் ,மனிதன் மனிதனாக வாழாமல்,மனிதன்  ஒழுக்கம் தவறி , தவறான செயல்களில் ஈடுபட்டால் இதுபோன்ற இயற்கை அசம்பாவிதங்களை,ஆபத்துக்கள்  எதிர் கொள்ள வேண்டியது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

எனவே நாம் பஞ்ச பூதங்களுக்கு எதிரான வாழ்க்கை வாழக் கூடாது.

அணுக்கள் முதல் உயிர்கள் எல்லாம் பஞ்ச பூத அணுக்கள் யாவும் இறைவனால்  படைக்கப் பட்டது .ஆதலால் அணுக்களையும் உயிர்களையும் நேசிக்க வேண்டும்.

இனிமேலாவது வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றி வாழ வேண்டியது மனிதர்களின் முக்கிய கடமையாகும்.

வள்ளலார் தெளிவாக மக்களுக்கு வாழும் வழியைக் காட்டி உள்ளார் .வள்ளலார் காட்டிய வழியைப் பின்பற்றி வாழாமல் வாழ்பவர்களுக்கு துன்பம் நிறைந்த வாழ்க்கையே வந்து சேரும்.

இறைவன் படைத்த உலகில் வாழவேண்டும் என்றால் இயற்கைக்கு விரோதம் இல்லாமல் வாழ வேண்டும்.

துன்பம் வரும் போது இறைவனை நினைக்கின்றோம், வழிபடுகின்றோம்,ஆனால் இறைவன் சொல்லியபடி,இயற்கைச் சட்டப்படி  வாழத் தவறி விடுகின்றோம்.

வள்ளலார் பதிவு செய்துள்ளது ;--

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !

யாரே என்னினும் இறங்கு கின்றார்க்கு
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே !

பொய் நெறி அனைத்தினும் புகுதாது எனை அருட்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே !

கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே !

உயிர் எலாம் பொதுவில் உளம் பட நோக்குக
செயிரெலாம் விடுக எனச் செப்பிய சிவமே !

மனிதன் எந்த உயிர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்தால், நமக்குத் துன்பம் வராமல் இறைவன் நம்மைப் பாது காத்துக் கொள்வார்....இயற்கையானது நமக்கு துன்பம் தராமல் ஒதுங்கி விடும்.நாம் ஆபத்து இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம் .

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்வதற்காகவும் வழிக் காட்டவும்,வந்தவர்தான் வள்ளல்பெருமான்.மேலும் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை வாழ்ந்தும் காட்டி உள்ளார்

 அகம் கருத்து ,புரம் வெளுத்து வாழும் உலக மக்களைத்  திருத்தவே  இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளல்பெருமான்.

இறைவன் படைத்த உயிர்களைக் காப்பாற்றவே இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளல்பெருமான் .

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கப் பாதையைப்  பின்பற்றி வாழ்ந்தால் மனிதர்கள் எக்காலத்திலும் துன்பம், துயரம்,அச்சம்,பயம்,மரணம் இல்லாமல் புனிதர்களாக வாழலாம் ..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக