அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 8 டிசம்பர், 2015

வள்ளலார் சொல்லிய ஜீவ காருண்யத்தைக் கிண்டல் செய்தார்கள் ! செய்பவர்கள்.!

வள்ளலார் சொல்லிய ஜீவ காருண்யத்தைக் கிண்டல் செய்தார்கள் ! செய்பவர்கள்.!



வள்ளலார் ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார் .

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார்.

முதலில் பசித்தவர்களுக்கு உணவு போடுங்கள் என்று சன்மார்க்கிகளுக்கு கட்டளை இட்டார் .அவர் கொள்கைகளை  ,வார்த்ததகளை சிரமேற்க் கொண்டு பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகின்றார்கள் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள்.

அதற்கு சில அன்பர்கள், சன்மார்க்கிகள் சோறுபோட்டு நாட்டில் ,மக்களை சோம்பேறியாக மாற்றி விட்டார்கள் என்று கேலியும் கிண்டலும் பேசினார்கள், பேசிய மனிதர்கள்..

இன்று வீடு இருந்தும் .பொருள் இருந்தும்,வசதிகள் இருந்தும்,வாகனங்கள் இருந்தும் மனைவி மக்கள் இருந்தும் உணவுக்கு வழி இல்லாமல் மழை வெள்ளத்தில் தவிக்கின்றார்கள் .

இது வெந்த புண்ணில் வேல் பாச்சுவது இல்லை,இனிமேலும் நல்லோர் மனதை நடுங்க செய்யக் கூடாது என்பதற்காக இதைச்சொல்ல வேண்டி உள்ளது.

ஒரு வேலைக்கு உணவு கிடைக்குமா ? என்று அனைவரும் ஏழைகளாய் கை ஏய்ந்தி கண்ணீர் மல்கும் காட்சியைக் காண்கின்றோம்.

பசி உள்ளவர்கள் அனைவருமே ஏழைகள் !

பசி உள்ளவன் அனைவருமே ஏழைகள் என்றார் வள்ளல்பெருமான்.பசிக்கு ,ஏழை,பணக்காரன் என்ற பேதம் தெரியாது.

எனவேதான்  .பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்குகள் என்றார் வள்ளலார்

பணம் உள்ளவன் பணக்காரன்  ,பணம் இல்லாதவன் ஏழை என்பது அல்ல !

பசி உள்ளவன் அனைவருமே ஏழைகள் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

பசி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் சாதி,சமயம்,மதம்,இனம்,மொழி,நாடு என்ற பேதம் இல்லாமல் உணவு அளிக்க வேண்டும் என்றார் வள்ளல்பெருமான்.

பசி உள்ளவர்களின் பசியை அறிந்து பசியைப் போக்கு கின்றவர்களுக்கு,எந்தவிதமான ஆபத்துகளும்,எக்காலத்தும் வராது என்றார் வள்ளல்பெருமான்..

இயற்கையின் செயல் பாட்டால் பசியை உணரும் காலம் இப்போது மக்களுக்கு வந்து விட்டது .

கடவுளால் பசியைப் போக்க முடியாது !

மனிதர்கள் மூலமாகத்தான் கடவுள் பசியைப் போக்குவார் !

பசியைப் போக்கு கின்றவர்களின் லாபம் என்ன ?

சூலை,குன்மம்,குஷ்டம்,முதலிய தீராத வியாதியால் வருந்துகின்ற குடும்பத்தில் உள்ளவர்கள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசியாற்று விப்பதே விரதமாக அனுசரிப்பார்களே ஆனால் அந்த ஜீவ காருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து விசேஷ சவுக்கியத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை .

மேலும்,

பலநாள் குழந்தை இல்லாமல் பலபல விரதங்களை செய்து வருந்துகின்றவர்கள் தங்கள் தரத்திற்கு தக்கபடி பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்குவதை விதமாக கொண்டால் அறிவுள்ள குழந்தை பிறக்கும் என்பது உண்மை ,

மேலும்,

அற்ப வயது என்று குறிப்பினால் அறிந்து இறந்து போய் விடுவார்கள் என்று அஞ்சி விசாரப்படுகின்ற ,குடும்பத்தினர் .ஏழைகளின் பசியைப் போக்கினால் மரணம் வராமல் காப்பாற்ற படும் என்பது உண்மையாகும்,

மேலும்,கல்வி, அறிவு,செல்வம் போகம்,முதலி யவகைகளை குறித்து வருந்துகின்றவர்கள் .தங்கள் தரத்திற்கு தகுந்தவாறு ஏழைகளின் பசியைப் போக்கினால் ,அந்த ஜீவ காருண்ய அனுசரிப்பு,கல்வி,அறிவு,செல்வம்,போக, முதலான வகைகளை உண்டுபண்ணும் என்பது உண்மையாகும்,

மேலும் முக்கியமானது !

பசித்தவர்களுக்கு பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட ஜீவ காருண்யம் உள்ளவர்களுக்கு,

கோடையில் வெயிலும் வருந்தாது,

மண்ணும் சூடு செய்யாது.

பெரு மழை,பெருங் காற்று,பெரும்பனி பேரிடி,பெருநெருப்பு, முதலிய உற்பாதங்கள் இயற்கை யினால் துன்பம் செய்விக்காது.

மேலும் விஷக் காற்று,விடுசிகை,விஷசுரம்,முதலிய அஜாக்கிரதைப் பிணிகளும் உண்டாகாது.

அந்த ஜீவ காருண்யம் உள்ள சமுசாரிகள்,ஆற்று வெள்ளத்தாலும்,திருடர்களாலும், விரோதிகளாலும்,கலக்கப் (கவலை ) படமாட்டார்கள்,

மேலும் அரசர் களாலும்,தெய்வங் களாலும்,அவமதிக்க மாட்டார்கள்,

மேலும் ஜீவ காருண்யம் உள்ளவர்களின் விளை நிலத்தில் பிரயாசை இல்லாமலே விளைவு மேன்மேல் உண்டாகும்,

வியாபாரத்தில் தடை இல்லாமல்,லாபங்களும்,,, உத்தியோகத்தில் கெடுதி இல்லாமலும்,மென்மேலும் நன்மையே உண்டாகும்,

சுற்றங்களாலும்,அடிமைகளாலும்,சூழப் படுவார்கள்,

துஷ்ட மிருகங்களாலும்,துஷ்ட ஜெந்துக்களாலும் ,துஷ்டப் பிசாசுகளாலும்,,துஷ்ட தெய்வங்களாலும்,பயஞ் செய்யப்பட மாட்டார்கள்,

மேலும் ஜீவ காருண்யம் உள்ள குடும்பத்தினருக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையாலும்,ஊழ் வகையாலும்,சத்தியமாக வராது என்று வள்ளல்பெருமான மிகத் தெளிவாக ஜீவ காருண்ய ஒழுக்கத்தில் தெரியப்படுத்தி உள்ளார்.

பசிப்பிணியைப் போக்குவது மனிதர் களாக பிறந்த அனைத்து தரப்பினர்களுக்கும் பொதுவானது .என்பதை உணர்ந்து உயிர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்கினால் ,

எந்த ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றப் படுவார்கள்.

இப்போது வந்துள்ள தொடர் பெருமழை போல் மீண்டும் எப்போது வந்தாலும் ஜீவ காருண்யம் செய்து கொண்டு இருந்தால் அவர்களின் உயிர் ,உடமைகள்,சுற்றம், குடும்பம் குழந்தைகள் யாவும்  நிச்சயம் காப்பாற்றப் படும்.இது சத்தியம்,உண்மை .

இனிமேல் வள்ளல்பெருமான் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையைப் பின் பற்றினால் மட்டுமே .துன்பங்களில் இருந்து காப்பாற்றப் படுவீர்கள்.வேறு வழியே இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பசித்தவர்களுக்கு உணவு வழங்குங்கள் ,உயிர்களை கொன்று உணவாக கொள்ளாதீர்கள்,உயிர் இரக்கம் கொள்ளுங்கள் உங்களின் உயிர் உடமைகள் காப்பாற்றப்படும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்,
போன் ;--9865939896,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக