அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 15 டிசம்பர், 2015

உலகில் உள்ளது எவருக்கும் சொந்தம் கிடையாது !

உலகில் உள்ளது எவருக்கும் சொந்தம் கிடையாது !

இங்கு இந்த உலகில்  நாம் வாழ்வதற்காக அனைத்தும் இறைவனால் படைக்கப் பட்டு உள்ளது.

எல்லா உயிர்களும் இன்பமுடன் வாழ வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம், இறைவனின்  கொள்கை, இறைவனின் சட்டம்.

இறைவன் சட்டத்தை மீறி சொத்து சேர்த்து வைப்போதோ ,பொருள்களை சேர்த்து வைப்போதோ ,மனைவி இருக்க வேறு பெண்களைத் தேடுவதோ இயற்கைச் சட்டப்படி தவறான செயல்களாகும் .

உங்களுக்கு மரண வருகின்ற போது நீங்கள் நேசித்த நிலமோ,பொருளோ,பெண்ணோ எதையும் நீங்கள் எடுத்த செல்ல முடியாது...ஏன் எதனால் என்று அறிவுள்ள மனிதர்கள் சிந்தித்தால் உண்மைகள் தெளிவாகும்.

உங்களின் சொந்தம் என்றும் சொல்லும்  பூமியோ,பொருளோ,பெண்ணோ எதுவாக இருந்தாலும் மரணம் வருகின்ற போது எதையும் எடுத்து செல்ல முடியாது, அதற்கு அனுமதிக் கிடையாது.

நீங்கள் வைத்திருந்த அனைத்தும் இறைனிடம் இருந்து திருடியது என்பது இறைவனுக்குத் தெரியும். இறைவனிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

எனவே நீங்கள் திருடியதை எவ்வளவு காலம் மறைத்து வைத்து இருந்தாலும் மரணம் வருகின்றபோது நீங்கள் அனைத்தையும் விட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் .

எனவே நீங்கள் கொள்ளை அடித்து சேர்த்து வைப்பது உங்களுடையது அல்ல இறைவனுடையது என்பதை புரிந்து கொண்டால் எவரும் கொள்ளை அடித்து சேர்த்து வைக்க மாட்டார்கள்.

உங்களின் வாரிசுளுக்காக சேர்த்து வைப்பது என்பது பெரிய முட்டாள் தனமாகும்,நீங்கள் மரணம் அடைந்து விட்டப்பிறகு உங்கள் வாரிசுகள் யார் ? என்பதே உங்களுக்குத் தெரியாது.நீங்கள் யார் ? என்பதே உங்களுக்குத் தெரியாது.

உங்கள் வாரிசுகளும் அவற்றை அழிக்காமல் மறைத்து வைக்க முடியாது .அவர்களும் அதை அனுபவிக்க முடியாது.உலகில் உள்ளது யாவும் கை மாறிக் கொண்டே இருக்கும்.உருவம் மாறிக் கொண்டே இருக்கும்.

எனவே அறிவுள்ள மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது ;-- அழிந்து போகும் பொருளை விரும்பாமல்,தேவை இல்லாமல் பொருள்களை சேர்த்து வைக்காமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

உங்களிடம் உள்ளப் பொருள்களை, பொருள் இல்லாமல் துன்பப் படும் ஜீவன்களுக்கு,அதாவது உயிர்களுக்கு ... உங்களிடம் தேவை இல்லாமல் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களை வாரி வழங்குங்கள்,அப்போதுதான்  உங்களுக்கு இறைவன் நன்மையைச் செய்வார் /

இறைவன் என்ன ? நன்மையை செய்வார் என்றால் ? அழியும் பொருளை விட்டு விட்டால் அழியாப் பொருளான ''அருளை '' வழங்குவார் .

அருள் என்பது என்றும் அழியாதது .ஏன் என்றால் இறைவன் உங்களுக்கு அன்பினால் கொடுப்பது .

இறைவன் அன்பினால் கொடுக்கும் ''அருள்'' ஒன்றுதான் மனிதர்களுக்கு சொந்தமானது அவர்கொடுத்த ''அருளை'' அவர் திரும்ப பெற மாட்டார் .

அந்த ''அருள்தான்'' உங்கள் உடம்பையும்,உயிரையும், என்றும் அழியாமல்,மரணம் வராமல் பாது காக்கும் கருவியாகும்.

எனவே மனிதர்களாகிய நாம் அழிந்து போகும் பொருள்மீது பற்று வைக்காமல் ,என்றும் அழியாமல் இன்பமுடன் நம்மை வாழ வைக்கும் அருளைத் தேடவேண்டும்.

பொருளைத் தேடுவதற்கு அலைந்து அலைந்து தேடுகின்றீர்கள் .அதேபோல் அருளைத் தேடுவதற்கு அலைந்து அலைந்து தேடுங்கள் .உங்கள் மீது கருணைக் காட்டி இறைவன் அருளை வழங்குவார்.

பொருள் புறம் என்னும் வெளியில் உள்ளது,அருள் அகத்தில் அகம் என்னும் ஆன்மாவில் உள்ளது,

உங்களிடம் உள்ள அழியாத அருளைத் தேடாமல் ,புறத்தில் அழிந்து போகும் பொருளைத் தேடுவது இறைவன் சட்டப்படி குற்றமாகும்.

பொருளை அருளாக மாற்றும் வழியைக் காட்டியவர் வள்ளலார்.

அதற்குப் பெயர்தான் ஜீவ காருண்யமே போட்ச வீட்டின் திறவு கோள் என்றார்.

உங்களிடம் உள்ளப் பொருள்களை ஏழை எளிவர்களுக்கு வாரி வழங்குகின்ற போது அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்,அந்த மகிழ்ச்சி ஆன்மாவில் இருந்து தோன்றுகின்றது.அதனால் அதற்கு ஆன்ம மகிழ்ச்சி என்று பெயராகும் .

அந்த ஆன்ம மகிழ்ச்சி..ஆன்ம நெகிழ்ச்சியாக மாற்றம் அடைந்து உங்களின் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்கும் வல்லபம் உடையது .''அதற்கு மோட்ச வீட்டின் திறவு கோள்'' என்று வள்ளல்பெருமான் பெயர் வைத்தார்.

அந்த திறவுகோளைக் கொண்டு தான் .நம்முடைய ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் கதவு என்னும் அசுத்த மாயா திரைகளை நீக்க முடியும், கதவைத் திறந்துதான் உள்ளே இருக்கும், நமக்கு சொந்தமான அருளைப் பெற வேண்டும் .பெற முடியும் என்றார் .

அந்த அருளை அனுபவிப்பது தான் பேரின்ப வாழ்வு என்பதாகும்.

எனவே நமக்கு சொந்தம் இல்லாத பொருளைத் தேடிப் பிடித்து, அலைந்து திரிந்து கொண்டு வந்து பதுக்கி வைத்து கொண்டு  அழிந்து போகாமல்,  நமக்கு சொந்தமான அருளைத் தேடிப் பிடித்து,தெரிந்து அறிந்து பிரிந்து  அதை அனுபவித்து என்றும் அழியாமல் வாழும் பேரின்ப பெருவாழ்வு வாழ வேண்டும் ,

இதுதான் மனித வாழ்வின் உன்னதமான லட்சியமாகும் .

வள்ளலார் பாடல் ;--

உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன் அன்றிப் பகைவன் என எண்ணாதீர் உலகீர் !

புகுந்தருணம் இது கண்டீர் நம்மவரே நான்தான்
புகல்கின்றேன் ஏன் மொழி யோர் பொய் மொழி எண்ணாதீர்

உகுந்தருணம் உற்றவரும், பெற்றவரும்,பிறரும்

உடமைகளும்,உலகியலும் உற்ற துணை அன்றே

மிகுந்த சுவைக் கரும்பே செங்கனியே கோற்றேனே

மெய்ப்பயனே கைப் பொருளே விலை அறியா மணியே ,

தகுந்த தனிப் பெரும் பதியே தயா நிதியே கதியே

சத்தியமே என்று உரைமின் பத்தி யொடு பணிந்தே .!

என்று தெளிவுபட சொல்லி பதிவு செய்கின்றார் வள்ளலார்.

நமக்கு சொந்தம் இல்லாத பொருளை விட்டுவிட்டு சொந்தம் உள்ள அருளைப் பெற்று  வாழ்வாங்கு வாழ்வோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
sell ....9865939896,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக