வாழ்க்கை என்பது புனிதமானது !
வாழ்க்கை என்பது புனிதமானது !
மனித வாழ்க்கை என்பது மகத்தான வாழ்க்கை .புனிதமான வாழ்க்கை .
மனிதர்கள் வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .
இப்படி மனிதர்கள் வாழ்வது மனிதர்களின் குற்றம் அல்ல .
மனிதர்களுக்கு வாழும் வழியைக் காட்டியவர்கள் .தான் அருளாளர்கள் .
அவர்கள் தான் சாதி,சமயம்,மதங்களை உருவாக்கியவர்கள் .
அவர்கள்தான் கற்பனைக் கலைகளை உருவாக்கி, நிலையாக இருப்பதுபோல் ..கதைகளைக் கட்டி வேதம் ஆகமம்,புராணங்கள் .இதிகாசங்கள் சாத்திரங்கள் போன்ற பொய்யான விதைகளை விதைத்து விட்டார்கள் .
அவை யாவும் உண்மை என்று நம்பி மக்கள் ஏற்றுக் கொண்டு வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.
இறைவன் அளவில் அடங்காத அருளைக் கொடுத்து மனிதன் மேனிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே மனிதப் பிறப்பு கொடுத்துள்ளான்.
மனிதன் புனிதமான வாழ்க்கை வாழத் தெரியாமல் புழுதியிலே விழுந்து அழிந்து கொண்டு உள்ளான் .
மனிதனை அழிவில் இருந்து காப்பாற்றத்தான் இறைவன் வள்ளலாரை இந்த உலகத்திற்கு அனுப்பி உள்ளான்.
வள்ளலார் உலக மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற பெருங் கருணைக் கொண்டு சாதி,சமயம்,மதம்,அற்ற ஒரு பொது நெறியை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தயுள்ளார் .
அந்த புனிதமான நெறிதான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற பொது நெறியாகும்.
அந்த புனிதமான நெறியைப் பின்பற்றி வாழ்பவனே மனிதன் .
''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நெறியைப் பின்பற்றி வாழ்பவனே மனிதன் '' அவனே புனிதமானவன் .
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--
வையத்தீர் வான் அகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே யுறு மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கை அதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே
மெய் யகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப் பொருளாம் தனித்தந்தை இத் தருணம் தனிலே
செய் யகத்தே வளர் ஞான சித்தி புரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே !
திரு நெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் நீண்டு
வரு நெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து
வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்
பெரு நெறியிற் சித்தாடத் திரு உளங் கொண்டு அருளிப்
பெருங் கருணை வடிவுனொடு வரு தருணம் இதுவே
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர்
கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே !
இந்த உலகத்தில் வாழ்பவர்களும் வானத்தில் வாழ்பவர்களும் ,மற்று எங்கு எங்கு வாழ் பவர்களாய் இருந்தாலும் ,எந்த அருளாளர்களாய் இருந்தாலும் சரி ,அவர்களின் வாழ்க்கை எல்லாம் உண்மையான வாழ்க்கை அல்ல .
மனிதனாக பிறந்தவர்கள் உண்மையான கடவுள் என்னும் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்'' ''அருளைப் பெற்று ''மரணத்தை வென்று வாழ்பவர்களே ,புனிதமான வாழ்க்கையைப் பெற்றவர்கள் ஆகும்
மற்ற தெய்வங்கள் இடத்தில் இருந்து பெரும் ''அருளுக்கு மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை,புகழும் இல்லை..சக்தியும் இல்லை,முக்தியும் இல்லை,சித்தியும் இல்லை,ஆற்றலும் இல்லை''.
எல்லோருக்கும் அருளைக் கொடுப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .அவர் இடத்தில் இருந்து நேரிடையாக பெறுபவருக்கு மட்டுமே மரணத்தை வெல்லும் ஆற்றல் உண்டு.
எனவே, தான் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் நேரிடையாக அருளைப் பூரணமாகப் பெற்று மரணத்தை வென்றார் .
அதேபோல் உலகத்தில் உள்ள மக்களை நேரிடையாக அருளைப் பெறுவதற்கு அழைக்கின்றார் நமது வள்ளலார் .
நாம் அனைவரும் வள்ளலார் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க'' நெறியில் சேர்ந்து இறைவன் அருளைப் பெற்று ,மரணத்தை வென்று வாழ்வதே, புனிதமான வாழ்க்கையாகும்.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.9865939896,

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு