சனி, 19 செப்டம்பர், 2015

இன்பமும் துன்பமும் !

இன்பமும் துன்பமும் !

இந்த உலகம் இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் வாழ்க்கை என்று, பல அறிவு ஜீவிகள் சொல்லிக் கொண்டு உள்ளார்கள்.அது உண்மை அல்ல

கடவுள் படைத்த இந்த உலகம் முழுவதும் இன்பம் நிறைந்து உள்ளது.

இன்பத்தை தவறாக பயன் படுத்துவதால் துன்பம் வருகின்றது.

துன்பம் வருவதால் இந்த உலகம் துன்பம் நிறைந்தது என்று கருதுகிறார்கள் .

கடவுள் எக்காரணத்தைக் கொண்டும் துன்பம் வருவிக்க உலகத்தைப் படைக்கவில்லை.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வே ,உலகத்தை இறைவன் படைத்து உள்ளார் .

நாம் இன்பத்தைப் பிடிக்காமல், துன்பத்தைப் பிடித்துக் கொண்டு ,கடவுள் இன்பத்தை தரவில்லை என்று கடவுள் மீது குற்றம் சுமத்துவது அறியாமையிலும் அறியாமை.

மனிதன் இன்பத்தை அனுபவிக்க தவறி விடுகின்றான் இன்பத்தை அவன் வெளியே தேடுகின்றான் அதனால் அவனுக்கு இன்பம் தெரிவதில்லை .

மனிதன் பொருளிலே இன்பத்தைக் காணாலாம் அனுபவிக்கலாம் என்று அறியாமையில் வெளியிலே அலைந்து திரிந்து கொண்டுள்ளான்.

அகத்திலே உள்ள இன்பத்தைத் தேடாமல் புரத்திலே தேடினால் எப்படி இன்பம் கிடைக்கும்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடினால் எப்படி இன்பம் கிடைக்கும்.

காரணம்.;--

இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் சமயங்கள் மதங்களின் கொள்கைகளை பிடித்துக் கொண்டு அலைவது தான் காரணம் .

அறிவுள்ள மனிதர்களை அறியாமையில் தள்ளிவிட்டது வேதம் ,ஆகமம்,புராணங்கள்,இதிகாசங்கள், சாத்திரங்கள்.அனைத்தும்

அகத்தைக்  கண்டு தெரிந்து,தெளிந்து  அருளைப் பெற்று இன்பமுடன் வாழ வேண்டிய மனிதர்களை புரத்திலே அலைய விட்டு துன்பத்தைத் தேட அலைய விட்டு விட்டார்கள் .

அறிவுள்ள படித்தவனும் தேடுகிறான், படிக்காதவனும் தேடுகின்றான்.

சித்தனும் தேடுகின்றான் முத்தனும் தேடுகின்றான் .

யோகியும் தேடுகின்றான் ஞானியும் தேடுகின்றான்.

ஆண்டியும் தேடுகின்றான் அரசனும் தேடுகின்றான் .

வெளியில் கிடைக்கும் இன்பமா அவை .

கடவுள் வருகை ;--

அகம் கருத்து புறம் வெளுத்து உள்ள மனிதர்களைத் திருத்தவே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,வள்ளலார் என்னும் உருவம் தாங்கி இவ்வுலகிற்கு வந்துள்ளார் .

உலகில் எங்கும் செல்லாமல், முதன் முதலில் உண்மையானக் கடவுள் தமிழ் நாட்டிற்கு 5--10--1823,அன்று வந்துள்ளார் .அவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் .

அவர் வந்து 193-ஆண்டுகள் ஆகின்றது .

அவர் வந்ததின் நோக்கம் பற்றி அவரே தெளிவாக விளக்கி உள்ளார் .

அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்.
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

என்கின்றார்.

இன்பம் நிறைந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டிய உலகத்தில் துன்பம் நிறைந்து வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

காரணம்;-- அகம் கருத்து புறம் வெளுத்து உள்ளார்கள். ஆதலால் அவர்களால் இன்பத்தைப் பெற முடியாமல் துன்பத்தையே பெற்றுக் கொண்டு உள்ளார்கள்

உலகில் உள்ள அனைவருக்கும் உண்மையை எடுத்து சொல்லி அவர்களை சுத்த சன்மார்க்க நெறியில் சேர்ந்து இந்த உலகத்திலேயே  பரத்தைப் பெரும் அருள் நெறியை புரிய வைத்து ,துன்பத்தில் இருந்து விளக்கி இன்பத்தை அடைய செய்விப்பதே என்னுடைய முக்கியப்  பணியாகும்.என்கின்றார் வள்ளல்பெருமான்.

இன்பம் புரத்திலே உள்ள பொருளில் இல்லை .

அகத்திலே உள்ள அருளில் உள்ளது .

ஜீவ காருண்யம் என்னும் செய்கையால் பொருளை அருளாக மாற்றி இன்பம் அடைவோம்.

இனிமேல் நாம் துன்பத்தில் இருந்து விலகி இன்பத்தைப் காணுவோம் ,இன்பத்தை அடையும் வழியில் செல்வோம்.

வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்!

வடலூருக்கு வந்தால் பெறலாம் நல்ல வரமே !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு