அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

எமன் நெருங்க மாட்டான் . !

எமன் நெருங்க மாட்டான் . !

எதிரிகள் இல்லாமல் வாழ்பவரை எமன் நெருங்க மாட்டான்.

அன்புடன் வாழ்பவரை ஆண்டவன் கை விட மாட்டான்.

இரக்கம் உள்ளவரை என்றும் துன்பம் நெருங்காது.

கருணை உள்ளவரை கடவுள் காப்பாற்று வார்.

பாசம் உள்ளவர்கள் மோசம் அடைய மாட்டார்கள் .

பற்றை ஒழித்தவரை பார் எல்லாம் போற்றும்.

அருளைப் பெற்றவரை அகிலம் எல்லாம் போற்றும்.

வாழக் கற்றவன் வாழும் வழி அறிவான் .

துன்பத்தை ஒழித்தால் இன்பம் தேடி வரும் .

சாகும் கல்வியை ஒழித்தால் சாகாக் கல்வி வரும்.

சாகாக் கல்வி கற்க சாதனைகள் பல வேண்டும் .

சாதனைகள் வேண்டும் என்றால் தனித்து இருக்க வேண்டும்.

தனித்து இருக்க வேண்டும் என்றால் விழித்து இருக்க வேண்டும்.

விழித்து இருக்க வேண்டும் என்றால் பசித்து  இருக்க வேண்டும்.

பசித்து ,தனித்து,விழித்து இருந்தால் பதவி தேடிவரும்.

பதவி என்பது மண்ணாலும் பதவி அல்ல விண்ணாளும் பதவி .

மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மாபெரும் வல்லபம் அது .

அறிவுள்ள மனிதனுக்கு அகிலம் எல்லாம் அவன் பிடியில்

அறிவுள்ள மனிதன் அருளைப் பெற்றிடுவான்

அருளைப் பெற்று விட்டால் அவன் அடையாளம் தெரிந்து விடும் .

அடையாளம் தெரிந்து விட்டால் அவனேக்  கடவுள்.


அமரரும் முனிவரும் அதிசயித்திடவே
அருட் பெருஞ்ஜோதியை அன்புடன் அளித்தே
கமமுறு சிவ நெறிக்கே ஏற்றி என் தனையே
காத்து எனது உளத்தினில் கலந்த மெய்ப் பதியே
எமன் எனும் அவன் இனி இல்லை இல்லை மகனே
எய்ப்பற வாழ்க என்று இயம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
தனி நடராஜ என் சற்குரு மணியே !......வள்ளலார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக