அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 23 செப்டம்பர், 2015

மனிதன் மதி கெட்டு வாழ்வதற்குக் காரணம்.!

மனிதன் மதி கெட்டு வாழ்வதற்குக் காரணம்.!

மனத்தினால் வாழ்ந்து கொண்டு உள்ளான் மனிதன்.மனம்  புறத்தைத் தேடும் இயல்பு உடையது.

அகத்தை தேடவேண்டிய மனிதன் புறத்தைத் தேடுவதால் மதி என்னும் அறிவு விளங்காமல் அழிந்து கொண்டு உள்ளான்.

மனத்தை அடக்குபவனே மனிதன் .மனத்தை அகத்தில் திருப்புவனே மனிதன்.

மனத்தை அடக்க முடியாது .மனத்தை திருப்ப முடியும்.

சத்விசாரம் பரோபகாரம்

ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கத்தால் சத்விசாரம் என்னும் தேடுதல் உண்மை வெளிப்படும்.

ஜீவ காருண்யத்தால் மனம் மாற்றம் அடையும்.

ஜீவ காருண்யம் உண்டாக உண்டாக மனம் சிற்சபையைத் தேடும் .அப்போது மனத்தை ஆன்மாவில் செலுத்த வேண்டும்.

எனவேதான் வள்ளலார் மனத்தை சிற்சபையின் கண் செலுத்துங்கள் என்றார்.

சிற்சபை என்பது ஆன்மாவின் இருப்பிடம் .மனமானது ஆன்மாவைத் தொடர்பு கொண்டால் மனதை ஆன்மா தன்வசமாக மாற்றிக் கொள்ளும்.

மனமானது ஆன்மாவில் ஒடுங்கி விட்டால் அறிவு தானே வெளிப்படும்.அறிவு வெளிப்பட்டால் மனிதன் நல்லதையே செய்வான் .தவறு ஏதும் செய்யமாட்டான்.

மனத்தை மாற்றுபவனே மனிதன் என்பதாகும்.
அதனால்தான் மனிதன் என்று பெயர் வழங்கப் பட்டது.

மனிதன் புனிதனாக மாறுவதற்கு ஜீவ காருண்யமே வழியாகும் .

ஜீவ காருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானே விளங்கும் என்பார் வள்ளல்பெருமான்.

மனத்தை அறிந்தவனே மனிதன் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக