அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஞானி என்பவர்களின் அடையாளங்கள்.!

ஞானி என்பவர்களின் அடையாளங்கள்.!

''என்றே என்னினும் இளமை யோடு இருக்க
நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே !.''..அகவல்

அறியாத மக்களுக்கு நல்லதை செய்கிறவர் நன்மையை செய்கிறவர்கள் ,பெரியோர்,போதகர், சித்தர்,  ஞானி ,அருளாளர்,ஆன்மீக வாதிகள், என்று உலகில் வழிக் காட்டிகளாக நிறையபேர்களை அடையாளப் படுத்தி உள்ளார்கள் .

அவர்களைத் தொடர்ந்து  மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.அதனால் மக்கள் என்ன பயன் அடைந்து உள்ளார்கள் என்பது தெரியவில்லை.

''ஒரு ஞானி என்பதற்கும்,அருளாளர் என்பதற்கும்  சிலபல  அடையாளங்கள் உண்டு.''

ஒரு ஞானி, அருளாளர் என்பவர்களுக்கு ;--

முதலில் அவர்களுக்கு வயது முதிர்ச்சி அடையக் கூடாது.

என்றும் இளமை மாறாமல் இருக்க வேண்டும்.

அவர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் நோய் வரவேக்  கூடாது.

அவர்களது மூடி நரைக்கக்  கூடாது.

அவரது கண்களின் பார்வை அன்பு,தயவு கருணையே வடிவமாக இருக்க வேண்டும்..

அவர்களுக்கு  பயம் என்பது இருக்கவே கூடாது ,

அவர்களுக்கு துன்பம் எப்போதுவே வரக் கூடாது.

அவர்களுக்கு பசி என்பதே இருக்கக் கூடாது.

அவர்களுக்கு தூக்கம் என்பது வரவேக் கூடாது. .

அவர்களுக்கு ,தனியாக வீடோ,குடிலோ, ஆசிரமமோ, ஆச்சாரங்க்களோ இருக்கக் கூடாது.

அவர்கள் வெள்ளை ஆடையைத் தவிர வேறு ஆடைகளை அணியக் கூடாது.

அவர்களை யாரும் தொடவும்  முடியாது.

அவர்கள்  எதிரில் நேருக்குநேர் பார்த்து பேசமுடியாது .

அவர்களுக்கு  மரணம் என்பது வரவேக் கூடாது.

அவர்களை எவராலும் ,ஏக்கருவியாலும் எக்காலத்திலும் அழிக்க முடியாது..

பஞ்ச பூதங்களாலும்,.இயற்கை  சக்தியாலும், மாயையாலும்  அழிக்க முடியாது.

அவர்கள் அருள் என்னும் ஞான மருந்தை முழுவதும் பெற்றவர்கள் .அவர்கள் உடம்பு முழுதும் அருள் நிறைவு பெற்று ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டவர்கள்.

மேலேக் கண்ட அடையாளங்கள்,அத்தனையும் அதற்கு மேலும்  பெற்ற ஒரே அருளாளர் .உலக வரலாற்றில் ''வள்ளல்பெருமான் ஒருவரே !''

இறைவன் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டவர்.

எனவே உலகில்,நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,துன்பம் அடைந்து  நோய்வாய்ப் பட்டு இறந்தவர்களையும்.
தன்னை காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதவர்களையும்.
வணங்குவதால்,வழிபடுவதால் போற்றுவதால் எந்த பயனும் இல்லை.

தன்னையே காப்பாற்றிக் கொள்ளாதவர்கள் மக்களை, .உயிர்களை எப்படி காப்பாற்றுவார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.

சமய ,மதங்களில் சொல்லிய தோற்றுவித்த உண்மைக்குப்  புறம்பான தத்துவக் கடவுள்களை,, வழிபடுவதாலும் ,வணங்குவதாலும் எந்தப் பயனும் இல்லை.என்பதை அறிவுள்ள மனிதர்கள் புரிந்து அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையை உலகுக்கு உரைத்த உத்தமர்,எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற அருளாளர்,''வாடியப் பயிரைக் கண்டு வாடிய வள்ளலார்''
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக என்று குரல் கொடுத்தவர்.எவ்வுயிரையும் தம் உயிர்ப்போல் எண்ணியவர் .

அவரே உலகின் தலை சிறந்த அவனிப் போற்றும் உண்மையான அருளாளர்,அவரே அருட்பிரகாச வள்ளலார்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரே அருளாளர்.. அவர்தான்.அருளை வாரி வழங்கும் அருள்  வள்ளலார் ..

அவர் காட்டிய பாதையில் சென்று ,அவருடைய கொள்கைகளைக் கடைபிடித்து வாழ்ந்து, மற்றவர்களுக்கும் வழிக் காட்டுவோம் வாரீர் வாரீர்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக