காதல் கை மீறி போகின்றது !
காதல் என்பது ஆண் பெண் இணைவது தான் காதல் என்கின்றோம் அது உயர்ந்த காதல் அல்ல .
எல்லாம் வல்ல இறைவனைக் காதலிப்பதுதான் உண்மையானக் காதல் .உயர்ந்த காதல் .
ஆண் பெண் உறவு கொள்வதால் ஓர் இன்பம் கிடைக்கின்றது.அந்த இன்பம் நிலைத்து நிற்பதில்லை.
அந்தக் காதல் உணவின் உணர்ச்சியால் உண்டாகின்றது.
அந்தக் காதலுக்கு ஆசை இருந்தாலும் 72,வயதுக்கு மேல் ஆண் பெண் உறவு கொள்ள முடியாது.விந்துவின் வீரியம் சோர்ந்து குறைந்து விடும் .
ஆதலால் ஆண் பெண் உறவு கொளவதற்கு சிற்றின்பம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.
நாம் அனைவரும் பெண்கள்.!
மேலும் ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.!
இந்த உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும் பெண் தன்மைக் கொண்டது .
இறைவன் ஒருவர்தான் ஆண் தன்மைக் கொண்டவர்..
உருவத்தால் வேறுபடுகின்றோம்,,அனைவருடைய ஆன்மாவும் ஒரே தன்மை உடையது.
நாம் காதல் கொள்வது பெண்ணும் பெண்ணும் காதல் கொள்வது போன்றது.ஆகையால் அவை உண்மையான காதல் அல்ல !
கடவுள் இன்பம் !
கடவுள் கொடுக்கும் விந்து, என்பது அமுதம் அதாவது அருள் என்பதாகும்.
ஆனால் இறைவனைக் காதலித்தால் இடைவிடாது இன்பம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.அதற்கு வயது வரம்பு கிடையாது.
இறைவனுடன் தொடர்பு கொள்வதால் அருள் என்னும் அமுதம் சுரந்து கொண்டே இருக்கும் .அதனால் வரும் இன்பம் அளவிடமுடியாது.அந்த சுகத்தை வெளியில் சொல்ல முடியாது .அதற்கு வார்த்தைகளே கிடையாது.
அந்த அமுதம் ஆன்மாவில் இருந்து கசிந்து கொண்டே இருக்கும் அதை அனுபவிப்பவர் தான் முற்றும் தெரிந்த ஞானி என்பவராகும்.
அதனால் தான் ஞானிகளை ,மனிதர்கள் வணங்குகிறார்கள். மனிதர்களை ஞானிகள் வணங்குவதில்லை..
இடைவிடாது இறைவனைக் காதலிப்பவர்களுக்கு மரணம் வராது.அதற்கு பூரண சுகம் என்பதாகும்.
இவ்வுலகில் இறைவனை பூரணமாக உள் அன்போடு காதலித்தவர் வள்ளல்பெருமான் அதனால்தான் அவருக்கு மரணம் இல்லை .
வள்ளலார் காதல் கொண்ட பாடல்.!
காதல் கைம் மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டு கொள் கணவனே என்றாள்
ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை இது என்றாள்
பேதை நான் பிறிதோர் புகல் இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள்
மா தயவுடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே !
அடுத்த பாடல் !
மயங்கினேன் எனினும் வள்ளலே உன்னை நான் மறப்பனோ கனவினும் என்றாள்
உயங்கினேன் உன்னை மறைந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள்
கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணைக் கடல் அமுதம் அளித்தருள் என்றாள்
வயங்கு சிற்சபையில் வரதனே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே !
தாய் புலம்பல்.!
ஒரு தாய், தான் பெற்ற மகள் இறைவனை காதலிப்பதாக அறிந்து இறைவனிடம் சொல்லி மகிழ்கின்றாள்
என்மகள் உன்னையே நினைத்துக் கொண்டு உண்ணாமல்,உறங்காமல்,விழித்துக் கொண்டும் வேண்டிக் கொண்டும் இருக்கின்றாள்
உன்னையே நினைத்துக் கொண்டு இடைவிடாது காதலித்துக் கொண்டே இருக்கின்றாள்,உங்களுடைய பெருமையும் புகழையும் ஆற்றலையும் அறிந்து காதலிக்கும், என்மகளை ''ஈன்று'' எடுத்ததற்கு என்ன தவம் செய்தோனோ
உடனே என்மகளை ஏற்றுக் கொண்டு அவளுடைய காதலை நிறை வேற்ற வேண்டும் என்று, தனது மகளுக்காக இறைவனிடம் வேண்டுகின்றார் .
நாமும் அப்படி இறைவனைக் காதலித்து அழியாப் பேரின்பம் பெறுவோம்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக