அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

உலகை திருத்த இரண்டு நூல் போதுமானது !.

உலகை திருத்த இரண்டு நூல் போதுமானது .


கற்றதினால் ஆய பயன் என்கொல் ? வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்....திருவள்ளுவர்.

மலர் மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் !

கண்ட  கண்ட வரலாறுகளைப்  .படிப்பதாலோ பல விதமான கதைகளைப் படிப்பதாலோ .வேத ஆகம புராண ,இதிகாசங்களைப் படிப்பதாலோ,பலவிதமான கவிதைகளைப் படிப்பதாலோ. அறிவியல்,விஞ்ஞானம்.வேதியல் சம்பந்தமான நூல்களைப் படிப்பதாலோ என்ன பயன்.? எல்லாமே மரணத்திற்கு இட்டுச்செல்வதுதான்

இந்த உலகத்தைப் படைத்து .ஆன்மாவை அனுப்பி ,உயிர் ,உடம்பைக் கொடுத்து இந்த உலகத்தில் வாழ வைத்துக் கொண்டு உள்ள உயர்ந்த ஆற்றலும் அறிவும் அருளும் கொடுத்துக் கொண்டுள்ள இறைவன்  யார் ? என்பதைத் தெரிந்து கொள்ளாமல் வாழ்வதினால் . என்ன பயன் என்கின்றார் .திருவள்ளுவர் .

அதே பாணியில் வள்ளலார் சொல்லும் பாடல் .!

கண்டது எல்லாம் அனித்தியமே கேட்டது எல்லாம் பழுதே

கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே

உண்டது எல்லாம் மலமே உட்கொண்டது எல்லாம் குறையே

உலகிலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே

விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க

மெய்ந்நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து

எண்டகு சிற்றம்பலத்தில் என் தந்தை அருள் அடைமின்

இறவாத நலம் பெறலாம் இன்பம் உரலாமே !

என்கின்றார் .

இதுவரையில் நீங்கள் கண்டது,கேட்டது,கற்றது ,களித்தது ,உண்டது ,எல்லாமே குற்றம் உடையது .உபயோகம் இல்லாதது.

இதுவரையில் நீங்கள் அப்படி வாழ்ந்தது போதும் ,இனிமேல் அப்படி இருக்காதீர்கள் .

உலகில் ஒரு மெய்நெறி ஒன்று இறைவனால் படைக்கப் பட்டு உள்ளது .அதில்தான் மெய்ப்பொருள் என்ன என்பதைக் காட்டி உள்ளது.

அந்த மெய் நெறிதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியாகும்.

அந்த நெறியின் வாயிலாக சாகாக் கல்வியைப் பற்றித் தெளிவாக சொல்லி உள்ளது .

இதுவரையில் நீங்கள் படித்தது எல்லாம் பொருள் ஈட்டும் கல்வி, அது சாகும் கல்வி என்பதாகும்.அதனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை எப்படி வாழ்ந்தாலும் இறுதியில் மரணம் வந்துவிடும்.

எனவே இனிமேல் நீங்கள் சாகாதக்  கல்வியைக் கற்க வாருங்கள் .அந்தக்  கல்வியால் அருள் என்னும் அழியாப் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த அருளால் நீங்கள் மெய்ப்பொருள் என்னும் இறைவன் யார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் .மரணத்தையும் வென்று விடலாம் .

அதுதான் பேரின்ப வாழ்க்கை என்பதாகும்.அதைத்தான் வள்ளுவரும் வள்ளலாரும் மிகத் தெளிவாக பின்பற்றி வாழ்ந்து வழிக் காட்டி உள்ளார்கள்.

அந்த மெய்ப்பொருள்தான் வாலறிவன் என்பதாகும்..அதுதான் என்றும் அழியாப் பயன் உள்ள ''அருள் '' என்பதாகும்.

அருளைப் பெற்று மரணம் இல்லாமல் வாழ்பவனே மனிதன்.

பொருளைப் பெற்று மரணம் அடைந்து ,பின் பிறப்பு எடுத்து வாழ்பவன் மனிதன் அல்ல .

திருவள்ளுவர் மேலும் சொல்லுகின்றார் .

அருள் இல்லாற்கு அவ்வுலகம் இல்லை.பொருள் இல்லாற்கு இவ்வுலகம் இல்லை.

அருள் பெற்றால்தான் இறைவன் இருக்கும் இடத்திற்கு செல்லமுடியும்.பொருள் பெற்றுக் கொண்டு இருந்தால் இவ்வுலகில் பிறந்து பிறந்து, இறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதான் என்பதை, மிகத் தெளிவாக விளக்கி உள்ளார்.

இந்த உலகில் உண்மை சொன்னவர்கள் இரண்டுபேர் .

ஒருவர் ''திருவள்ளுவர் ''.ஒருவர் ''திரு அருட்பிரகாச வள்ளலார்'' .

அந்த இருவர்களும் தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்தவர்கள்.

திருவள்ளுவர் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வழிக் காட்டியவர் .

திருஅருட் பிரகாச வள்ளலார் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து வழிக் காட்டியவர் ..

அந்த இரு அருளாளர்கள் எழுதிய ''திருக்குறளும் ,திரு அருட்பாவும் '' மட்டுமே மனிதர்களை திருத்த போதுமானதாகும்.

சிந்திப்போம் செயல்படுவோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக