குணம் இரண்டு வகைப்படும் !
ஒன்று பெருங்குணம் ! ,ஒன்று சிறுங்குணம் !.
பெருங்குணம் உள்ளவர்கள் எல்லா உயிர்களும் ஒன்று என்று நினைப்பவர்கள்.எந்த உயிர்களுக்கும் துன்பம் விளைவிக்காமல் .பொது நோக்கத்துடன் வாழ்பவர்கள்.
பெருங்குணம் உள்ளவர்கள் பேரும் புகழுடன் வாழ்பவர்கள்.அவர்களுக்கு துன்பம்,துயரம்,அச்சம், பயம்,என்பது எக்காலத்தும் வராது.என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
அவர்களுக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் துணையாக,பாது காப்பாக இருந்து,அறிவையும்,ஆற்றலையும் அருளையும்,தந்து கொண்டே இருப்பார்.அவர்களுடைய மரணம் நீட்டித்துக் கொண்டே இருக்கும்.அவர்களுக்கு அருள் பூரணமாக கிடைக்கும் போது மரணத்தை வென்று வாழும் வழியும் கிடைக்கும்.
சிறு குணம் உள்ளவர்கள்.!
சிறு குணம் உள்ளவர்கள் ,சுய நலத்துடன் வாழ்பவர்கள்.மற்றவர்கள் பொருளை அபகரிக்க நினைப்பவர்கள்.அவர்கள் உயிர்களின் மேல் அன்பும் இரக்கமும் கொண்டு இருக்க மாட்டார்கள்.மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்து கொண்டே இருப்பார்கள்.
அவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம்,துயரம்,அச்சம் ,பயம்,போன்ற துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.
அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே இருக்காது.குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது.மற்றவர்களால் தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும்.
அவர்கள் இடத்தில் அன்பும்,தயவும்,கருணையும், எக்காலத்திலும் இருக்காது.துஷ்ட மிருக குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்
அவர்களை நோக்கி இறைவன் வரவே மாட்டார்.அவர்களை இறைவன் தள்ளி வைத்து விடுவார்.
அவர்களுக்கு இயற்கை மரணத்திற்கு மாறாக,தற்கொலை,விபத்துக்கள்,கொலைகள் போன்ற துர்மரணம் வந்து விடும்.
அன்பும் ,தயவும்,கருணையும் இல்லாத இடத்தில் கடவுளுக்கு வேலையே இல்லை. இடமே இல்லை..
எனவே மனிதர்களின் இயற்கை குணம் பெருங்குணம்... ,இயற்கை குணத்திற்கு மாறுபட்டு வாழ்பவர்கள் மனிதர்கள் அல்ல .அவர்கள் சிறு குணம் உள்ள துஷ்ட மிருகத்திற்கு சமமானவர்கள்.
சிறு குணம் உள்ளவர்கள் உயிர்கள் மேல் ,அன்பும் தயவும், கருணையும்,கொண்டு வாழ்ந்தால் பெருங் குணம் உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள முடியும்.
மனிதர்களே சிந்தித்து உண்மையை உணர்ந்து வாழுங்கள் .வாழ்க்கை என்பது புனிதமானது..மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் வாழும் வாழ்க்கையே இன்பம் நிறைந்த வாழ்க்கையாகும்.
மார்க்கம் இரண்டு ;--சன்மார்க்கம் .புன்மார்க்கம்,
சன்மார்க்கம் ,உயர்ந்த மார்க்கம்,
புன்மார்க்கம் ..தாழ்ந்த மார்க்கம்.
உலகியல் மார்க்கம்;-- புன்மார்க்கம்,
அருளியல் மார்க்கம்;-- சன்மார்க்கம்,
புன்மார்க்கத்தில்;-- கடவுள் அருள் கிடைக்காது.
சன்மார்க்கத்தில் ;--கடவுள் அருள் கிடைக்கிம்.
பெருங்குணம்;-- .சான்மார்க்கத்தில் கிடைக்கும்.
சிறு குணம்.-;--உலகியல் வாழ்வில் கிடைக்கும்.
வள்ளலார் பாடல்.;---
சன்மார்க்கப் பெருங் குணத்தார் தம் பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்த சபாபதியை
நன்மார்க்கத்தில் எனை நடத்திச் சன்மார்க்க சங்க
நடுவிருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனைப்
புன்மார்க்கர்க் அறிவு அரிதாம் புண்ணியனை ஞான
பூரண மெய்ப் பொருளாகிப் பொருந்திய மாமருந்தை
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடஞ்செய்,
அருட்பெருஞ்ஜோதியை உலகீர் தெருட் கொளச் சார்வீரே
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக