அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 30 ஜூன், 2015

வள்ளலார் என்பவர் யார் ?

வள்ளலார் என்பவர் யார் ?

வள்ளலார் என்பவர் அருட்பெருஞ்ஜோதியாக உள்ளார்
அவர் உருவமாக இல்லை !

வள்ளலாரை வழிபடலாமா ?

வள்ளலார் படத்தை வைத்து வழிபடுவதும் மற்ற தெய்வங்களை வழிபடுவதும் ஒன்றே ! ஆகவே வள்ளலார் காட்டிய உருவமற்ற அருட்பெருஞ்ஜோதி ஒளியைத்தான் வழிபடவேண்டும்.

அருட்பெருஞ்ஜோதியை வழிபட்டாலே அதில் வள்ளலார் உள்ளார் .

தனியாக வள்ளலார் படத்தை  வழிபட வேண்டாம் என்று அவரே சொல்லுகின்றார் .வள்ளலார் பேச்சை கேட்மால் வழிபடுவது .வள்ளலார் சொல்லை மீறிய செயலாகும்.இல்லையா ?

சுத்த சன்மார்க்கம் என்பதே ஒளி வழிபாடாகும்.!

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் ! என்பதை வள்ளல்பெருமான் திட்டவட்டமாக மக்களுக்கு சொல்லி உள்ளார் .

அதுவே உலக பொது வழிபாடாகும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாம் செய்ய வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரண மெய்ச்சுகமாய்த்
தன்மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே
தன் ஆணை என் ஆணை சார்ந்து அறிமின் ஈண்டே !

என்னும் பாடல் வாயிலாக சன்மார்க்கிகளுக்கு விளக்கமாக விளக்கி உள்ளார் .

வள்ளல்பெருமான் சன்மார்க்கிகளின்  காலில் விழுந்து சொல்லுகிறேன் கேளுங்கள் என்கின்றார். என்னை உங்களைப் போன்று நினைத்துக் கொள்ளுங்கள் என்னை வணங்காதீர்கள் என்கின்றார் ..

மனிதனை மனிதன் வணங்குவது புன் மார்க்கமான, சமய மத மார்க்கங்களின் ,சமய மத வாதிகளின் செயல்களாகும்.அவர்களைப்போல் நாம் செயல்பட வேண்டாம் என்கின்றார்.

எல்லோருக்கும் பொதுவாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதியை மட்டுமே வழிபட வேண்டும் என்று ஆணையிட்டு ( சத்தியம் வைத்து ) சொல்லி உள்ளார் .

அப்படி சொல்லியும் சன்மார்க்கிகள்    வழிப்பாட்டு முறையில் தவறு செய்து கொண்டே உள்ளார்கள் .அவர்களை சன்மார்க்கிகள் என்று எப்படி சொல்லுவது.

அவர்களுக்கு கடவுள்;அருள் எப்படி கிடைக்கும்..இறைவன் இறுதிவரைப் பார்ப்பார் திருந்தவில்லை என்றால் கடைசியில் கை விட்டுவிடுவார் .

பாடு பட்டீர், பயன் அறியீர்,பாழுக்கு இறைத்து கழித்தீர் இதுவரையில் பட்டது எல்லாம் போதும் இனிமேல் ஈடு கட்டி வந்தால் இன்பம் மிகவும் பெறலாம் .

வள்ளலார் சொல்லிய வார்த்தைகளை சிரமேற் கொண்டு எல்லாம வல்ல அருட்பெருஞ்ஜோதியை வழிபடுவதே சன்மார்க்கிகளின் முக்கிய கடமையாகும்.

சன்மார்க்கிகளே திருந்தவில்லை என்றால் .மக்களை எப்படித் திருத்தப்  போகிறீர்கள்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

உலகில் உள்ளவர்களை திருத்த வேண்டுமானால் முதலில் நாம் திருந்த வேண்டும் .பின்புதான் மற்றவர்களை திருத்த முடியும் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக