அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 15 ஜூன், 2015

ஆன்மா என்பது வேறு ! உயிர் என்பது வேறு !

ஆன்மா என்பது வேறு ! உயிர்  என்பது வேறு !

ஆன்மா இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து சுற்றுலா செய்து விட்டு மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி செல்ல வேண்டும் என்பதுதான்  இறைவனின் சட்டம் கட்டளை.

ஆன்மா இந்த உலகத்திற்கு வந்து சுற்றுலா செய்ய வேண்டுமானால்,உயிரும் உடம்பும் தேவைப்படுகின்றது.

ஆன்மா இந்த உலகத்தில் சுற்றுலா செய்ய உயிரும் உடம்பும்  மாயையினால் கட்டிக் கொடுக்கப்படுகின்றது.

ஆன்மாவிற்கு  முதலில்உயிர் கொடுத்து தாவரம்,ஊர்வன ,பறப்பன,நடப்பன,தேவர்,நரகர் ,மனிதர் போன்ற ஏழு வகையான உடம்பு கொடுக்கப்படுகின்றது.

உயிர் ஒன்றுதான் உடம்புகள் வேறுவேறாக கொடுக்கப்படுகின்றது.

ஆன்மாவிற்கு கடைசியாக மனிதப் பிறப்புக் கொடுக்கப்படுகின்றது.மனிதப் பிறப்பில் .அறம்.பொருள் ,இன்பம்,அனுபவித்து பின் வீடுபேறு அடைய வேண்டும்.

வீடுபேறு என்பது எங்கு இருந்து வந்ததோ அங்கே திரும்பி செல்லவேண்டும்.

ஆன்மாவிற்கு கொடுத்த உயிரையும்,உடம்பையும், அழிக்காமல்,அதை ஒளியாக மாற்றி திருப்பி மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆன்மா எப்படி இங்கு வந்ததோ அப்படியே திரும்பி செல்லவேண்டும்.

உயிரையும் உடம்பையும் அழித்துவிட்டு செல்ல அனுமதி இல்லை..உயிரையும்,உடம்பையும் அழித்தால் அதற்கு மரணம் என்று பெயர் .

மரணம் வந்தால் மீண்டும் உயிரும் உடம்பும் கொடுத்து .துன்பம் ,துயரம்,அச்சம் பயம் போன்ற துன்பங்களில் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இதுவரையில் வந்த ஆன்மாக்கள் ஒன்று கூட திரும்பி செல்லவில்லை.

இந்த உண்மையை எந்த அருளாளர்களும் மனித தேகம் படைத்தவர்களுக்கு சொல்லித் தரவில்லை.

வள்ளல்பெருமான் வந்து, தான் வாழ்ந்து ,அனைத்து ஆன்மாக்களுக்கும் ஆன்மநேய உரிமையுடன் உண்மையான வழியைக் காட்டி உள்ளார். அதற்கு ''மரணம் இல்லாப் பெரு வாழ்வு'' என்று பெயர் வைத்துள்ளார்.

ஆன்மாக்கள் மீண்டும் திரும்பி செல்ல வேண்டுமானால் அருளைப் பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி .உடம்பையும்,உயிரையும் மாயையிடம் திருப்பிக் கொடுத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

அருளைப் பெறுவதற்கு;-- ,வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது போல் ..இந்த உலகில் உள்ள உயிர்களுக்கு வரும் .பசி,பிணி,கொலை,தாகம்,இச்சை.எளிமை,பயம், போன்ற துன்பங்களைப் போக்க வேண்டும்.

உயிர்களின் துன்பங்களை போக்கினால் அருள் என்னும் ஆற்றல் ஆன்மாவில் இருந்து சுரக்கும்.அந்த ஆற்றல் உள்ள அருளினால் உயிரையும்,உடம்பையும் அழிக்காமல் ஒளியாக்கி முழுவதுமாக மாயையிடம் ஒப்படைத்தால் ஆன்மாவிற்கு என்று ஆன்ம தேகம் கொடுக்கப்படுகிறது.

ஆன்ம தேகத்தைக் கொண்டு சுத்த தேகம்,..பிரணவ தேகம்,..ஞான தேகம் என்னும் ஒளி தேகம் கொடுக்கப்படுகின்றது.அதற்கு 'சுத்த பிரணவ ஞான தேகம்'' என்று பெயர் வைத்தார் வள்ளல்பெருமான்.

''சுத்த பிரணவ ஞான தேகம்'' பெற்றால் எந்த தடையும் இல்லாமல் ஆன்மா இந்த அண்டத்தை விட்டு வெளியே சென்று வந்த இடத்திற்கு சென்றுவிடும்.

தனியாக வந்த ஆன்மா உயிர் உடம்பு,எடுத்து திறம்பட வாழ்ந்து உயிரையும் உடம்பையும் அழிக்காமல் திருப்பிக் கொடுத்து.மாயையிடம்  நல்லபெயர் எடுத்து நற் சான்று பெற்று திரும்பி சென்றால் ஆண்டவர் அற்புதமான பரிசு ஒன்று வழங்குவார்.

அங்கு சென்றவுடன் ஆன்மாவிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஐந்தொழில் செய்யும் வல்லபம் என்னும் பரிசு வழங்கப் படுகின்றது.

அதற்கு பேரின்ப வாழ்க்கை பேரின்ப லாபம் ,பேரின்பம் என்று பெயராகும்.

உயர்ந்த அறிவை பெற்றுள்ள மனித தேகம் எடுத்துள்ளவர்கள் உயிரையும் உடம்பையும் மாற்றி இந்த தேகத்தையே நித்திய தேகமாக மாற்றி பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவே வள்ளல்பெருமானை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் .

நாம் அனைவரும் வள்ளல்பெருமான் வாழ்ந்து காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறியைக் கடைபிடித்து அருளைப் பெற்று பேரின்பத்தைப் பெறுவோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

2 கருத்துகள்: