அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 17 ஜூன், 2015

தவம் ,தியானம்,யோகம்,உடற்பயிற்சி தேவையா ?

தவம் ,தியானம்,யோகம்,உடற்பயிற்சி தேவையா ?

இன்று உலகம் முழுவதும் மக்கள் .தவம்,தியானம்,யோகம்,உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபட்டால்  மனம் அமைதி பெரும் என்று அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்கின்றார்கள்.

அவர்களை வைத்து கோடி கோடியாக பணம் சந்பாதிக்கும் பயிற்சி நிலையங்கள் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்கின்றன.

முதலீடு இல்லாமல் பணம் பறிக்கும், பயிற்சி நிலையங்களை அமைத்து மக்களை சுரண்டிக் கொள்ளை அடித்துக் கொண்டு உள்ளார்கள்.

அதற்கு மத்திய அரசும் அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றன.

நல்ல காரியம்தான் அதில் தவறு ஏதும் இல்லை.

மனிதனின் மனநிலை மாறுவதற்கும்,பிணி வருவதற்கும் ,உடல் பருமன் ஆவதற்கும் தீராத வியாதி வருவதற்கும்,தீராத துன்பம் வருவதற்கும் என்ன காரணம் என்று அறிய தவறி  விட்டு விடுகிறார்கள் .

கடப்பாறையை விழுங்கி விட்டு சுக்கு கசாயம் சாப்பிடுவதுபோல் உள்ளது.சுக்கு கசாயத்தால் கடப்பாரை வெளியே வந்துவிடுமா ? சிந்திக்க வேண்டும் .

மனிதன் உண்ணுகின்ற உணவு முறைகள் தான்  அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது.

ஒவ்வாத உணவுகளை உண்டுவிட்டு பண்ணாத தீமைகள்,,,,பகராத முடியாத கொடுமைகள் , ,செய்யத்தகாத செய்கின்ற செயல்கள் ,அனைத்தும் செய்து விட்டு மனம் அமைதி பெறவில்லை என்றால் எப்படி அமைதி பெரும்.

தவறான முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு எவ்வளவுதான் ,தவம்,தியானம்,
யோகம்,உடற்பயிற்சி செய்தாலும் அவை ஆற்றிலே கரைத்த புளியைப்போல் ஆகிவிடும்..

ஒழுக்கம் இல்லாமல் செயல்படும் எந்த செயல்களாக இருந்தாலும் அவைகளால் எந்த பயனும் இல்லை.

ஒழுக்கம் விழுப்பம் தரலான்  ஒழுக்கம்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் .

என்கின்றார் திருவள்ளுவர் ,ஒழுக்கம் என்பது உயிரை விட மேலானது.உயிரைக் காப்பாற்றுவது ,ஒழுக்கம் என்கின்றார் .

எல்லாவற்றுக்கும் அடைபடையானது ஒழுக்கம் !

வள்ளலார் ஒழுக்கத்தை நான்காக பிரித்து அதன் தனமைகளை விளக்கமாக விளக்கி உள்ளார்.

வள்ளல்பெருமான் எழுதிய திருஅருட்பாவை வாங்கி படித்துப் பாருங்கள் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அவை ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும்.அதிலே நான்கு வகை உண்டு .இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்.

முதலாவதாக உள்ளது இந்திரிய ஒழுக்கம் என்பதாகும் கண்,காது,மூக்கு ,வாய்,உடம்பு,என்பதாகும் இவற்றைக் கொண்டுதான் புறத்தில் எல்லாச்செயல்களும் செய்து கொண்டு வருகின்றோம்.

நாம் செய்யும் செயல்கள் அனைத்தும்,கரணங்களில் உள்ள மனம் ,புத்தி,சித்தம்,அகங்காரத்தின் ஆதிக்கத்தின் படிதான் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

ஆன்மாவில் உள்ள அறிவின்படி எவரும் செயல்படுவதில்லை. கரணங்களில் உள்ள  மனத்தின்படியும், புத்தியின்படியும் தான் செயல்பட்டு வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.

மனத்தின்படி செயல்படுவதால்,தவம்,தியானம்,யோகம் ,உடற்பயிற்சி போன்ற பயிற்சிகளினால் ,செயல்களினால், மனத்தை அடக்க முடியாது.

அந்த பயிற்சியினால் மனம் அடங்குவதுபோல் தெரியும் மறுபடியும் மனம் அதே பழைய நிலைக்கு வந்துவிடும்.

தியானம் ,தவம்,யோகம்,இவைகளால் சிறு ஒளி உண்டாவதுபோல் தெரியும் .அதனால் பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும் என்கின்றார் வள்ளல்பெருமான்.

அறிவின் படி செயல்பட்டால் நன்மை எது ? தீமை எது என்பது தெரியும்.

ஜீவகாருண்யம் எவை எனில் ;--இந்திரியங்கள் என்னும் கண்,காது,மூக்கு ,வாய்,உடம்பின் வழியாக உலகில் உள்ள உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் மனத்தின் வழியாக துன்பம் செய்யாமல் நன்மையே செய்து வந்தால் மனம் அடங்கும்.எல்லா நன்மைகளும் தானே வந்து சேர்ந்துவிடும்.

முக்கியமாக உயிர்க் கொலை செய்வதையும் ,மாமிசம் உண்பதையும் நிறுத்தி விட்டாலே மனம் அடங்கும்.

வாயில்லாத அப்பாவி உயிர்களை உயிர்க்கொலை செய்து அதன் ஊன் சுவையை உண்டு வாழ்பவர்களுக்கு ,எவ்வளவு தான் இடைவிடாது தியானம்,தவம், யோகம்,உடற்பயிற்சி செய்தாலும் பாறையில் விதைத்த விதைபோல் ஆகிவிடும்.

ஆதலால் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் இரண்டையும் கடைபிடிப்பவர்களுக்கு மனம் தானே அடங்கும்..

ஜீவகாருண்யத்தை கடைபிடித்து தவம்,தியானம், யோகம்,உடற்பயிற்சி செய்தால் ஓர் அளவிற்கு நன்மைதரும்

கருணை இல்லாமல் எதை செய்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை .

கருணையோடு செயல்படு வோர்களுக்கு எக்காலத்திலும் துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,என்பது எல் அளவும்  வரவே வராது.

அவர்கள் நோய் இல்லாமல் மன அமைதியுடன் நீண்ட காலம் உயிருடன் மகிழ்ச்சியுடனும் வாழலாம்.

சிந்திப்பீர் செயல்படுவீர் !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக