அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 29 ஏப்ரல், 2015

பாவங்களையும் ,துன்பங்களையும் தீர்க்க ஒரே வழி !

பாவங்களையும் ,துன்பங்களையும் தீர்க்க ஒரே வழி !

நாம் அறிந்து செய்தாலும்,அறியாமல் செய்தாலும்.நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும்.நம்முடைய ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கும்.

நாம் பிற உயிர்களுக்கு செய்யும் காரியங்கள்,தொடர்புகள் யாவும் மனத்தால்,வாக்கால், உடம்பால் மட்டுமே பதிவாகி நடை பெறுகின்றன.

அவைகள் தான் துன்பத்திற்கும்,இன்பத்திற்கும் காரண காரியமாகி இருக்கின்றது.

அதிக நன்மை செய்து தீமைகள் குறைவாக செய்தாலும் அந்த தீமைகள் பாவத்தில்தான் சேரும் .அவை பிற்காலத்தில் துன்பத்தைக் கொடுக்கும் .

அதிக தீமைகள் செய்து நன்மைகள் குறைவாக செய்தாலும் அவை தீராத துன்பத்தை தந்து கொண்டே இருக்கும்.

இந்த இரண்டு விதமான துன்பங்களையும் போக்க ஒரே வழி ஜீவ காருண்யம் மட்டுமே என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக மக்களுக்கு விளக்கி உள்ளார் .

ஜீவ காருண்யம் என்பது;--,மக்களுக்கு உண்டாகும் பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,கொலை,பயம்,போன்ற துன்பங்கள் வரும்போது அவரவரகளால் முடிந்து உதவிகளை செய்து பாவங்களையும்,துன்பங்களையும் போக்கிக் கொள்ளவேண்டும் என்பது இறைவனுடைய கட்டளையாகும்

இவை அறியாமல், துன்பங்களையும் பாவங்களையும் போக்குவதற்கு ஆலயங்களுக்கு செல்லுதல்,அபிஷேகம் செய்தல்,ஆராதனை செய்தல்.ஆலயத்தை வளம் வருதல்,கடவுளுக்கு படைத்தல்,அங்கப் பிரதஷ்ணம் செய்தல்.அலகு குத்தல்,மொட்டை அடித்தல்,விரதம் இருத்தல், உண்டியலில் பணம் போடுதல்,புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லுதல், போன்ற பக்தியினால் பாவங்களும் துன்பங்களும் தீர்ந்து விடாது.என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் நவக்கிரக பூஜை செய்து வளம் வருதல்,மரத்தை சுற்றுதல்,ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்தல் போன்ற மூட நம்பிக்கையில் ஈடுபடுதல் போன்ற காரியங்களால் பாவங்களும்,துன்பங்களும் தீர்க்க முடியாது.

மேலும் குகைகளுக்கு சென்று தவம் ,தியானம்,யோகம்,போன்ற காரியங்களில் ஈடுபட்டாலும்,மேலும் கோயில்கள் கட்டி கும்பாஅபிஷகம் செய்தாலும் துன்பங்களும் ,பாவங்களும் தீர்க்க முடியாது.

உயிருடன் வாழும் ஜீவர்களுக்கு,அன்பு,தயவு,கருணையுடன் நன்மை செய்வதுதான் ,நம்முடைய பாவங்களையும், துன்பங்களையும் போக்க முடியும் .

கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார் .என்பதை உணர்ந்து ஜீவ காருண்யம் செய்து பாவங்களையும் துன்பங்களையும் போக்கி,மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக