பொருளைத் தேடும் உலகம் அருளைத் தேட தெரிவதில்லை.!
பொருளைத் தேடும் உலகம் அருளைத் தேட தெரிவதில்லை.!
மனித மனம் பொருளிலே ஆசை மற்றும் இச்சைக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டு உள்ளது.
எவ்வளவு பொருள் கிடைத்தாலும் ஆசை அடங்குவதில்லை .அப்படியே அளவிற்கு மிஞ்சிய பொருள் கிடைத்தாலும் இறுதியில் யாரும் எவரும் இந்த உலகத்தை விட்டு வெளியே எடுத்துக் கொண்டு போக முடியாது .
எடுத்துக் கொண்டு போக முடியாது என்று தெரிந்தும் பொருளைத் தேடி அலைந்து கொண்டே உள்ளார்கள் .இதன் ரகசியம் தான் என்ன ?
இதன் ரகசியம் என்னவென்றால் அருளின் தன்மை என்னவென்று தெரியாததுதான்
பொருளை யார் வேண்டுமாலும் சம்பாதித்து விடலாம் அருளை அப்படி சம்பாதிக்க முடியாது.
பொருள் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும்.. அருள் ஆண்டவர் இடத்தில் மட்டுமே பெற முடியும்.அந்த அருளை கொடுக்கும் கடவுள் ஒரே ஒருவர்தான் .அவர்தான் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் அருள் பேரோளியாகும் .
அந்த ஒப்பற்ற உயர்ந்த அருளைப் பெறுவதற்கு ,ஒழுக்கம் நிறைந்த கருணைத் தேவை .அந்த கருணையைப் பெரும் இடம் உயிர்கள் .கடவுளால் படைத்த உயிர்கள் மேல் அன்பு,தயவு,கருணை காட்டுகின்ற போது இறைவன் நம் மீது அன்பு,தயவு,கருணைக் காட்டி அருளைக் கொடுப்பார் .
இறைவன் கொடுக்கும் அருளைக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.அதே அருளைக் கொண்டு மரணம் இல்லாமலும் வாழ்வாலாம்.
அருளை எடுத்துக் கொண்டு செல்வதற்கு எந்த தடைகளும் தடுத்து நிறுத்த முடியாது.அதே நேரத்தில் அருள் இருக்கும் இடத்தில் பொருளும் நிலைத்து நிற்கும்.
அருள் உடையார் எல்லாம் உடையார் .அருள் இல்லார் ஏதும் இல்லார் என்பதை தெரிந்து கொண்டால் நாம் அருளைத் தேட முயற்ச்சி செய்யலாம்..
அருள் நம்மை எப்போதும் அழிக்காது .பொருள் நம்மை எப்போது வேண்டுமானாலும் அழித்து விடும் .அருள் பெறின் ஒரு சிறு துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அருள் நெறி ஒன்றே தெருன் நெறி மற்று எல்லாம்
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே .
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே .
அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே !
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே !
என வள்ளல்பெருமான் அருளைப் பெற்று மரணத்தை வென்று அறிவு அருள் அனுபவம் தெளிவு பெற்று வாழ்த்து நமக்கு வழிக் காட்டி உள்ளார் .நாமும் அருளைப் பெறுவதற்கு இந்த புத்தாண்டு பொங்கல் திருநாளில் இருந்து முயற்சி செய்து அருளைப் பெற்று மகிழ்சியுடன் வாழ்ந்து அருள் ஒளி காட்டி மற்றவர்களுக்கும் வாழ வழி காட்டுவோம்.வெற்றி பெறுவோம் .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு