இறைவன் நமக்கு மூன்று சுதந்திரம் கொடுத்துள்ளார் !
இறைவன் நமக்கு தேக சுதந்திரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம்,,என்ற மூன்று சுதந்தரம் கொடுத்துள்ளார் .
இந்த மூன்று சுதந்தரத்தையும் வைத்துக் கொண்டு இந்த உலகத்தில் எப்படி வேண்டுமானாலும் ,வாழலாம்.எதையும் முயற்ச்சி செய்து பெற்றுவிடலாம்.
ஆனால் இந்த சுதந்தரத்தை வைத்துக் கொண்டு இருக்கும் வரை அருள் சுதந்தரத்தை ,இறைவனிடம் இருந்து பெறமுடியாது.
நம்மிடம் உள்ள மூவகை சுதந்தரத்தை இறைவனிடம் திருப்புக் கொடுத்து விடவேண்டும்.அப்படி கொடுத்தது விட்டால் உடனே இறைவன் அருள் என்னும் சுதந்தரத்தை கொடுத்தது விடுவார்.
வள்ளலார் வாக்கு,!
எனது சுதந்தரமாகக் கொண்டு இருந்த தேக சுதந்திரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம்,ஆகிய மூவகை சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன்,
கொடுத்த தருணத்தே ,இத்தேகமும்,ஜீவனும் போகப் பொருள்களும்,சர்வ சுதந்தராகிய கடவுள் பெருங் கருணையால் கொடுக்கப்பட்டது என்பதை அறிவிக்க அறிந்தேன்.
இனி இத்தேகத்தின் இடத்தும்,போகப் பொருள்கள் இடத்தும்,சீவனிடத்தும்,தேவரீர் திருவருட் சாட்சியாக எனக்கு எவ்விதத்திலும் யாதோர் சுதந்திர தோற்றமும் தோற்ற மாட்டாது.
தேவரீர் உங்களுடைய திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்து அருளி மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம்,முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து,
இத் தேகத்தையே நித்திய தேகமாக்கி, எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
இத்தேகத்தைப் பெற்ற எல்லா ஜீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து ,அவரவர்களையும் உரிமை உடையவர்கள் ஆக்கி வாழ்வித்தல் வேண்டும்....இவை வள்ளல்பெருமான் வாக்கு .
அதேபோல் மனித தேகம் படைத்த நாம்,இறைவன் கொடுத்துள்ள மூன்று சுதந்தரத்தையும் திருப்புக் கொடுத்து விட வேண்டும்.
திருப்பி கொடுக்கா விட்டால் இறைவன் அருள் சுதந்திரம் கிடைக்காது, மரணத்தை வெல்ல முடியாது.முயற்சி செய்வோம் முடியாதது ஏதும் இல்லை.
ஆன்மநேயன்.ஈரோடு கதிர்வேல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக