மனிதன் யார் ? எப்படி இருக்க வேண்டும் !
மனித தேகம் உயர்ந்த அறிவுடைய தேகமாகும் .
மனித தேகம் மற்ற ஜீவ தேகம் போல இலேசிலே எடுக்க கூடியதில்லை .
மனித தேகத்தில் ஆன்ம விளக்கமும் ,அருள் விளக்கமும் உடையதாகும்.
மனித தேகம் போனால் மறுபடியும் மனித தேகம் கிடைப்பது என்பது நிச்சயமில்லை .
இந்த மனித தேகம் முத்தி இன்பம் ,சித்தி இன்பம் பெறுவதற்கே கிடைத்த தேகமாகும்.
இந்த மனித தேகம் மாத்திரமே கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப் பட்ட தேகமாகும்.
மனித தேகம் மாத்திரமே மற்ற உயிர்களுக்கு பசியைப் போக்குகின்ற ஜீவ காருண்யம் என்கின்ற ஒழுக்கத்தைக் அவசியம் கடைபிடிக்கும் தேகமாகும்.
இந்த மனித தேகத்திற்கு கடவுளால் கொடுக்கப் பட்ட கருணை என்னும் அருட் கொடையாகும்.
ஜீவர்களுக்கு உண்டாகும் பசி என்னும் அரக்கனை ,தாவரம் என்னும் உணவினால் நிவர்த்தி செய்விக்க வேண்டுவது கடவுளின் கட்டளையாகும்.
எவ்வளவு வசதி,பதவி ,புகழ் இருந்தாலும் நம்முடன் வருவதில்லை .
நாம் செய்யும் கருணை ஒன்றுதான் ஆன்மாவில் பதிவாகி அருள் என்னும் ஆற்றல், ஆன்மாவை திறக்கும்
(சாவி )திறவுகோளாகும்
மனித தேகம் எடுத்த நாம் ஜீவ காருண்யம் என்னும் ஒழுக்கத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும் .இதுவே கடவுளின் கட்டளையாகும் .
அருள் என்பது வேறு எந்த வழியாலும் கிடைக்காது என்பதை மனித தேகம் படைத்த அறிவுள்ள ஜீவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .
வள்ளலார் ;--
ஆன்மநேயன் ;--கதிர்வேலு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக