சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறை !
தியானம் செய்யும் முறை !
தியானம் செய்ய வேண்டுமானால் கண்களைத் மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்களைத் திறந்து கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் ...
நம் வீட்டில் தனியாக ஒரு அறையோ அல்லது பூசை அறையோ இருக்க வேண்டும். அந்த அறையில் நான்கு சதுரம் கொண்ட தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும். அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும்.
அதில் ''நல்ல எண்ணெய் '' அல்லது ''தேங்காய் எண்ணெய்'' அல்லது பசுநெய் ..ஊற்றி சிறிய திரியைப் போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அந்த தீபத்தின் முன்னாடி நான்கு அடி தூரம் தள்ளி நாம் கிழே ஒரு விரிப்பை போட்டு அதன் மேல் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் தீப சுடர் ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் ...

தீபம்,.. அலை பாயாமல் எரிய வேண்டும் .கண்கள் தீப சுடர் ஒளியை மட்டும் தான் பார்க்க வேண்டும் .நம்முடைய ஆன்மாவிற்கும்,ஜீவனுக்கும் ,மனதிற்கும்,கண்களுக்கும் ,அந்த திரு விளக்கிற்கும் நெருங்கிய சம்பந்தம் (தொடர்பு ) இருக்கின்றது .என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .
நம்மால் எவ்வளவு நேரம் தீபத்தைப் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .
நம் உடம்பின் ஐம் புலன்கள் {கண்...காது....மூக்கு ....வாய் ...உடம்பு) என்பதாகும் அதில் முக்கியமானது,முதன்மையானது இந்திரியங்களில் உள்ள கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் புறத்தில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோம்
ஐம் புலன்களான கண்,காது,வாய்,மூக்கு,உடம்பு என்பதில் முதல் இடம் வகிப்பது கண்கள் ,கண்களில் பார்க்கும் அனைத்தும்...கரணங்கள் என்னும் ...மனம் ...புத்தி ....சித்தம் ...அகங்காரம் ...என்னும் கரணங்களில் உள்ள மனத்தில் பதிவாகின்றன.
கரணங்களில் முதன்மையானது மனமாகும் .கண்களில் பார்ப்பது அனைத்தும் மனதில் பதிவாகின்றது ...
அதே நேரத்தில் கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது...கண்களில் பார்ப்பது அனைத்தும் மனதில் பதிவாகும்.
மனதில் பதிவாகியது, அனைத்தும் ஜீவன் என்னும் உயிரில் பதிவாகும் ...ஜீவனில் பதிவானது அனைத்தும் ஆன்மா என்னும் உள் ஒளியில் பதிவாகும்,அந்தப் பதிவுகள் தான் மாயா திரைகள் என்பதாகும்.
நமக்கு வரும் ,துன்பத்திற்கும் துயரத்திற்கும், அச்சத்திற்கும், பயத்திற்கும், நோய்க்கும்,மரணத்திற்கும் அந்தப் பதிவின் அறியாமை என்னும் திரைகளே காரண காரியமாகும்.
துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,மரணம் முதலியவற்றைப் போக்க வேண்டுமானால்,மரணத்தை வெல்ல வேண்டுமானால்,வெளியில் செல்லும் மனத்தை உள்ளே கொண்டு செல்ல வேண்டும்.அதை கண்கள் வழியாகத்தான் கொண்டு செல்ல முடியும்.
ஏன் என்றால் ? ஆன்மாவில் இருந்துதான் கண்களுக்கு ஒளி வழங்கப் படுகின்றது.
மனம் ;--
மனம் என்பது பேய் பிடித்த குரங்கு போன்றது...அதை சமய மதங்களில் சொல்லிய தியானம்,தவம்,யோகம் போன்ற வழி முறைகளால் அடக்கவே முடியாது.
மனதை அடக்க முடியாது,ஆனால் மனதை மாற்ற முடியும் என்கின்றார் வள்ளலார் .

மனதை அடக்க வேண்டுமானால்,மாற்ற வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .மாற்ற முடியும் மனிதன் மனதை மாற்றியே ஆக வேண்டும் .அதற்குத்தான் சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறைத் தேவைப்படுகிறது .
சுத்த சன்மார்க்க தியான முறைக்கு சத் விசாரம் என்று பெயர் வைத்துள்ளார் ,ஞான சரியை என்றும் வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்.
புறத்தில் திரியும் மனத்தை அகத்தில் செலுத்த வேண்டும்.அதாவது மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் .சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடமாகும்.
அகம் என்பது ஆன்மா ! உள் ஒளியாக இருந்து உயிரையும், உடம்பையும்,இயக்கும் இடமே ஆன்மாவின் ஒளியே யாகும்.. ஆன்மாவை கண்கள் பார்க்க முடியாது,
அலைபாயும் மனத்தை கண்களின் துணைக் கொண்டுதான் உள்ளே செல்ல முடியும்.அப்போது தான் மனம் அடங்கும்.மனம் மாற்றம் அடையும்
கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது .அப்படி செய்வதை வள்ளலார் ....
கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக என்றார் வள்ளலார்
எனவே கண்களைத் திறந்து கொண்டுதான் சுத்த சன்மார்க்க தியானம் செய்ய வேண்டும் .
கண்களை மூடிக் கொண்டால் !

கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால், அளவு இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய்க் குரங்கு... அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் மனத்தை அடக்க முடியும் அதைக் கண்களால் தான் அடக்க முடியுமே தவிர, வேறு எந்த வழியாலும் அடக்க முடியாது.வேறு வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.
உருவங்களை வைத்தோ .உருவங்களைப் பார்த்தோ ,மந்திரம் சொல்லிக் கொண்டோ மணியை எண்ணிக் கொண்டோ தியானம் செய்வதால் எந்தப் பயனும் இல்லை ,அதனால் எந்த பயனும் இல்லை,நன்மையையும் இல்லை,மனமும் அகத்திற்குச் செல்லாது அடங்காது.
அந்த நேரம் எதோ ஒரு சிறிய மகிழ்ச்சி ஆனந்தம் கிடைப்பதுபோல் தோன்றும் ,கொஞ்ச நேரத்தில் அந்த மகிழ்ச்சி,ஆனந்தம் அழிந்துவிடும்,மேலும் மறைந்துவிடும் மேலும் பழைய நிலைக்கே நாம் திரும்பி விடுவோம் .
உருவம் அற்ற ஒளி !
ஆதலால் நம் கண்கள் உருவம் அற்ற, ஒளியை பார்த்து தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ...ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்தது,படித்தது,கேட்டது,செய்தது ,உண்டது,அனுபவித்தது , அனைத்தும் மனம் ...ஜீவன் ,,,வழியாக ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுகள் தான் நினைவு அலைகளாக திரும்பி நமக்கு துன்பமும் ....துயரமும் ......அச்சமும்,...பயமும்,துக்கமும் ,.... நோயும்....இறுதியில் மரணமும் வந்து விடுகின்றது .
அந்த அசுத்த மாயா பதிவுகளை அறவே நீக்கினால் தான் மனம் அமைதி பெரும்,அலைபாயும் மனம் அமைதியடையும்,பின் அனைத்து துன்பங்களும் நீங்கும் .
ஆன்மாவை வெற்று இடமாக மாற்ற வேண்டும்.
அந்த பதிவுகளை அகற்ற சுத்த சன்மார்க்க ஞான தீப ஒளி தியானம் தான் முக்கியமானதாகும். மேலே கூரியபடி தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால்,தீப ஒளி கண்களின் வழியாக உள்ளே சென்று ஆன்மாவை மோதுகின்ற போது அந்த மோதலில் சுத்த உஷ்ணம் உண்டாகும்.
அந்த சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவில் பதிவாகி உள்ள அசுத்த மாயை என்னும் (அறியாமை என்னும் திரைகள் ) திரைகளை கரைத்து விடும்.
திரைகள் கரைந்தால்தான் ஆன்மாவில் உள்ள இயற்கை உண்மை அறிவு வெளிப்படும்,இயற்கை உண்மை அறிவு வெளிப்படும் போது,இயற்கை விளக்கம் என்னும் அருள் சுரக்கும் ,,இயற்கை விளக்கம் என்னும் அருள் சுரந்தால் இயற்கை இன்பம் என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்.
அறிவும்,அருளும் வெளிப்பட சுத்த சன்மார்க்க சத் விசாரம் என்னும் தியானம் அவசியம் செய்ய வேண்டும்.
தடைகள் இல்லாமல் கண்கள் மனம் இரண்டும்,ஜீவன் வழியாக ஆன்மாவை நேரடியாகத் தொடர்பு கொள்ளுவதே ஞான தீப வழிபாடாகும் .அதைத்தான் வள்ளலார் சிற்சபையின் கண் மனத்தை செலுத்துங்கள் என்கின்றார் .
மனம் நேரடியாக சிற்சபையில் உள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ள முடியாது ,,,புறத்தில் உள்ள தீபத்தை கண்கள் வழியாகப் பார்த்து மனத்தை அடக்கி ஜீவன் என்னும் உயிரின் வழியாக ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும் .
அதுவரையில் புறத்தில் சுத்த சன்மார்க்க ஞான தீப ஒளி வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.
புறத்தில் பார்த்து வந்த தீப ஒளியின் உருவம் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்கு அதே கண்கள் வந்து விடும்---பின் .உருவம் கரைந்து அருவமாகும் .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்துவைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் ..இதுதான் சுத்த சன்மார்க்க சத்திய ஞான தீப வழிப்பாட்டு முறையாகும் .
மலம் ஒழிப்பு !
சமய மதங்களில் மலம ஒழிப்பு என்பார்கள் ,சமய மதங்களில் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது ஆணவம் மாயை,கன்மம், என்னும் மூன்று மலங்களை சொல்லுவார்கள். அந்த மலத்தை ஒழிப்பதற்கு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள்,தீட்ஷை கொடுக்கும் தகுதி மனிதர்களுக்கு கிடையாது.
மரணத்தை வென்ற ''வள்ளலார் போன்ற சுத்த பிரணவ ஞான தேகிகளுக்கு மட்டுமே'' சாத்தியமாகும். .
வள்ளல்பெருமான்.. ஐந்து மலங்கள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது என்கின்றார் .
மலம என்பது யாதெனில் ஆணவம், மாயை, கன்மம், மாமாயை, பெருமாயை என்னும் ஐந்து மலங்கள் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள பதிவுகளாகும் அதுவே மலங்களாகும்,
அதற்கு மலம் ஒழிப்பு என்பார்கள்.மலம் ஒழிப்பு என்றால் பதிவு அகற்றம் என்பதாகும். அந்த மலத்தை நீக்குவதற்காக தீட்சை கொடுப்பேன் என்பார்கள் , சாதாரண மனிதர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்

பல சகோதரர்கள்.. விபரம் தெரியாமல் நிறைய பணத்தை கட்டி தேவை இல்லாமல் சென்று தியானம் ...யோகம.... தவம .....காயகல்பம் ...மனவளக்கலை ...குண்டலினி யோகம்..ஈசா யோகம், போன்ற தவறான பயிற்சி முறைகளை கற்று,அதனால் எந்தப் பயனும் இல்லாமல் துன்பப் படுகின்றார்கள்.அப்படி செல்வது அறியாமையாகும்,விபரம் அறியாத மக்களை ஏமாற்றி நிறைய பணம் சம்பாதிக்கும்,மன்றங்களும்,தியானப் பயிற்ச்சி கூடங்களும்,மேலும் நிறைய அமைப்புகளும் நாட்டில் நிறைய உருவாகி விட்டது...
மலத்தை எவராலும் ஒழிக்க முடியாது !
மலத்தை எவராலும் ஒழிக்க முடியாது !
அறியாமையின் செயல்களால் ஆன்மாவில் பதிவான திரைகள் என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது,அகற்றவும் முடியாது. அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்க முடியும்,நீக்க வேண்டும்.வேறு ஒருவரால் ஒழிக்கவும் அழிக்கவும் முடியாது,நீக்கவும் முடியாது என்பதை அறிவால் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்....
தீதும் நன்றும் பிறர் தர வாராது ! என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கத்தாலும்,...சத்விசாரம் என்னும் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும் தியானத்தாலும் மட்டுமே மலம் என்னும் திரைகளை நீக்க முடியும் ,ஒழிக்க முடியும் என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார்.அதனைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தர மக்களும் தெரிந்து கொண்டு சுத்த சன்மார்க்க ஞான சரியை என்னும் ஆன்ம தியானம் செய்ய வேண்டும் .
ஞான சரியையில் 28,பாடல்களில் மரணத்தை வெல்லும் வழியைத் தெளிவாக விளக்கி உள்ளார் .அதிலே இரண்டும் எட்டும் உள்ளது எட்டும் இரண்டும் தனித்தனியாக இயங்கிக் கொண்டு உள்ளது எட்டையும் இரண்டையும் சேர்த்தால் பத்து என்று வருகின்றது,பத்து என்றால் பற்று என்பதாகும்.
உடம்பு என்ற எட்டும் ,உயிர்,ஆன்மா என்ற இரண்டும் சேர்ந்தால் ஒன்றாகி விடும் .ஒன்று என்பதுதான் ஒளி உடம்பாகும் .அதாவது ஆன்ம தேகமாகும். அதைத்தான் வள்ளலார் எட்டோடு இரண்டும் சேர்த்து என்னவும் அறியீர் எத்துணைக் கொள்கின்றீர் பித்து உலகீரே என்கின்றார்.
பிரிந்து விடும் தேகத்தை பிரியாமல் காப்பாற்றுவதே சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறையாகும்.
வள்ளலார் சொல்லியது !
ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் ,உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ,தீபத்தை புறத்தில் வைத்து தடைபடாது, இடைவிடாது ஆராதியுங்கள் என்று தெளிவாக விளக்கி உள்ளார் .ஆதலால் தீபத்தை இடைவிடாது ,கண்களை திறந்து கொண்டு பார்த்து தியானம் செய்ய வேண்டும் .
கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் .
கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .
என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
என்னிரு கண்ணே என் கண்ணுன் மணியே !
கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே
விளங்குகின்ற கற்பூர விளக்கே !
கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே
விண்ணே விணணிறைவே சிவ சிவ தனி மெய்ப் பொருள!
வள்ளலார் வாக்கு !
மேலே சொல்லியபடி செய்து பாருங்கள்,செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும்.ஏதாவது ஒன்று சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும்.அதனால் பல் இளித்து இறுமாந்து கெட நேரிடும் என்று வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார் .
ஆதலால் மேலே கூறிய வண்ணம் சந்தேகம் இல்லாமல் தியானம் செய்து வாருங்கள் .இடைவிடாது தொடர்பு கொண்டு தியானம் செய்பவர்களை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தொடர்பு கொண்டு காப்பாற்றுவார் .
எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிவார் ..
இது சத்தியம்... .இது சத்தியம்,..இது சத்தியம்.
ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித் தரப்படும் .இதுவே சுத்த சன்மார்க்க ஞான சரியை தியானம் செய்யும் முறையாகும் ..
போன் நெம்பர் ;-0424 2401402 -செல் --9865939896 .
உங்கள் அன்பு ஆன்மநேயன் --கதிர்வேல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக