வள்ளலார்
நான் அறிந்த வள்ளலார் ! பாகம் 7,
இராமய்யா வீடு !
வெய்யில் ''சுள் ''ளென்று அடிக்கிறது .வீட்டு வாசலில் சின்னம்மை நெல்லை உலர்த்திக் கொண்டு இருக்கிறார் .நெல்லைக் கொத்தித் தின்னவரும் பறவைகளை---சிறுமிகள் சுந்தராம்மாள் உண்ணாமலையும் சிறு கம்மை கையில் வைத்துக் கொண்டு விரட்டிக் கொண்டு இருக்கின்றனர் .
வீட்டுத் திண்ணையில் ---
''இன்று கர்ணம் இராமய்யா மவுனவிரதம் ''
என்று எழுதி வைக்கப்பட்ட ஒரு அட்டை வைக்கப் பட்டு உள்ளது ,
தல்யாரி தருமன் பின்னலூரைச் சேர்ந்த பணக்காரரான இராமசாமி படையாச்சி என்பவரைக் கூட்டிக் கொண்டு அங்கு வருகிறான் .
''கும்பிடறேன் தாயீ ...''
குரல் கேட்டு நிமிர்ந்த சின்னம்மை ..அடுத்த ஆடவர் முன் சங்கோசப்பட்டு ..வாசல்படி அருகில் போய் நின்று கொண்டு ''இவங்க யாரு ''? என்று கேட்கிறார்
அதற்கு தருமன் ....
இவங்க பின்னலூர் ங்களாம்...பெரிய காசுகாரங்கோ தாயீ ...நம்ம கர்ணம் அய்யாவைப் பார்க்கனும்னு பொழுது கிளம்பறப்பவே ...மணியக்காரர் வீட்டுக்கு வந்தாக ...அவுங்கதான் இங்க கூட்டிகிட்டுப் போடான்னாரு''
அதற்கு சின்னம்மை ....
''இன்னிக்கு அவுங்க மவுன விரதம் இருப்பாங்கன்னு தெரியாதா உனக்கு ?''
தெரியும் தாயீ ..இன்னிக்கு யாருகிட்டேயும் பேசமாட்டாங்கின்னு தெரியும் தாயீ''மணியம் பேச்சை மீற முடியாம அழைத்து வந்துட்டேன் ,மன்னிக்கணும் .
என்று தருமன் சொன்னவுடன் ''அவுங்கள திண்ணையில் உட்காரச்சொல்லு ''என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறார் சின்னம்மை .
''உட்காருங்க சாமீ ''...என்ற குரல் கேட்டவுடன் ..இராமசாமி படையாச்சி உட்காருகிறார் .அவர் அருகில் ''இன்று கர்ணம் மவுனவிரதம் ''எனறு எழுதி வைக்கப்பட்ட அட்டை இருக்கிறது ..அதைப்பார்த்த இராமசாமி படையாச்சி தன் தலையில் அடித்துக் கொள்கிறார்.
தலையாரி தருமன் திண்ணையைத் தள்ளி ஓரமாக உட்கார்ந்து கொள்கிறான் .
சின்னம்மை தண்ணீர் தர அதை வாங்கி இராமசாமி படையாச்சி குடிக்கிறார் ...
''அவங்க ..என்ன விஷயம்னு கேக்கச் சொன்னாரு...'என்று சின்னம்மை கேட்கிறார் .
இராமசாமி படையாச்சி ....''ஒண்ணுமில்லே...எனக்கு நெறைய சொத்துப் பத்து இருக்குது ...பின்னலூர்ல ஒரு வசதியான குடும்பம் இருக்குதுன்னா அது எங்க குடும்பம்தான் !...சிதம்பரம் வரை எங்க ஆதிக்கம் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் !..என்று தன்னுடைய மீசையை நீவுகின்றார் ...
பூசை அறை !
பூசை அறையில் படித்துக் கொண்டு இருந்த இராமய்யா ..இராமசாமி படையாச்சியின் தற்பெருமை நிறைந்த பேச்சுகள் அவருடைய காதில் விழுகிறது .வாசல் பக்கம் திரும்பி பார்க்கிறார் .மீண்டும் இமாசாமி படையாச்சியே பேசுகிறார் .
''மருதூருக்கு வடக்கே ஐம்பது ,அறுபது ஏக்கர் நிலம் ..புறம்போக்கா ,அனாமத்தாக கெடக்குதாம்....எங்க பண்ணையில் வேலைப் பாக்கிற ஆளுங்களுக்கு அந்த நிலங்கள பிரிச்சிக் குடுக்கணும் ...''என்று அவர் கூறியவுடன் ...
''அதுக்கு அவுங்களே வந்து இவங்ககிட்டே கேட்டா பரவாயில்லை ...நீங்கமட்டும் வந்து இருக்கிங்க ?...என்று சின்னம்மை கேட்டவுடன் ...''நிலம் உண்மையிலே அவுங்களுக்கு இல்லைங்க ...பட்டா அவுங்க பேருக்கு வந்தவுடனே....அவுங்ககிட்டே இருந்து நான் ..என் பெயருக்கு கிரயம் பெற்றுக் கொள்வேன் ....
அந்த பூமி எனக்கு எதுக்குன்னா... அந்த இடத்திலே மாட்டுப் பண்ணை ஒன்றை நடத்தலாம் எனற ஒரு அபிப்பிராயம் ....இந்த திட்டத்தை மணியத்துகிட்ட சொல்லிவிட்டேன் ...சொல்லியதோடு கையோட அவருக்கு {வாய்கரிசியும் }லஞ்சம் ..போட்டுட்டேன் ....எவ்வளவு நிலம் பொறம்போக்கா இருக்கு என்கிற கணக்கு எல்லாம் நம்ம கணக்கு பிள்ளைக்குத்தான் தெரியுமாம் ....
அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன் .....அய்யாவை கொஞ்சம் ஒத்துப் போகச் சொல்லுங்க,....அம்மா கழுத்துல துளி பொன்கூடஇல்லை ..குழந்தைங்க காதிலும் தொங்கட்டான் இல்லை ...அச்சாரமா அதை செஞ்சி போட்டுவிடலாம்னு பார்க்கிறேன் ...!என்று கூறி முடிக்கிறார் இமாசாமி படையாச்சி ....
அதற்கு சின்னம்மை ....
இது ஏமாத்து வேலை இல்லையா ?என்று கேட்க ...
''அப்படித்தான் வெச்சுகுங்களே...'' என்று சொல்கிறார் .
''கும்பிடுறேன் சாமீ ''என்ற குரல் கேட்டு வாசல் பக்கம் அனைவரும் திரும்பிப் பார்க்கின்றனர் ....அங்கே ...இராமய்யா கையை பின்புறம் கட்டியவாறு இமாரய்யா நின்று கொண்டு இருக்கிறார் .
''வாங்க...வாங்க கர்ணம் '' என்று படையாச்சி சொன்னவுடன் ...வணங்குவது போல் இராமய்யா தலையை ஆட்டுகிறார் .
''நான் வந்த விஷயம் ...என்று படையாச்சி இழுக்க கையமர்த்தி நிறுத்தச் சொல்கிறார் .
நான் இதுவரைக்கும் சொன்னது உங்கள் காதில் விழுந்து இருக்கும் என நினைக்கிறேன்...
இராமய்யா ஆமென தலையை அசைக்கிறார் .மெல்லென புன்னகை செய்கிறார் ....படையாச்சியும் சிரிக்கிறார் ....
''அப்போ ...காரியம் பழம் தான்னு சொல்லுங்கோ !..அந்தநேரம் பார்த்து குழைந்தைகள் விளையாட்டு குரல் கேட்கிறது .
''போடி.....காயீ ....எங்கூட பேசாதே ''..என்ற குரல் வந்த பக்கம் பார்க்கின்றனர் .
''நீ அழுவுனி ஆட்டம் ஆடறவ ...எங்கூட சேராதே ...! ''என்று உண்ணாமலையை சுந்தரம் திட்டுகிறார் !
இங்கே ...
குழைந்தைகள் பேசியதையே பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள் ..என்று கூறுவது போல் இமாய்யா ....படையாச்சியைப் பார்க்கிறார் .
''கர்ணம் பதில் சொல்லவில்லையே ...?
படையாச்சி கேட்கும்போது .....இராமய்யா ,தனக்குப் பின்புறமாக கைகளில் மறைத்து வைத்திருந்த அட்டையை அவருக்குக் காட்டுகிறார் .
அந்த அட்டையில்.....
கோடிப் பொன் கொடுத்தாலும் மனசாட்சிக்கு விரோதமாக நடக்க மாட்டேன் !..என்று எழுதி இருப்பதை படையாச்சியிடம் காட்டுகிறார் .
இராமசாமி படையாச்சி அசடு வழிய ...தருமனைப் பார்க்கவே ...தருமன் தலையை வேறு பக்கமாகத் திருப்பிக் கொள்கிறான் ,..படையாச்சி ஒன்றும் பேசாமல் கோபமாக எழுந்து சென்று விடுகிறார் .
அந்த நேரம் காகங்கள் கா ,,,கா ,,,என்று கரையும் கூட்டம் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.சின்னம்மை ...ஒரு தட்டிலில் காக்கைகளுக்கு உணவு வைத்துக் கொண்டு உள்ளார் ..குழைந்தைகள் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டு உள்ளார்கள்...
மருநாள் காலை இமாய்யா வீடு !
தடித்த மேனியும் .முறுக்கு மீசையும் கொண்ட மணியக்காரர் ....திண்ணையில் விரித்து இருக்கும் பாயில் அமர்ந்து இருக்கிறார் .
அவர் அருகில் அமர்ந்து இராமய்யா ஏதோ கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார் ....தலையாரி தருமன் ...சற்று தள்ளி ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு இவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டு உள்ளான்.
இராமசாமி படையாச்சி வந்த விஷயமாக அவர்கள் பேசுகின்றனர் .
''என்ன வோய்.....அந்த பின்னல் ஊர்க் காரனை மூஞ்சியில் அடிச்ச மாதிரி வெரட்டி விட்டு விட்டீங்களாமே ? சும்மா கிடக்கிற பூமியை யாருக்காவது கையைக் காட்டிவிட்டு ,,,,வர்ர ஆதாயத்தை வாங்கி யாருக்கும் தெரியாமல் பையில் போட்டுக்கிட்டு போக வேண்டியதுதானே ?....
மணியக்காரர் இதைச் சொன்னவுடன் ..இமாய்யா .....''எனக்கு என்னவோ அது அவ்வளவு நல்லதாய் படலிங்க....மனசாட்சியை வித்துவிட்டு அதுல வர்ர வருமானத்துல .கஞ்சி குடிக்கிரதைவிட ,,,அப்படி வாழ்வதை விட நாண்டுகிட்டு சாகலாங்க ....என்கிறார் ..நம்மள நம்பி அரசாங்கம் நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்காங்க ,,தொழில் துரோகம் செய்வது அதைவிட பெரிய குற்றங்க ....நம்ம பணியில் நாம் நேர்மையாகவும் .ஒழுக்கமாகவும் இருக்கவேண்டும் .அப்போதுதான் ஊர் மக்கள் நம்மை மதிப்பார்கள்.கடவுளுக்கும்,மனசாட்சிக்கும் நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று இராமய்யா உருக்கமுடன் சொல்லுகிறார் .
மணியக்காரர் முகம் தொங்கி விடுகிறது ....அதை மறைக்க ''நீர் தேற மாட்டீர் வோய் .....''என்று சொல்லிவிட்டு ..வேறு விவகாரமாய் பேச முற்படுகிறார் .
''ஆமாம் ..இந்த பட்டம் கிஸ்தி எல்லாம் ஒழுங்கா வசூலாகலே போல
இருக்கே ?....
''என்ன பண்றது ...மழையே இல்லாம ஜனங்கள் உணவுகூட இல்லாம மடியராங்க ...கிணறு எல்லாம் வரண்டு கெடக்குது ...கால் நடைகளுக்குத் தீவனம் இல்லை ,..விவசாயிங்க என்ன பண்ணுவாங்க ...''
அதற்கு மணியக்காரர் ....''இப்படி தருமம் ,நியாயம் பார்த்தா ...நம்ப தலை தப்பாது கர்ணம் !....அவங்க பூமி விளைஞ்சா..நமக்கு என்ன ?விளையலன்னா நமக்கு என்ன ? வரியக் கட்டலன்னா !...மாடு,கண்ணே பிடிச்சு வந்திட வேண்டியதுதான் ,...இல்லே ,வீட்டு நெலவு காலு ,கதவோ பேத்தர வேண்டியதுதான் .....
நாம ஏங்க அந்த வேலைய செஞ்சு அவங்க பாவத்தைக் கொட்டிக்கணும் ?....இப்ப இருக்கிற நம்ம ஊர் நிலைமையை கலைக்டருக்கும் ...தாசில்தாருக்கும் சொல்லி ....வரிக் கட்டறத்துக்கு அடுத்த போகம் வரைக்கும் வாய்தா கேட்டாப் போவுது ....''
''குடுப்பாரா அந்த கலெக்டரு ?...அந்த வெள்ளக் காரமவன் ...மூக்குலே தும்பச் சாறை விட்டுருவார் ஐயா .....என்னமோ செய்யுங்கோ ...''என்று கூறிவிட்டு ,மணியக்காரர் அங்கிருந்து எழுகிறார் ..இராமய்யாவும் எழுகிறார் .
ஊர் மக்கள் !
அந்த வழியே விவசாயிகள் கும்பலாகப் போகிறார்கள் .அந்தக் கும்பலில் ஆண்கள் பெண்கள்,குழைந்தைகள் இருக்கிறார்கள்.
மணியக்காரர் அங்கு வருகிறார் ,அவர்களைப் பார்த்து ...''எங்க கும்பலா போறீங்க ?...என்று கேட்கிறார் .
கூட்டத்தில் ஒருவன் .....ஊர்ல காடு கரை எல்லாம் காஞ்சி போச்சிங்க ..பொறந்த பிள்ளைய அலம்பக்கூட தண்ணீர் இல்லைங்க ...ஆடு .மாடும் தீனி இல்லாம செத்து மடியுதுங்க ...இங்கே இருந்து சாகிறத விட ,கடலூர் ,பாண்டி பக்கமா போயி ஏதாவது கூலிவேளை.பாத்தாவது வயித்தைக் கழுவலாம்னு தான் போறோம் என்கிறான .
மணியக்காரர் அதற்கு பதில் சொல்கிறார் .....
இங்க பாருங்கப்பா ..இது ,ஏதோ சாமியோட கோபந்தான் போல இருக்குது ....எதுக்கும் வர்ர வெள்ளிக்கிழமை நம்ம ஊரு மாரியாயிக்கு பூசை பண்ணி அருள்வாக்கு கேட்கலாம் ...ஆத்தா நிச்சயம் நம்மை ஏமாத்த மாட்டா ...மனச மாத்திக்கிட்டு திரும்பி எல்லோரும் அவங்க அவங்க வீட்டுக்கு போங்க....ஊரைவிட்டு போகிறத பத்தி பின்னாடி யோசிக்கலாம் ...போங்கப்பா ...என்று ஆறுதல் படுத்தி அனுப்பி வைக்கிறார்...அனைவரும் மணியக்காரர் பேச்சைக் கேட்டு திரும்புகின்றனர் .
இராமய்யா...மணியக்காரரைப் பார்த்து ,..இப்படி நொந்து போய் இருக்கிற ஜனங்ககிட்ட ...எங்கே போயீ விவசாய வருமான வரி கேக்கறது ? அவங்க வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு நல்ல வழியைக் காட்டவேண்டும் ..அவங்கள நம்மதான் காப்பாத்தணும் தெரிஞ்சிதா !..
சிறிது நேரம் அமைதிக்குப்பின் ...'''இப்படி ஒரு சோதனை ...நம்ம மருதூருக்கா வந்து சேரணும்.? என்று மணியக்காரர் .வேதனையோடு மனதில் உள்ளதைக் கொட்டுகிறார் ....வேதனையோடு அவர் பார்வை வானத்தை நோக்குகிறது .வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.
மீண்டும் பூக்கும் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக