அன்பு கடிதம் !
ஆனமநேய அன்புடைய நண்பர் களுக்கும் வாசக பெரு மக்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் .பேஸ்புக்கில் எதோ எழுத வேண்டும் என்பதற்காக நான் எழுதுவது இல்லை மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உண்மையான கருத்துக்களை தொகுத்து வழங்கி வருகிறேன் அதில் எந்த குற்றம் குறைகள் இருக்காது ,அப்படியே இருந்தாலும் ,நல்லதை எடுத்துக் கொண்டு அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும் நான் அதிகமாக திரு அருட்பிரகாச வள்ளலாரின் கருத்துக்களை வெளியிடுகிறேன் ஏன் என்றால் அவர்தான் உலக ஒருமைப்பாடு என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை உலக மக்களுக்காக வெளிப் படுத்தி உள்ளார் .உலக மக்கள் அனைவரும் ,சாதி,சமயம்,மதம்,இனம்,மொழி,நாடு,என்ற வேறுபாடு இல்லாமலும்,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,என்னும் மூட நம்பிக்கையில் இருந்து வெளியே வரவேண்டும் .மனிதன் மனிதனாக வாழ வேண்டும்.உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லாத பொதுவான சமுதாயம் உருவாக வேண்டும்.எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்,அனைவரும் சம நோக்குடன் வாழ வேண்டும்,பொருளாதாரம் சம நிலையில் இருக்க வேண்டும் ,இறைவன் படைப்பில் அனைத்தும் பொதுவாகவே உள்ளது ,அதே போல் அனைத்தும் பொதுவாகவே பகிர்ந்து கொள்ளவேண்டும்,நாம் எதையும் கொண்டு வரவில்லை,கொண்டு போவதும் இல்லை அதை உணர்ந்து மனித சமுதாயம் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பது போன்ற பல உயர்ந்த கொள்கைகளை வள்ளலார் மக்களுக்காக வழி வகுத்து தந்துள்ளார் ,
அதனால்தான் வள்ளலாரை எனக்கு மிகவும் பிடித்துள்ளது ,வேறு தனிப்பட்ட முறையில் எந்தவித பற்றுதலும் இல்லை என்பதை அனைவருக்கும் தெரியப் படுத்திக் கொள்கிறேன்.அது மட்டும் அல்ல உலகில் கடவுள் கொள்கையால் மக்கள் பிரிந்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் ,உலகத்திற்கு கடவுள் ஒருவர்தான் ,அவர் அருள் ஒளியாக உள்ளார் அவர் அருட்பெரும்ஜோதி யாக உள்ளார் ,கடவுளுக்கு கற்பனை உருவங்கள் கிடையாது ,கருணை உள்ளவர் கடவுள்.நாமும் கருணையுடன் வாழ்ந்தால் கடவுள் நமக்கு எல்லா வகையிலும் கருணையுடன் துணையாக இருப்பார் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளலார் ,மனிதனுக்கு முதலில் ஒழுக்கம் மிகவும் முக்கியமானதாகும் ,அவை இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்பதை விரிவாக தெரியப் படுத்தி உள்ளார் ,உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒழுக்கமுடன் வாழ வேண்டும்.அப்போது உலகமே ஒழுக்கமுடன் இருக்கும் ,அமைதியான உலகத்தை மனிதர்கள்தான் படைக்க முடியும். அதற்கு வேண்டியது எல்லா உயிர்களையும் தம உயிர் போல் பாவிக்கும் ஒருமை வர வேண்டும்.அந்த ஒருமையில் தான் உலகம் ஓங்க வேண்டும் .-என்பன போன்ற உன்னதமான உண்மைக கருத்துக்களை வள்ளலார் வாரி வழங்கி உள்ளார் .
உயிர்க்குலம் அனைத்தும் நலமுடனும்,மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்பதே வள்ளலாரின் கொள்கை களாகும் வள்ளார் காட்டிய வழியில் வாழ்ந்து மனித குலம்,புனித குலமாக மாறி புதிய சமுதாயம் உருவாக்குவோம்.நம்மை எல்லாம் இனைத்து வைத்துள்ள பேஸ்புக்கிற்கு,அநேக கோடி வந்தனம்.
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
என்றும் உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக