மனிதன் யார் ?
சென்னையில் வள்ளலார் வாழ்ந்து வந்த வீடு ஏழுகிணறு வீராசாமி வீதி 38, ஆம் வீடாகும் அங்கு இருந்து திருவொற்றியூர் கோவிலுக்கு நேரடியாகத் தேரடித் தெரு வழியாக செல்வது வழக்கம்.ஒருநாள் அவ்வழி செல்லாது தெற்கு புறம் உள்ள மாடவீதியில் உள்ள நெல்லிக்காய் பண்டாரச் சாலை வழியாக தரிசனம் செய்யச் சென்றார் .அவ்வீதியில் நெடுநாட்களாய் ஒரு திண்ணை மீது ஒரு நிர்வாண சந்நியாசி இருந்தார் .அவர் போகிறவர்களையும் வருகிறவர்களையும் ,நாய் போகிறது ,நரி போகிறது,மாடு போகிறது,பாம்பு போகிறது ,தேள் போகிறது ,பன்றி போகிறது,யானை போகிறது,சிங்கம் போகிறது ,கழுதை போகிறது, என்று ஒவ்வொரு மனித உருவங்களைப் பார்த்தும், மிருகங்களாக பாவித்து தூற்றிக் கொண்டே இருப்பார் .
மனிதர்கள் மனித குணம் இல்லாமல் மிருக குணம் படைத்து இருப்பதால் .மிருகங்கள் முன்னாள் ஆடை அணிய விருப்பம் இல்லாமல் இருந்தார்.ஒருநாள் அந்த வழியாக வள்ளலார் வந்தார் .வெகுதொலைவில் வள்ளலார் வருவதைப் பார்த்து ,அதோ ! ஒரு உத்தம மனிதர் வருகிறார் என்று கூறிவிட்டு உடனே தன் கைகளால் தன்னுடைய அவையங்களை மறைத்து நடுங்கிக் கொண்டு பதைப்பதைத்து கூணி,குறுகி ,ஒளிந்து கொண்டு மறைவாக நின்றார் . அங்கு உள்ள மக்கள் அந்த காட்சியை ஆச்சர்யமாகவும் ,அதிசியமாகவும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .
அந்த நிர்வாண சன்னியாசியை கவனித்த வள்ளலார், அவர் அருகில் சென்று , தன்மேல் போற்றி இருந்த அவருடைய ஆடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொல்லி .நீங்கள் இங்கு இருக்க வேண்டாம், ஊரை விட்டு வெளியே சென்று தனிமையில் இருங்கள். இடைவிடாது இறைவனை நினைந்து வழிபடுங்கள், உங்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார் .வள்ளலார் சொல்லியபடியே அவர் அங்கிருந்து சென்று விட்டார் .இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?
மனிதனாக பிறந்தவர்களுக்கு அச்சம் ,நாணம், மடம், பயிர்ப்பு .போன்ற நல்ல குணங்கள் இருக்க வேண்டும் மனித .ஒழுக்கம்,இருக்க வேண்டும் எல்லா உயிர்கள் இடத்தும் அன்பு,தயவு,கருணை,இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அவை மனித குணமாகும் .மனித குணம் இல்லாத மனிதர்களைப் பார்த்து மனித உருவில் உள்ள மிருகங்களாக நிர்வாண சந்நியாசி பார்த்தார் ,மிருகங்கள் முன் ஆடை அணிய தேவை இல்லை என்பதை உணர்ந்த அவர் ஆடை இல்லாமல் இருந்தார் என்பது விளங்குகிறது .
இவ்வுலகில் உயர்ந்த அறிவு உடைய தேகம் மனித தேகம் .உயர்ந்த அறிவுள்ள தேகம் கொடுத்த அருட்பெரும் ஜோதி ஆண்டவருக்கு என்ன கைம்மாறு செய்துள்ளோம் என்பதை ....நினைந்து நினைந்து..உணர்ந்து உணர்ந்து ,...நெகிழ்ந்து நெகிழ்ந்து...அன்பே... நிறைந்து நிறைந்து,..ஊற்று எழும் கண்ணீர் அதனால் .அழுது ...உடம்பு முழுதும்..நனைந்து போற்ற வேண்டும் .
உயர்ந்த பிறப்பாகிய மனித தேகப் பிறப்பு எடுத்துக் கொண்ட நாம்,உயர்ந்த பதவியைப் பெற்றுக் கொள்ள தகுதிப் படைத்தவர்கள் .அந்த உயர்ந்த பதவி என்னவென்றால்... ''கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்'' அதாவது மரணத்தை வென்று கடவுள் இருக்கும் இடம் செல்வது .(அருட்பெருவெளி )அதற்குப் பெயர்தான் ..மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும் .
முதலில் மனிதன் ...மனிதனாக வாழ்வோம் எல்லா உயிர்களையும் நேசிப்போம். வள்ளலார் காட்டிய பாதை.. மனிதன் மனிதனாக வாழும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய'' பாதையாகும். உண்மை ஒழுக்கமான இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம்,போன்ற நான்கு வகை ஒழுக்கங்களை கடை பிடித்து, சத்தியம், நேர்மை ,வாய்மை,தூய்மை சமரசம், உயிர் இரக்கம்,அகிம்சை,கொல்லாமை,புலால் உண்ணாமை, ''கடவுள் ஒருவரே'' .......''அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ''....என்று அறிகின்ற உண்மை அறிவு,....சாதி,சமயம் ,மதம்,இனம்,நாடு,மொழி ,எனற எந்த வேறுபாடும் இல்லாத ஒருமைப்பாடு ....எதிலும் பொது நோக்கம்,....எல்லா உயிர்களும் கடவுளின் ஏகதேசங்கள் என்னும் ஆன்மநேய ஒருமைப்பாடு, இதுவே மனிதன் மனிதனாக வாழும் வாழ்க்கையாகும் .
இதற்கு மேல் மரணத்தை வெல்லும் வாழ்க்கை மிகவும் உயர்ந்தது கடினமானது,ஆன்மாவை கடவுள்,ஆன்ம பரிசோதனை செய்து மேல்நிலைக்கு கொண்டு செல்வதாகும் ,நாம் அனைவரும் முதலில் மனிதனாக வாழ பழகிக் கொள்ள வேண்டும் ,வள்ளலாரைப் போல் முதலில் மனிதனாக வாழ்வோம் .பின் மரணத்தை வெல்லும் வழியை ஆண்டவர் காட்டிக் கொடுப்பார் . இதை கடை பிடிப்பவர்களே மனிதர்களாகும் .
மனிதனாக வாழும் சன்மார்க்க சட்டதிட்டங்கள் !
1) கடவுள் ஒருவரே !அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !
2,) சிறு தெய்வ வழிபாடு செய்யக் கூடாது !
3,) தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது !
4,) புலால் (மாமிசம் ) உண்ணக் கூடாது !
5,) சாதி,சமயம்,மதம்,இனம்,நாடு,மொழி,முதலிய வேறுபாடுகள் கூடாது !
6,) எவ்வுயிரையும் தம் உயிர் போல் என்னும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு
உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் !
7,) ஏழைகளின் பசியை தவிர்க்க வேண்டும் !
8,) ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் !
9,) புராணங்களும் ,இதிகாசங்களும், சாத்திரங்களும் ,வேதங்களும் ,கற்பனைக் கதைகள் ,அதில் முழுமையான உண்மை இல்லை என்பதை உணர்ந்து தவிர்க்க வேண்டும்.!
10,) ஜீவ காருண்யமான உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு !
11,) இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்கள் அதனால் புதைக்க வேண்டும் ,
எரிக்க கூடாது,எரித்தால் அதுவும் கொலையாகும் !
12,) கருமாதி ,திதி ,முதலிய கடங்குகள் வேண்டாம் !
13,) எதிலும் பொது நோக்கம் வேண்டும்.!
14,) மண்ணாசை ,பொன்னாசை ,பெண்ணாசை போன்ற ஆசைகளில் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் .!
15,) கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது ! மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது !
மேலே கண்ட கொள்கைகளை முழுமையாக கடைபிடிக் கின்றவர்கள்,மனித பிறப்புக்கு தகுதி உடையவர்கலாகும் .அவர்களே மனிதர்கள் ! அவர்களே சுத்த சன்மார்க்கிகள் !.அவர்களே வள்ளலார் வழியைப் பின் பற்றுபவர்கள்!.அவர்களே மரணத்தை வெல்லும் வழியைக் கண்டவர்கலாகும்.
உங்கள் அன்புள்ள ஆன்மநேயன் ;--கதிர்வேலு..கைபேசி ;--9865939896,....
மேலும் பூக்கும் .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக