வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் யாவும் பொய்யே !
வேதம் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் .வேதாகமத்தின் விளைவை அறியீர் ,சூதாக சொன்னது அலால் உண்மை வெளித் தோன்ற உரைக்கவில்லை என்ன பயனோ இவை ;--என்கிறார் வள்ளலார் --பொய்யான கற்பனைக் கதைகளை கட்டி மக்களை படுகுழியில் தள்ளிவிட்டது .அதனால் அவைகள் அனைத்தையும் வழி துறை தெரியாமல் ஆழமாக குழியை வெட்டி புதைத்து விடுங்கள் என்கிறார்
சாதி குலம் என்றும் சமய மதம் என்றும் உப நீதி இல்லா ஆச்சிரம நீட்டு என்றும் --ஓதுகின்ற பேய் ஆட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்தனவே பிறர் தம் வாயாட்டம் தீர்ந்தனவே-- மற்றும் உள்ள யாவும் என்கிறார் வள்ளலார், இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டுயது என்ன ?சமய மதங்கள் யாவும் பொய்யே சொல்லி வைத்துள்ளன .அதனால் மக்கள் பொய்யை உண்மை என்று நம்பி ஏமாந்து விட்டார்கள் இனிமேல் பொய் செல்லாது .மக்கள் விழித்துக் கொண்டார்கள் .மக்களை ஏமாற்ற முடியாது ,இது விஞ்ஞான உலகம் .உண்மையை உண்மை என்று உணரும் வரை ஏற்க மாட்டார்கள் .இப்போது உள்ள மக்கள் யாவரும் புத்தி சாலிகள் என்பதை மறந்து விடக்கூடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக