அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 21 மார்ச், 2012

உலக மக்கள் இனிமேல் எப்படி வாழ வேண்டும் ?


உலக மக்கள் இனிமேல் எப்படி வாழ வேண்டும் ?



1874,ஆம் ,ஆண்டு வரை கர்ம சித்தர்கள் காலம் ,அதனால் சாதிகளும், சமயங்களும் ,மதங்களும் பரவி இருந்தன .இப்போது நடந்து கொண்டு இருப்பது ஞான சித்தர் காலமாகும்..

இனிமேல் சாதி,சமயம்,மதம் ,முதலிய ஆசாரங்கள் எல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே விளங்கும் .சமய மதங்களில் சொல்லுகிற ,கர்த்தர்கள்,மூர்த்திகள் ஈசுவரன்,பிரமன்,சிவம்,முதலிய தத்துவங்கள் எல்லாம் பொய் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ஏன் என்றால் சமய ,மதங்களில் ,சொல்லி வந்த கர்ம சித்தர்களின் காலம் முடிந்து விட்டது அவர்கள் கடவுளின் முழுமையான அருளைப் பெற வில்லை,- லேசான அருளைப் பெற்றதால் --அவர்களுக்கு மேலான ஞான சித்தியைப் பெற்றவர் வரும்போது அவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் .இதுதான் அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய கட்டளையாகும் .

இப்போது ஞானசித்தியைப் பெற்றவர் வள்ளலார் அவர்களாகும் அவர் கடவுள் நிலை அறிந்து அம்மயமானவராகும் .ஆதலால் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வள்ளலார் அவர்களிடம் இவ்வுலகப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் இனிமேல் வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய கொள்கைகள் தான் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் .இது இறைவன் கட்டளையாகும் .

ஆதலால் இப்போது இருக்கும் வேதம் ,ஆகமம் ,புராணம், இதிகாசம் சாத்திரங்கள் எதனிலும் பற்று வைக்க வேண்டாம் அப்படி வைத்தால் உண்மையான கடவுள் நிலையை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.ஆதலால் அவைகளை முழுவதையும் பற்று அற விட்டு சர்வ சித்தி உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் ஒருவரே ''அருட்பெரும் ஜோதியர் ''என்றும் உண்மை அன்பால் வழிபாடு செய்யவேண்டும் .

அப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு உரிய கடவுளை வழிபாடு செய்வதற்கு சாதனம் இருவகையாகும் .

ஒன்று ;--பர உபகாரம் அதாவது உயிர்கள் இடத்தில் இரக்கம் காட்டுவது. இரண்டாவது ;--சத் விசாரம் என்பதாகும் .
பர உபகாரம என்பது ,;-உயிர்களுக்கு தேகத்தாலும்,வாக்காலும்,திரவியத்தாலும் உபகாரம செய்வது.

சத் விசாரம் என்பது ;--நேரிட்ட மட்டில் ஆன்மநேய சம்பந்தமான தயவு விசாரத்தொடு இருப்பது,கடவுள் புகழை விசாரித்தல்,ஆன்மாவின் உண்மையை விசாரித்தல் ,தன் சிறுமையை கடவுள் இடத்தில் விண்ணப்பித்தல் ,இந்த மார்க்கத்தால் தான் நாம் மனிதர்களாக வாழ்ந்து சுத்த தேகம் ,பிரணவ தேகம் ,ஞான தேகம் .என்ற முத்தேக சித்தியை பெற முடியும் .

இவை வள்ளலார் அவர்கள் உலக மக்களுக்கு சொல்லி வைத்த கட்டளையாகும் .இனிமேல் கலைஉரைத்த கற்பனைக் கதைகளை நிலை எனக் கொண்டாடும் கண் மூடிப் பழக்கத்தை விட்டு உண்மையை அறிந்து கொண்டு நலமாக வாழ்வோம் .

இப்போது நடப்பது, நடந்து கொண்டு இருப்பது,தடை இல்லாதது ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய காலமாகும் ,அதாவது ஞான சித்தர் காலமாகும் .அந்த ஞானசித்தர் வள்ளலார் அவர்களாகும் .

உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக