அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 20 பிப்ரவரி, 2012

நான் அறிந்த வள்ளலார்1பாகம்.1,

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !

காட்சி ;;1,

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !

கதிரவனின் பொன் ஒளிப்பட்டு வடலூரில் எழுந்தருளி இருக்கும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கொலுவிருக்கும் ''ஞான சிங்காதன பீடம்'' ''சத்திய ஞானசபை'' அழகையே ஆடையாக அணிந்து ஜொலித்துக் கொண்டு இருக்கிறது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையும்,பசித்தவர்களுக்கு அன்னம் அளிக்கும் அட்சயப் பாத்திரம் போல் மங்கள கரமாகத் தோற்றம் அளிக்கிறது.

''சத்திய ஞான சபை வடலூர் ''என்ற அழகிய எழுத்துக்களைத் தாங்கி நிற்கும் அலங்கார வளைவில் இருந்து என்னுடைய அகக் கண்ணின் காட்சி ஆரம்பமாகிறது..

தில்லை அம்பலம் என்கிற பூர்வ ஞான சிதம்பரத்தில் --நடராஜப்பெருமான் ஒரு அம்பலத்தில் இருந்து நடனம் ஆடுகின்றார் .

இங்கே உத்தரஞான சிதம்பரம் என்னும் வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெரும்ஜோதி என்னும் நடத்தரசர் சிரமம் இன்றி நடனமாட எட்டு அம்பலம் இருக்கிறது.

அதன் விளக்கமே --எண்கோண வடிவம் ! அதனை சுற்றிலும் ,எங்கிருந்து நோக்கினும் அருட்பெரும்ஜோதி தரிசனம் தெரிந்திட எட்டு அம்பலம் எழிலுற இலங்குகிறது.ஞானசபையை சுற்றிலும் பறந்து விரிந்து இருக்கும் அருட் பெருவெளியின் அழகிய தோற்றம்.

தைப்பூசத் தினத்தில் லட்சக் கணக்கான மக்கள் எட்டு அம்பலத்தின் வழியாக அருட்பெரும்ஜோதியின்,ஞான சிங்காதன பீடத்தை கண்டு களிக்கும் அற்புதக் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.அங்கே ஒலிக்கும் மகா மந்திரம்

''அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி!தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி ! ''

என்பதாகும்..

காட்சி ;--2,

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை !

பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதுதான் உண்மையான கடவுள் வழிபாடு,என்னும் உயரிய நெறியை நடைமுறைப் படுத்த ஏற்படுத்தப் பட்டது தான் சத்திய தருமச்சாலையாகும்.இங்கே சாதி,சமயம்,மதம்,இனம்,மொழி ,நாடு போன்ற எந்த வேறுபாடும் இல்லாமல் உணவு வழங்கப்படுகிறது..

தருமச்சாலையின் மையப்பகுதியின் நடுவே -திருஅருட் பிரகாச வள்ளலார் ஒளி வெள்ளத்தின் நடுவே திரு உருவாய் கொலு மொம்மைப் போல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

வழிபாடும் நடக்கிறது !
பாராயணம் பரவசமாய் ஒலிக்கிறது. !

அடுத்து தானிய உண்டியல்கள் ;--அதன் அருகே ஜீவகாருணயம் குறித்து வள்ளல பெருமான் குறிப்பிட்ட பொன் மொழிகள் தாங்கிய விளம்பர அட்டைகள் சுவரில் மாட்டப்பட்டு இருக்கிறது.

சாலையில் அன்னதானம் தடைபடாமல் நடக்க ,பொருட்களாகவும் --பணமாகவும் ,வாரி வழங்கிய வழங்கிக் கொண்டு உள்ள தயவு, இரக்கம் உள்ள வள்ளல் பெருமக்களின் பெயர்களின் பட்டியல் தெரிகிறது.

அடுத்து தருமச்சாலைக்குள் வள்ளல பெருமான் தன்னுடைய திருக்கரத்தால் நெருப்பு மூட்டிய பெரிய அடுப்பு ,அதிலிருந்து வரும் நெருப்பின் அனலால சமையல் வேலைகள் நடந்து கொண்டு உள்ளது ..பசியால் பற்றி எரியும் ஏழைகளின் பசிக் கொடுமையை,பசி அரக்கனை, வயிற்றுப் பசியை,போக்க வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த நெருப்புக் கனல் ஆற்றிக் கொண்டு இருக்கிறது.

அங்கே பசித்த ஜீவர்கள் அனைவரும் வரிசையில் அமர்ந்து உண்கின்ற காட்சி நெஞ்சை நெகிழவைக்கிறது.

அடுத்து,தருமச்சாலையில் உள்ள வள்ளலார் திரு உருவப்படம் இடத்தில் --அவருக்கு இடது புறத்தில் திரு விளக்கு காட்டப்படுகிறது.

வள்ளல்பெருமான் தன் திருக்கரத்தால் 1867,ஆம் ஆண்டு ஏற்றிய தீபச்சுடராகும்.

வள்ளல பெருமான் திரு உருவப்படத்திற்கு வலதுபுறம் ஒரு கண்ணாடிப் பேழை உள்ளது . அதில் வள்ளல்பெருமான் ஒரே இரவில் தம் திருக்கரத்தால் எழுதிய,''அருட்பெரும்ஜோதி அகவல்'' 1596,வரிகளைக் கொண்ட கைப்பிரதி {மூலம}வைக்கப்பட்டுள்ளது .

ஞானசபையை சுற்றிலும் உள்ள சூழ்நிலைகள் ;--
மக்கள் வாழ்க்கை --
பல சன்மார்க்கிகள் கட்டிய மடங்கள் அதில் நடைபெறும் அன்னதானங்கள் -
ஞானசபை ,தருமச்சாலை ,வடலூர் சிறப்புகள் குறித்து விளக்கம் .கீழே தரப்படுகிறது..---

தொடரும் ;--




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக