அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

உலகின் உண்மைக கடவுள் யார் ?

உலகின் உண்மைக கடவுள் யார் ?

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !


உலகில் உள்ள மக்கள் அனைவரும் பொய்யான கடவுளை வணங்கி அழிந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மைக கடவுளை கண்டவர்கள் யாரும் இல்லை உலகுக்கு காட்டியவர்கள் யாரும் இல்லை .கண்டவர்கள் விண்டதில்லை ,விண்டவர்கள் கண்டதில்லை என்று பொய்யான கருத்துக்களை சொல்லி ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள் மக்களையும் ஏமாற்றி விட்டார்கள்

அதனால் அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் கடவுளை கண்ணால் காணமுடியும் கண்டேன் களித்தேன் கண்டு கொண்டேன் என்கிறார். அருள் முழுமை பெற்றால்தான் கடவுளை காண முடியும் என்கிறார்.

மனிதன் இயற்கை சட்டத்தை ஏற்று ஒழுக்கமுடன் வாழ்ந்தால் அருள் என்னும் அமுதம் நம் ஆன்மாவில் இருந்து சுரக்கும்,அந்த அமுதம் தடை இல்லாமல் முழுமையாக ஊற்று எடுத்து உடம்பு முழுவதும் பரவி ,ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும் போதுதான் உண்மைக கடவுளைக் கண்ணால் காணமுடியும் அப்படிக் கண்டவர்தான் வள்ளலார் அவர்கள்

.உண்மையான கடவுளைக் கண்ணால் கண்டதால் தான் ''அருட்பெரும்ஜோதி !அருட்பெரும்ஜோதி !தனிப்பெரும் கருணை !அருட்பெரும்ஜோதி !என்று பெயர் வைத்தார்கள் அந்தக் கடவுள் தான் அருட்பெரும் ஜோதியாக உள்ளார் தனிப பெரும் கருணையுடன் உலகத்தை இயக்கிக் கொண்டு உள்ளார் என்பதை உலக மக்களுக்கு தெளிவுப் படுத்தி உள்ளார்

அதை வெளிப்படுத்த தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் வடலூர் என்னும் ஊரில் அருட்பெரும் ஜோதிக்காக ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' அமைத்து உள்ளார் .எல்லா உலகுக்கும் பொதுவான உண்மைக கடவுளான அருட்பெரும் ஜோதி உருவத்தைக் காண்பிக்க ஜோதி என்னும் அணையா விளக்கை வைத்துள்ளார் அதுவும் உண்மைக கடவுள் அல்ல கடவுளின் தோற்றம் எப்படி உள்ளது என்பதைக் காட்டும் ஒரு மாதிரிதான் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ..

உண்மைக கடவுள் என்பது எல்லா உயிர்களிலும் உள்ள ஆன்ம ஒளியே கடவுளின் ஏக தேசமாகும் அதனால்தான்

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே !

உயிர் எலாம் பொதுவில் உளம் பட நோக்குக
செயிரெலாம் விடுக எனச செப்பிய சிவமே !

கொல்லா நெறியே குருவருள் நெறி யெனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச சிவமே !

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

என்று தெளிவுப் படுத்தி உள்ளார் அதனால்தான் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் அவர்கள். உலக மக்கள் அனைவரும் உண்மைக் கடவுளை உணர்ந்து உண்மையுடன் வாழ்வோம் .

அன்புடன் உங்கள் ஆன்மநேயன் கதிர்வேலு .



3 கருத்துகள்:

  1. உலக மக்கள் அனைவரும் உண்மைக் கடவுளை உணர்ந்து உண்மையுடன் வாழ்வோம் . அன்புடன் உங்கள் Elizabeth

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை உணர்ந்து உலகமக்கள் அனைவரும் வாழ வேண்டும் என்ற உங்கள் கருத்துக்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருள்புரிவார் வளமுடன் வாழ்க .

      அன்புடன் ஆனமநேய்ன் கதிர்வேலு.

      நீக்கு