கடவுளையே கலங்கப் படுத்தி விட்டார்கள் !
ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் .
சாதியும், சமயமும் ,மதமும், உண்மையான கடவுளுக்கு களங்கத்தை கற்பித்து விட்டார்கள்!
அருட்பெரும் ஜோதியே உண்மைக் கடவுள் !
பாலாஜி என்னும் தோழருக்கு எழுதிய கடிதம் !
உங்கள் அன்பான கடிதத்திற்கு மிக்க மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
சாதியும், சமயமும் ,மதமும், உண்மையான கடவுளுக்கு களங்கத்தை கற்பித்து விட்டார்கள்!
இந்த உலகத்தையும், உலக உயிர்களையும், படைத்த இறைவன் அளவிட முடியாத கருணை உள்ளவர்,அவர் அருட்பெரும் ஒளியாக உள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லாமல் அறிய வேண்டும் .இவை சாதாரண அறிவைக் கொண்டு அறிய முடியாது.அருள் அறிவைக் கொண்டுதான் அறிய முடியும் அந்த உண்மையை கண்டவர்தான் வள்ளலார் அவர் சொன்னதை, நான் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை
அவர் காட்டிய கருணையாலும் ஜீவ காருண்யத்தாலும் சுமார் முப்பத்து ஐந்து ஆண்டுகளாக என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன் அதனால் கிடைக்கும் அறிவு மாற்றத்தை உணர்ந்தேன் .என்னுடைய அறிவு ஓர் அளவுக்கு விளங்கிய பிறகு, அழியும் பொருள் மீது ஆசையை விட்டேன்.நம்முடைய ஆன்மநேய உடன் பிறப்புகளுக்கு நமையும் உண்மையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் பணியை செய்து வருகிறேன் .
எனக்கு யார் மீதும் என்னுடைய கருத்தை திணிக்க வேண்டும் என்ற எண்ணம இல்லை .உண்மையை தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் .உலகியலில் பொருள் மீது பற்றுக் கொண்டு வாழ்பவர்களுக்கு இவை பயன் உள்ளதாக இருக்காது .
அருள் பெற வேண்டும் என்ற உணர்வும் ஆசையும் உண்மையான இறை நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறேன் .
மக்கள் மீது எந்த குற்றமும் இல்லை,மக்களுக்கு தவறான வழி காட்டியவர்கள் தான் குற்றவாளிகள் .சமார் ஐந்தாயிரம் ஆண்டுகளாக சாதி,சமயம்,மதம் போன்ற பிரிவினைகளை மக்கள் சமுதாயத்தில், விஷத்தை விதைத்து விட்டார்கள் .அவை பெரிய மரமாகி எல்லா நாடுகளிலும் விஷம் போல் ஏறி வளர்ந்து விட்டது .உலக நாடுகளில் எல்லாம் இடங்களிலும் மதப் போராட்டங்கள் நின்ற பாடில்லை ,ஓய்ந்தபாடில்லை இதற்கு எல்லாம் யார்க் காரணம் ?கடவுளைக் கற்பித்த மதங்களாகும்.,
தெருவுக்கு ஒரு கடவுள், ஊருக்கு ஒரு கடவுள்.இனத்திற்கு ஒருகடவுள், சமயத்திற்கு ஒருகடவுள் ,மொழிக்கு ஒருகடவுள்,மாநிலத்திற்கு ஒருகடவுள் .நாட்டிக்கு ஒருகடவுள் ,ஒவ்வொரு நாட்டிற்கும் பலப்பல கடவுள்.என கடவுளை பங்கு போட்டுக் கொண்டார்கள் .இதையெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியுமா ?
அது மட்டுமா ?சைவக் கடவுள் ,அசைவக்கடவுள் ,என கொலை செய்யும் கடவுள் ,கொலை செய்யாதக் கடவுள் என கடவுளை பிரித்து விட்டார்கள் .இவை எல்லாம் அறிவு தெளிவு உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளமுடியுமா ?சிந்தித்துப் பார்க்க வேண்டும்
உண்மையான கடவுளையே கலங்கப் படுத்தி விட்டார்கள் !
ஒரு மதம் கொலை செய்வது பாவம் என்றும், ,பிற உயிர்களை கொன்று தின்பது பெரிய பாவம் என்கிறது.எந்தக் கடவுளை வணங்கினாலும் ஒன்றுதான் .சிறு நதிகள் கடலில் கலப்பது போல் அனைத்து வழிபாடும் அந்த பரம பொருளைத்தான் சென்று அடையும் என்கிறது
ஒருமதம் கொலைசெய்வது தவறில்லை ,வாயில்லாத உயிர்கள் மனிதனுக்காகப் படைக்கப் பட்டது அதனால் அவைகளை கொன்று தின்பதில் தவறில்லை என்கிறது .
ஒருமதம் மனிதன் கொலை செய்யலாம் ,பெண்களின் கற்பை அழிக்கலாம் பிறர சொத்தை கொள்ளை அடிக்கலாம் வேறு எந்த தவறுகள் வேண்டுமானும் செய்யலாம் தர்மம் செய்தால் போதும் என்கிறது
.ஒரு மதம் ,எல்லா தவறுகளும் செய்யலாம் வாரத்திற்கு ஒருமுறை கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்டால் போதுமானது எல்லா தவறுகளையும் கடவுள் மன்னித்து விடுவார் என்கிறது.
ஒருமதம் நாம் சுவாசிக்கும் காற்றில் உயிர் அணுக்கள் சென்று அழிந்து விடும் என்றும் ,நடந்தால்
காலில் மிதிப்பட்டு கண்ணுக்கு தெரியாத உயிர்கள் அழிந்து விடும் என்று நடக்கும் பாதையை சுத்தம் செய்து கொண்டு நடக்கச சொல்கிறது .
இப்படி பல மதங்கள் பலபல வழி முறைகளையும் மார்க்கங்களையும் காட்டி உள்ளது இவை எல்லாம் பின்பற்றி வாழும் மக்கள் எப்படி ஒன்று பட்டு ஒற்றுமையுடன் வாழ்வார்கள் .சிந்தித்துப் பார்க்க வேண்டும்
அரசியல் கட்சிகளை விட ஆன்மீக கட்சிகள்தான் நாட்டில் ஏராளமாக உள்ளன .இவைகள் எல்லாம் உண்மையான கடவுளைப் பற்றியும்,உலக உயிர்கள் பற்றியும்,உலக அனுததோற்றங்கள் பற்றியும் அணு சேர்க்கைப் பற்றியும் அணு பிரிவுப் பற்றியும்,தோற்றம் மாற்றங்கள் பற்றியும் மற்றும் உள்ள உண்மையான தன்மைகளையும் உண்மையான ஒழுக்க நெறிகளையும் ,உண்மையான மனித வாழ்க்கை முறைகளையும் சொல்லி இருந்தால் வள்ளலார் போன்ற ஒரு உண்மையான ஞானி வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
ஒன்றே கடவுள் ஒருவனே தேவன என்பதில் என்ன தவறு ?இதைத்தான் வள்ளலார்
கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் சோதியர் !
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு. !
ஜீவ காருண்யமே மோட்ஷ வீட்டின் திறவுகோல் !
எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நேசிக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் !
உயிர்க் கொலை செய்யக் கூடாது, புலால் உண்ணக கூடாது !
சிறு தெய்வ வழிபாடு கூடாது!
தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி கூடாது!
சாதி, சமயம், மதம் முதலிய வேறுபாடுகள் கூடாது!
வேதங்களும் புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்காது !
இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !
கருமாதி,திதி முதலிய சடங்குகள் வேண்டாம் !
ஏழைகளின் பசி தவிர்த்தலே பேரின்ப வீட்டின் திறவு கோலாகும் !
ஒழுக்கம் மிக முக்கியமானதாகும் !
இந்திரிய ஒழுக்கம் ,கரணஒழுக்கம், ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழுக்கம் !
எதிலும் பொது நோக்கம் வேண்டும் .
மேலே எழுதப்பட்டுள்ளது வள்ளலாரின் முக்கிய கொள்கைகளில் சிலவாகும்
ஆன்மநேயன் ;--கதிர்வேலு
அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு. ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக