அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 4 ஜனவரி, 2012

உலக விடுதலை !தியானத்தை விடு! ஞானத்தை பெறு !


உலக விடுதலை !தியானத்தை விடு! ஞானத்தை பெறு !

ஆன்மநேய அன்பர்கள் சமுகத்திற்கு !

தியானம் என்பது அலைபாயும் மனதை அடக்குவது என்று சொல்லி வைத்துள்ளார்கள்.நாம் உலகியலில் வாழ்வதற்கு மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை போன்ற ஆசைகளை வைத்துக் கொண்டு,  சமுக குற்றங்களை செய்து கொண்டு தியானம் செய்தால் மனம் அடங்காது தியானம் செய்கின்ற போது ஓர் அளவுக்கு மனம் அடங்கும் மறுபடியும் உலக வழக்கில் சென்றுவிடும் .

பக்தியும் தியானமும் ஒன்றுதான் பக்தி என்பது மன நெகிழ்ச்சி,மன உருக்கமாகும் அது நிலை பெற்று நிற்காது .

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆன்மநெகிழ்ச்சியும் ஆன்ம உருக்கமும் வேண்டும்.ஆன்ம உருக்கம் எப்பொழுது உண்டாகும் எனில் நம்மால் மற்ற ஆன்மாக்கள் மகிழ்ச்சி அடையவேண்டும் ,அதாவது தாவரம் முதல் மனிதர்கள் வரை உள்ள ஜீவன்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும்,அதற்கு பெயர்தான் ஜீவ காருண்யம் என்பதாகும் .

அப்படி செய்து வந்தால் பக்தியை விட, தியானத்தை
விட, கோடி கோடி மடங்கு நன்மை உண்டாகும் அப்பொழுது மனம் அடங்கி அறிவு தெளிவு உண்டாகும் .அறிவு தெளிவு உண்டாகும் போது,நன்மை எது? தீமை எது?என்பதை அறிந்து கொள்ள முடியும் .அப்போது ஞானத்தின் அருமையும் அன்பும் அருளும் ,ஆண்டவர் மீது அசைக்க முடியாத காதலும் உண்டாகும் .அந்த சுவையை அனுபவிப்பதுதான் ஞானத்தைப் பெறுவதாகும் .

அன்புடன் ஆனமநேயன் ;--கதிர்வேலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக