அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 29 நவம்பர், 2011

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும் !

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும் !


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றால என்ன ? எதைக் கேட்க வேண்டும் ?எதைத் தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டால்தானே கேட்கவும் முடியும் தட்டவும் முடியும் .

இதற்கு வள்ளலார் கொடுக்கும் உண்மையான பதில்

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் மரணம் இல்லாமல் வாழ்ந்து மேல் நிலைக்கு செல்லும் தகுதி படைத்தவர்கள் ,மேல் நிலை என்றால் என்ன ?நாம் எங்கு இருந்து வந்தோமோ அந்த இடம்தான் மேல் நிலை என்பதாகும் .மேல் நிலைக்கு செல்வதற்கு,என்றும் அழியாத அழிக்க முடியாத அருள் என்னும் பொருள் வேண்டும் .அதைப் பெற்றால் தான் மேல் நிலைக்கு செல்லமுடியும் அதை எப்படி பெற முடியும் ?

நம்முடைய தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் அருள் நிறைந்த மாபெரும் கோட்டையாகும் அந்த கோட்டையின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது .அதை தட்டினால் திறக்காது .சாவிப்போட்டு திறந்தால்தான் திறக்கும் அந்த திறவு கோல் சாதரணமாக கிடைக்காது .அருள் கோட்டைக்குள் நுழைய அருள் என்னும் திறவு கோல அதாவது சாவி வேண்டும் அப்பொழுதுதான் நாம் கதவை திறந்து உள்ளே செல்ல முடியும் .

அந்த சாவியை எப்படிப் பெறுவது ?

எல்லா உயிர்கள் இடத்தும் அன்பு செலுத்த வேண்டும் .அந்த அன்பு உயிர் இரக்கத்தாலும்.ஜீவ காருண்யத்தாலும் மட்டுமே கிடைக்கும் வேறு எந்த வழியாலும் கிடைக்காது எனபதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் .

உயிர் இரக்கமும் ஜீவ காருண்யமும் எப்படி உண்டாகும் .நம்முடைய தந்தையாகிய அருட்பெரும் ஜோதிக் கடவுளின் பெருமையும் தரத்தையும்--நம்முடைய சிறுமையும் தரத்தையும் ஊன்றி விசாரிக்க வேண்டும் .அப்படி விசாரிக்கும் போது எல்லா உயிர்களும் நம்முடைய சகோதர உயிர்கள் என்பது விளங்கும் .அந்த உண்மை விளங்கினால் எந்த உயிர்களுக்கும் இம்சை என்னும் துன்பம் துயரம் அச்சம் பயம் உண்டாகாமல் நடந்து கொள்வோம் .இதுவே உயிர் இர்க்கம் ஜீவ காருண்யம் என்பதாகும்.

தயவு என்பது இரண்டு வகைப்படும் --அவை யாதெனில் கடவுள் தயவு --ஜீவர்கள் தயவு என்பதாகும் அதே போல் அருள் என்பது இரண்டு வகைப்படும் .கடவுள் அருள் ஜீவர்கள் அருள் .அதனால் ஜீவ தயவால் ஜீவ அருளைப் பெற்று .க்டவுள் தயவால் கடவுள் அருளைப் பெறமுடியும் .அந்த அருளே கடவுளின் கோட்டையாகிய கதவையை திறக்கும் சாவியாகிய திறவு கோலாகும் .

ஆதாலால் நாம் கேட்க வேண்டியது அருள் என்னும் திறவு கோலாகும்.அதுவே கேளுங்கள் தரப்படும் என்பதாகும் .

தட்டினால் கதவு திறக்காது அருள் என்னும் திறவு கோல கொண்டுதான் மேல் வீட்டுக் கதவை திறக்க முடியும்

கடவுள் இருக்கும் இடம் என்பது நமது உடம்பில் உள்ள தலை பாகத்தில் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்க்கும் மேலே புருவ மத்தியில்அசையாது ஒரு தீபம் அதாவது ஒளி இயங்கிக் கொண்டு உள்ளது .அதை சுற்றிலும் அசைக்க முடியாத மாயை என்னும் திரைகளால் மறைக்கப் பட்டுள்ளது அதுதான் கோட்டையின் கதவு என்பதாகும் அந்தக் கதவை தட்டினால் திறக்காது ஜீவ காருண்யத்தால் பெற்ற அருள் என்னும் திறவு கோலைக் கொண்டு திறந்தால்தான் திறந்து உள்ளே போக முடியும் .

இதுவே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பதாகும் .

அன்புடன் ஆன்மநேயன் .கதிர்வேலு .

மீண்டும் பூக்கும் .

.   




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக