அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

கடவுள் உண்டா? இல்லையா?



கடவுள் உண்டா? இல்லையா?

மனித பிறப்பின் அவசியமே உண்மையை அறிந்து கொள்வதுதான்.உண்மையை அறியத்தான் மனிதனுக்கு மட்டும் மனமும் அறிவும் சிந்திக்கும் திறனும் உள்ளது அதற்கு மேல், பேசும் திறனும் உள்ளது. மற்ற ஜீவ ராசிக்களுக்கு அத்தகைய வாய்ப்பு இல்லை .உண்மை என்பது நாம் எங்கிருந்து வந்தோம் ஏன் பிறந்தோம் ஏன் மரணம் அடைகிறோம், .ஏன் இன்பம் துன்பம் வருகிறது இதற்கு யார் காரணம் .இதை எல்லாம் தெரிந்து கொண்டோமானால் உண்மை விளங்கும் .அதை தெரிந்து கொள்ள ஏதோ ஒன்றை தேடுகிறோம் .அல்லது மற்றவர்கள் எழுதி வைத்த புத்தகங்களைப் படிக்கிறோம் .நம் அறிவு நமக்கு முன் ஏதோ ஒருவர சொன்ன கருத்தை வைத்துக் கொண்டுதான் சிந்திக்கிறோம் வாதம் செய்கிறோம் .

நாமாக எதையும் சிந்திக்க வில்லை அப்படியே சிந்தித்தாலும் மற்றவர்கள் சொல்லியதைத்தான்,சிந்திக்க வேண்டி உள்ளது. .இவை எப்படி நம் உயிரிலும் ஆன்மாவிலும் பதிவாகி உள்ளது .என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் .இப்படி பல கோடிப பிறவிகள் தோறும பதிவானது தான் நமக்கு அறிவின் மூலம தெரிய வருகிறது என்பதையும் உணர வேண்டும் .அப்படி ஒரு புதிய சிந்தனையை நாம் அறிவின் மூலமாக சிந்தித்தால் .புதிய சிந்தனைகள் தோன்றும் .அந்த புதிய சிந்தனைகள் எங்கோ ஓர் இடத்தில் இருந்து வருகிறது என்பதை உணர்வோம் .அந்த இடம்தான் கடவுள் என்னும் இடமாகும் .அந்த இடம் உண்மையை தெரிவிக்கும் இடமாகும் .அது மனிதேகம் படைத்த உருவமில்லை மனித தேகம் உள்ள கடவுள் அல்ல, அறிவும் அருளும் நிறைந்த இடமாகும் /

அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் பற்றுதலும் வேண்டும் .அதை தெரிந்து கொள்ள இவ்வுலக பற்றுதல் இல்லாமல் இருந்தால்தான் கிடைக்கும் .ஒன்றைப் பற்றிக் கொண்டு ஒன்றைத் தேடினால் கிடைக்காது.பற்று அற்ற இடத்தை தேடவேண்டுமானால் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் .அப்படி இருந்து தேடினால் உண்மை தானே தேடிவரும் .அப்பொழுது அனைத்து உண்மைகளையும் யாருடைய உதவியும் இன்றி தெரிந்து கொள்ளலாம் .இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலாகும் .இதுவே கடவுளுமாகும் .

இவ்வுலகைப் படைத்த அவருக்குத்தான் எல்லா உண்மைகளும் தெரியும் .படைக்காத, படைக்கத் தெரியாத ,பொய்யான கடவுளிடம் தேடினால் உண்மை விளங்காது. .மனிதனால் கடவுளைத் தோற்றுவிக்க முடியாது .என்பதை உணரவேண்டும் .எல்லா வற்றுக்கும் பொதுவான ஒன்றுதான் கடவுள் என்பதாகும் .சாதி மதம் ,சமயம் இனம் ,நாடு என்ற பேத மில்லாத்து .அதுவே மெய்ப் பொருளாகும் .அதுவே இறைவனாகும் அதுவே அனைத்து இயக்கங்களுக்கும் காரிய காரணங்களாகும் .அதுவே இயற்கையாகும்.அதுவே அருள் ஒளியாகும் ,அதுவே எல்லா உயிர்களிலும் உயிர் ஒளியாக இருப்பதாகும் .அதனால்தான் எல்லாஉயிர்களையும் தம உயிர்போல் பாவிக்கவேண்டும் என்பதாகும் .

உயிர் உள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே 
உயிர்நலம் பரவுக என உரைத்த மெய் சிவமே !
உலகினில் உயிர்களுக்கு உறும்இடையூறு எல்லாம் 
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

என்பதாகும். உண்மையை உணர்ந்து, உயர்ந்து, உண்மையுடன் வாழ்வோம்.
அன்புடன் ;ஆன்மநேயன் கதிர்வேலு/. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக