கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடிப்போக !
கண்மூடிப் பழக்கமெல்லாம் மணமூடி போக !
மூட நம்பிக்கைகள் நிறைந்த நாடு நமது இந்திய நாடு ,கடவுள் ஒருவரே !ஆனால் மக்கள் விருப்பத்திற்குக் கோடி கோடியாய்க் கடவுள்களைப் படித்து விடுகிறார்கள் .உயிரைப் பலிவாங்க அன்பு வடிவமான கடவுள் எப்படி ஏற்பார் என்பதை மக்கள் உணர வேண்டும் .அழுக்குப் பிடித்த மனிதனை சாமியார் என்றும் புனிதர் என்றும் ஏற்கிறோம் அவை எவ்வளவு அறியாமையாகும் .
அன்னா அசாரே அவர்களின் அறிவுரைப்படி ரலெகான்சித்தியில் பகுத்தறிவு பிரசசாரத்தால் உயிர் பலியிடுவது நின்றுபோனது,போலி சாமியார்கள் ஊரை விட்டே விரட்டப்பட்டனர்,அங்கு போதைவஸ்து கிடையாது,சாராயம் கிடையாது விபசாரம் கிடையாது.உழைப்பால் உயர்ந்துள்ளது
நடு ரோட்டில் கல்லை வைத்து குங்குமம் பூசி அதை விட்டல் பாபா என்றனர்,போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்த அந்த கல்லை இளைஞ்ர்கள் ஒன்று சேர்ந்து புரட்டி வீசி எறிந்து, போக்கு வரத்துக்கு வழி செய்துள்ளார்கள் .ரலெகான் சித்தி என்னும் ஊர மூட நம்பிக்கையை விட்டு முன்னேறி வருகின்றது .அதேபோல் ஒவ்வொரு கிராமமும் முன்னேற வேண்டும் .இவை யாவும் அரசாங்கம் உதவி இல்லாமல் மக்களே தங்கள் உழைப்பால் செய்து வருகிறார்கள் ,இதற்கு காரனகாரியமானவர் நமது அன்னா அசாரே அவர்களாகும் .
அன்புடன் கதிர்வேலு.
கலை - ஒளிக்கலை! கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வர் ஞானம்
பதிலளிநீக்குபெறார்! ஏன்? கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்பவர்களுக்கு மாயை கலையாக ஒளியாக வெளிப்பட்டு மனம் மயங்கும்படியாக பலபல காட்சிகளை காட்டும். உடனே ஆஹா எனக்குப் பல அற்புத காட்சிகள் காண கிடைக்கின்றது. நானே ஞானம் பெற்றவன் நானே பெரியவன் என , ஏமாந்து, இறுமாந்து, பிதற்றுவான்!! கண்ணை மூடி தியானம் செய்பவன் நிச்சயம் ஏமாந்து போவான்!
http://sagakalvi.blogspot.com/2012/01/blog-post_28.html
உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி அன்புடன் ஆன்மநேயன் ;-கதிர்வேலு.
நீக்கு