அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 31 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரேவும் லோக்பால் மசோதா!


அன்னா ஹசாரேவும் லோக்பால் மசோதாவும்
அரசாங்கத்தின் சாதாரண சேவைகளை பெறுவதற்குக்கூடஏழை, எளிய குடிமக்கள் லஞ்சம் தர வேண்டிஉள்ளது. அந்த அளவிற்கு இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளது.

அத்தகைய ஊழலை ஒழிக்க, வலுவான லோக்பால்மசோதா வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் அன்னா ஹஸாரே(சுதந்திர போராட்ட தியாகி)உண்ணாவிரதம் இருந்தார்.அரசுடன் நடத்தியபேச்சுவார்த்தையை அடுத்து,போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.

அரசு மற்றும், அன்னா ஹஸாரே தலைமையிலான தரப்பிலும்பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு தரப்பும்,வரைவு லோக்பால்மசோதாக்களை தயாரித்தன.

லோக்பால் விசாரணை வரம்புக்குள், பிரதமர், நீதித்துறைமற்றும் உயர் அதிகாரிகளையும் கொண்டுவர வேண்டும்என்றதுஅன்னா ஹஸாரே தலைமையிலான தரப்பு லோக்பால் விசாரணைவரம்புக்குள், பிரதமர், நீதித்துறை மற்றும் உயர் அதிகாரிகளையும்கொண்டுவரவேண்டும் என்ற மசோதாவை ஏற்க அரசு மறுத்துவிட்டது

அரசுத் தரப்பு மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஓயப்போவதில்லைஎன அன்னா ஹஸாரேஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

ஊழலை ஒழிப்பதற்கு வழி செய்யும் வலுவான லோக்பால்மசோதாவைக் கொண்டுவரக் கோரி,செவ்வாயன்று ஆகஸ்ட் 16 –ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடமுயன்ற சமூக சேவகர் அன்னா ஹஸாரே போலீசாரால்கைது செய்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
.
போலீஸ் காவலில் உள்ள போதிலும்அன்னா ஹஸாரேதனது உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக
அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு முதலில், டில்லி போலீசார்21 நாட்கள் அனுமதிக்க முன்வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில்
இருதரப்பிலும் 15 நாட்கள் என, முடிவானது.

15 நாட்கள் வரை மட்டுமே உண்ணாவிரதம் இருப்பதற்கு,ஹசாரேவுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் போலீசார் அளித்த காரில் ஏறி, ராம்லீலா மைதானத்திற்குசென்றார். அதற்கு முன்பாக,ராஜ்காட் சென்று காந்தி சமாதியில்
அஞ்சலி செலுத்தினார்.

ராம்லீலா மைதானத்தில் அவர் துவக்கியுள்ள உண்ணாவிரதத்தில்லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். ""நான் உயிரோடு இல்லாமல்
போனாலும் கூட, போராட்டத்தை இளைஞர்கள் தொடர வேண்டும்,''என அன்னா ஹசாரே தெரிவித்தார்.

"வலுவான லோக்பால் மசோதா விரைவாக நிறைவேறமத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால்,
உண்ணாவிரத போராட்டத்தின் காலம் மாற்றி அமைக்கப்படும்'என, ஹசாரேவின் குழுவினர்தெரிவித்தனர்.

அன்னா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதப்போராட்டம்8வது நாளை எட்டியுள்ளது.அன்னா ஹசாராவின் உடல் நிலை
நன்றாக உள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ஹசாரேவிற்கு ஆதரவு பெருகி வரும்நிலையில் அன்னா ஹசாரே விவகாரம் தொடர்பாக,
மூத்த அமைச்சர்கள் சரத்பவார், விலாஸ் ராவ் தேஷ்முக்போன்றோர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன்
ஆலோசனை நடத்தினர்.

லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசுடன்பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அன்னா ஹசாரே
ஆதரவாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்

இந்நிலையில்அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன்லோக்பால்மசோதா குறித்து விவாதிக்கஅனைத்து கட்சிக்கூட்டத்திற்கு
மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டம் (ஆகஸ்ட். 24)மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியோ ஊழல் ஒழிந்தால் சரி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக