அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

அன்பு என்றால் என்ன?

  ஆன்மநேய அன்புடைய என்னுடைய உடன் பிறப்புக்களுக்கு வந்தனம் 

அன்பு என்றால் என்ன ?

பக்தி என்பது மன நெகிழ்ச்சி மன உருக்கம் என்பதாகும் .
அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம் என்பதாகும் !
கடவுள் பக்தி என்பது எல்லா உயிர்களிடத்தும் கடவுள் உயிர் ஒளியாக 
அதாவது [ஆன்மாவாக } இயங்கிக் கொண்டு இருக்கிறார் என்பதை 
அறிவால் அறிவதாகும் .
அன்பு என்பதை எப்படி அறிய முடியும் என்றால் ,ஜீவகாருண்யம் என்னும் 
உயிர் இரக்கத்தால் அன்பு உண்டாகும், அன்பு உண்டானால் அருள் உண்டாகும்
அருள் உண்டானால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம் .

ஜீவகாருண்யம் விளங்கும்போது அன்பும் அறிவும் விளங்கும் !.
ஜீவகாருண்யம் மறையும் போது அன்பும் அறிவும் தானே மறையும் !

ஆதலால் எல்லா உயிர்களிடத்தும் .உயிர் இரக்கம் காட்டுவதே 
அன்பு என்பதாகும் .
ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடாகும் 
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாகும் .

அன்பை பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு !

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே !
அன்பெனும் குடில் புகும் அரசே !
அன்பெனும் வலைக்குட்படுபரம் பொருளே !
அன்பெனும் கரத்தமர் அமுதே !
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே !
அன்பெனும் உயிர் ஒளி அறிவே !
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே !
அன்புருவாம் பரசிவமே !

என்கிறார் வள்ளலார் 
திருவள்ளுவர் அன்புடையார் எல்லாம் உடையார் 
அன்பிலார் ஏதும் இல்லார் 
என்கிறார் .
ஆதலால் நாம் அன்புடையவர்களாக வாழவேண்டும் அந்த அன்பு 
வருவதற்கு எல்லாஉயிர்களும் நம் உயிர்போல் என்று எண்ணி 
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை உணர்ந்து ஒருமையுடன் 
வாழவேண்டும் .ஒருமையில் உலகெல்லாம் ஓங்க வேண்டும் .
அதற்கு எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் .
அன்பு என்பதற்கு திரு அருட்பாவில் அளவில் அடங்காத விளக்கம் 
தந்துள்ளார் .நம்முடைய அருளாளர் வள்ளலார் அவர்கள் .
உயிர் இரக்கத்தால்தான் அன்பை பெற முடியும் என்பதை 
உங்கள் அனைவருக்கும் தெரியப் படுத்திக் கொள்கிறேன் .

அன்புடன் --உங்கள் ஆன்மநேயன் --கதிர்வேலு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக