நூலும் சிகையும் உணராதவர்கள் மூடர்கள் என திருமூலர் தெளிவாக கூறுவதை பாருங்கள்! நூல் - பருத்தி - பஞ்சு நூலல்ல! ஞான நூல்! வேத புராண புனித நூற்கள்! அவற்றின் முடிந்த முடிபான ஞான விளக்கங்கள்! நூலை படிப்பது நுண்ணறிவு துலங்குவதற்கே! சிகை - குடுமி! தேங்காய் குடுமி போல தலைமுடியை வைப்பதல்ல! தோளிலே மூன்று நூல்களை இணைத்து பூணுல் போடுவதல்ல! நூல் என்றால் வேதாந்தம் சிகை என்றால் வேதத்தின் பொருளை கற்று தெளிந்த நுண் அறிவை குறிப்பதை! பரிபூரண அறிவே ஞானமாம்! "பாரப்பா பலவேத நூலும் பாரு" என அகத்தியரும் கூறுகிறார். இங்ஙனம் வேதத்தை படித்து அதன் நுண் பொருளை உணர்ந்து தவம செய்பவரே "அந்தணர்" ஆவார்!
"அந்தணர் என்போர் அறவோர்" என திருவள்ளுவரும் கூறுகிறார்! குடுமி வைத்துக் கொண்டு பூணுல் போட்டவன் அந்தணன் அல்ல! வேதம் ஓதி உணர்ந்த அந்தணர் "பார்பார்" எதை? தன் கண்மணி ஒளியை! தூய வெள்ளொளியை! பால் போன்ற தண்ணொளியை!தவம செய்து பார்பார்! காண்பார்! தன் உயிராக அந்த பரமனே இருப்பதை தன் உடலினுள்ளேயே பார்பார்!அதனால்தான், தன்னையே பார்பவரைத்தான் பார்ப்பார்! பார்பனர்கள் என அழைத்தனர்!
அந்தணரின் மற்றொரு பெயரே பார்ப்பார்!! நமுள்ளே பரமாகிய பகவான் நம் உயிராகி ஒன்றானவராக துலங்கி, அவரே நம் இரு கண் மணி ஒளியாகவும் இரண்டாகவும் ததுலங்குகிறார்! ஒன்றான ஜீவன் இரண்டான இரு கண் சூரிய சந்திர ஒளியுடன் சேர, மூன்றும் சேர்ந்தாலே அதுவே ஓங்காரம் ஆகும்! அ, உ , ம் என்ற முச்சுடரும் தான் ஒன்றான ஓங்காரம்! வேதம் ஓதி, தவ உணர்வால் நாமும் அந்தணர் ஆகலாம்! பார்ப்பார் - பார்! - பார்! என்ற குரு உபதேசத்தை கேட்டு தன்னையே கண்மணி ஒளி வழி உற்றுப் பார்பவரே, பார்த்துக் கொண்டிருப்பவரே பார்ப்பார்!?
உள்ளொளியை சதாகாலமும் பார்பவரே பார்ப்பார்! பூவிலே கண்மலரிலே உள் உள்ள நூல் போன்ற நரம்பினை இணைத்து தவத்தால் ஒளிக் கலைகளை இணைப்வரே அந்தணர்! பார்ப்பார்!கண் உள்நூல் போன்ற நாடியை இணைத்து பூண வேண்டும். இதுவே பூணுல் சூரிய சந்திர அக்னி ஒளிக் கலைகளை இணைத்து ஒன்றாக்க வேண்டும் இதுவே குடுமி! புறத்திலே வேஷம் போடுபவர் வேடர்! அகத்திலே கொண்டவரே அந்தணர். புறத்திலே வேஷம் போட்டுக் கொண்டு தான்தான் உயர்ந்த ஜாதி என்கின்றனர் மூடர்கள்! பூ நூலை தரித்து முச்சுடரை சேர்த்து ஒளியோடு இருப்பவரே உண்மையான அந்தணர்! பார்ப்பார்.
சூரிய சந்திரரே,
பதிலளிநீக்குஅற்புதமான கருத்து, ஆழ்ந்த சிந்தனை.
ஞானக் கண் திறக்கப் பெற்றேன்.
வாழ்க உம் பணி.