நட்டக் கல் பேசாது நாதன் உள்ளிருக்கையில் !
14 ஜூலை 2011, 21:35 க்கு Kathir Kathirveluஆல்
உங்கள் குறிப்பு உருவாக்கப்பட்டது.
நட்டக் கல்லை சுற்றிவந்து நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொன மொனன்னு சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச சுவை அறியுமோ!
Kathir Kathirvelu மனிதனால் கல்லையும் மண்ணையும் பொம்மைகள் செய்து வைத்து இதுதான் கடவுள் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது.நீங்க நட்ட கல்லு பேசுமா? அதை சுற்றி வந்தால் நலம் கிடைக்குமா? கல்லுக்கு நீங்கள் சொல்லும் மந்திரங்கள் ஏறுமா? நட்டக் கல்லு பேசுமா?உங்களை இயக்கிக் கொண்டு இருக்கும் உயிர் {ஆன்மா}உள்ளே இருக்கும் போது அது தெரியாமல் இப்படி செய்கிறீர்களே அது ஏன் உங்களுக்கு புரியவில்லை.அறிவு இருந்தும் அறிவு இல்லாதது போல் செய்கிறீர்களே இது என்ன அநியாயம் என்று சொல்லுகிறார்.குழம்பு செய்யாத சுட்ட சட்டியில் எப்படி சுவை தெரியும் ,அதுபோல் உங்கள் அறிவு இருக்கிறது என்கிறார் .ஒன்றே கடவுள் ஒருவனே தேவன என்பது எப்போது அறிந்து புரிந்து கொள்ளப் போகிறீர்கள்.கடவுள் ஒளியாக உள்ளார்.அவர் எல்லா உயிர்களிலும் உயிர் ஒளியாக உள்ளார் என்பதை அறிந்து கொண்டால் மனிதன் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக