புதன், 13 ஜூலை, 2011

எட்டும் இரண்டும் !

எட்டும் இரண்டும் 

எட்டும் இரண்டும் என்பன இயலும் முதற் படியென
அட்ட நின்று அருளிய அருட்பெரும்ஜோதி !

என்பார் வள்ளலார் 
இயற்கை உண்மையான சுத்த சிவநிலை என்பது மனம் அடங்கி நிற்கும் இடமாகும்.அதை உள்ளம என்று சொல்லலாம்.உள்ளம என்பது புருவ மத்தியாகும்.புருவ மத்தியில் இருக்கும் ஒளியை காண்பதே இறைவனை காண்பதாகும்,இறைவனை அறிந்து உணர நம் மனம் ஆசைப்பட்டு ஆவல் கொண்டு புருவ மத்தியில் உள்ள ஒளியை அறிய அவ்விடத்திலேயே நிற்க வேண்டும்,

மனம் அடங்கும் திறத்தினில் ஓர்இடத்தே இருந்து அறியேன் என்பார் வள்ளலார்.அவர் அறிந்து விட்டார் அவர் நமக்காக அப்படி சொல்கிறார் என்பதை உணரவேண்டும்.மனம் அடங்குவதற்கு அன்பு தயவு கருணை என்னும் ஜீவகாருண்யத்தை கடை பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

இயற்கை உண்மையான அருட்பெரும்ஜோதியை அடையும் வழி ஆண்டவரை அடையும் வழி சுத்த சன்மார்க்கமாகும்.அதுவே சுத்த சிவானுபவ நிலையாகும்.சுத்த சிவானுபவ நிலையே முதற் படியாகும் என்கிறார் வள்ளலார்.மற்ற நிலைகள் எல்லாம் மிகவும் தாழ்ந்த நிலையாகும்.

எட்டும் இரண்டும் என்பது பத்து என்பது அனைவருக்கும் தெரியும்.தெரியாத ஒன்று அதில் மறைந்து இருக்கிறது.அதுதான் சுத்த சிவம் அருட்பெரும்ஜோதியாகும்.

எட்டு என்பது ''அ '' விளக்கம் 
எட்டின் நிலைகள் எட்டின் மேல் நின்று எய்தினராய் இரண்டு என்பது உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்புகளை அறிந்தால் பத்தாகிய ஆன்ம ''ய் '' அக்கரத்தை நாம் இறுக பற்றிக் கொள்ளலாம்.

எட்டின் நிலை என்பது ;--மெய்.வாய் ,கண் மூக்கு ,செவி,இடைகலை,பிங்கலை,சுழி முனை.ஆகிய எட்டும்,ஒன்றிய நிலையில் கரணங்களாகிய மனம்,புத்தி,சித்தம் அகங்காரம் உள்ளம ஆகியன கட்டுப்பட்டு நின்ற இடமே சுத்த சிவானுபவ நிலையாகும் எனவே அருளைப் பெறுவதற்கு முதற்படி எட்டும் இரண்டும் அறிய வேண்டும் என்கிறார் வள்ளலார் ,

எட்டு ஆகிய;-- -மெய் ,வாய் ,கண், மூக்கு செவி,இடைகலை,பிங்கலை, சுழிமுனை,ஆகிய கருவிகள் மூலமாக இரண்டாகிய,உடம்பையும் உயிரையும் அறிந்து மேல் நிலையை அடையவேண்டும் என்பதாகும்.

அடுத்து இன்னும் ஒன்றை சொல்லலாம்;-

எட்டு என்பது ;--மெய்,வாய்,கண்,மூக்கு காது.ஆணவம்,மாயை,கன்மம் என்பதாகும். ஐம்புலன்கள் மூலமாகத்தான் ஆணவம் மாயை கன்மம் என்பது பற்றிக் கொள்கிறது.இதனால் இரண்டு ஆகிய உடம்பையும் உயிரையும் அறிய முடிவதில்லை.இந்த எட்டையும் இரண்டையும் அறிந்து தெரிந்து புரிந்து வாழ்ந்தால் இறை அருளைப் பெற்று இறைவனை காணலாம்,

இதுவே சாகாக்கல்வியை கற்கும் முறையாகும்.இதுவே சிற்றம் பலக் கல்வியாகும்.

கற்றேன் சிற்றம் பலக் கல்வியைக் கற்று கருணை நெறி 
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் 
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிறர நிலையைப் 
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று என பற்றினனே !

என்று வள்ளலார் தன அனுபத்தை தெளிவுபடுத்தி உள்ளார்கள்.
வள்ளலார் காட்டிய சுத்த ச்னமார்க்க பாதையில் நாமும் வாழ்ந்து அருளைப் பெற்று மரணம் இல்லாத பெருவாழ்வில் வாழ்ந்து இறை நிலையை அடைவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு   

2 கருத்துகள்:

13 ஜூலை, 2011 அன்று 10:02 PM க்கு, Blogger கவிஞர் கங்கைமணிமாறன் கூறியது…

எட்டும் இரண்டும் பற்றி
மாணிக்க வாசகரும் குறிப்பிடுகிறார்!
எளிய விளக்கம் மூலம்
இருள் அகற்றினீர்கள்.
இதுபோல் வள்ளலாரில்
இன்னும் தோயவேண்டும் நாம்!
நன்றி அய்யா ! .

 
13 ஜூலை, 2011 அன்று 10:04 PM க்கு, Blogger கவிஞர் கங்கைமணிமாறன் கூறியது…

என் மார்க்கம் பிறப்பொழிக்கும் சன்மார்க்கம்
என்றார்--வள்ளலார்!
இங்குப் -பிறப்புக்குப் பொருள்
பிறவாமை என்பதாக
எளியேன் கருதவில்லை!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றாரே வள்ளுவர்--
அந்தப் பிறப்பை ஒழிப்பதுதான் சன்மார்க்கம்
என்கிறார் --வள்ளலார்!
பிறப்பினால் கற்பிக்கப் பட்டிருக்கும்
பேதங்களை ஒழிப்பதுதான் சன்மார்க்கம் !
அது தான் என்மார்க்கம்-
என்கிறார்--பெருமான்!
அதுவே நன்மார்க்கம் என்கிறேன் நான்!
அதை வலியுறுத்தவே..
ஆகஸ்ட் 28 --ஆம்தேதி
அடியேன் ஆரம்பிக்கப் போகும்
திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை
என்னும்
கலை,இலக்கிய, ஆன்மிக,சமூக,சேவை நிறுவனம்!
அதற்கு உங்களால் ஆன
உதவிகளைச் செய்யலாமே..!
500 -பேருக்கு மேல் அன்ன தானம் இட்டு
ஆரம்பிக்கிறேன் விழாவை!
அழைப்பிதழ் விரைவில்
அனுப்பி வைக்கிறேன்!
அன்புடன் ,
கவிஞர் கங்கை மணிமாறன்
செல்:9443408824

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு