அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 12 ஜூலை, 2011

கண்களின் பார்வை முக்கியமானது!



கண்களின் பார்வை முக்கியமானது !

மனித உடம்பின் முக்கியமானது ஐம்புலன்கள்.கரணங்கள்,ஜீவன் ,ஆன்மா என்பவைகளாகும்.இவைகளில் முதன்மை வகிப்பது கண்கள்,கண்ணில் பார்ப்பது யாவும் மனதில் பதிவாகிறது,மனதில் பதிவாவது யாவும் எண்ணத்தின் மூலமாக உயிர் என்னும் ஜீவன் மூலமாக ஆன்மாவில் பதிவாகிறது.

இவை யாவும் நாம் இந்த உலகத்தில் அவதரித்த காலம் முதல் பதிவாகிக் கொண்டே இருக்கிறது.இந்தபதிவின் மூலம யாவும் நடைபெறுகிறது.இந்தபதிவுதான் உண்மையான ஆன்ம ஒளியை மறைத்து கொண்டுள்ளது.

நாம் பார்த்த பதிவுகளில் எவை எவை நமக்கு தேவையோ அதை எண்ணத்தின் மூலமாக செயல்படுகிறோம்.அவைதான் நன்மையையும் தீமையுமாகும். ஆதலால்தான் நன்மையையும் தீமையும் பிறர்தர வாரா !என்றார்கள் பெரியவர்கள்

மேற்குறித்த பதிவுகளை அகற்றி உண்மையான ஆன்மாவை அதாவது {ஒளியை}  பார்ப்பதுதான் ஆன்மீகம் அன்பதாகும்.

நாம் பார்த்து பார்த்து பதிவாகிய அனைத்தும் மாயையின் பொய்யான தோற்றங்களாகும்.அந்த பொய்யான தோற்றங்களை உண்மை என்று நினைந்து அதன்படி வாழ்வதுதான் மரணத்திற்கு காரணமாகின்றது

 பொய்யான உருவ தோற்றங்களை பார்த்து பதிவாகிய பதிவை,அதே கண்கள் மூலம உண்மையான ஆன்ம ஒளியை பார்த்து பார்த்து பதிவு செய்ய வேண்டும்.அப்படி பதிவு செய்வதின் மூலம்.உண்மை பதிவாகி பொய் மறைந்து விடும்.

உண்மை அறிய அறிய அதன்மேல் நாட்டங் கொண்டு அதன் மயமாக மாறுகின்ற பொழுது,ஆன்மாவின் உள் இருக்கும் அமுதம் சுரக்க ஆரம்பித்து விடும்.அந்த அமுதம்தான் அளவில்லா ஆற்றல் உடையதாகும்அந்த அமுதம் உண்டவர்கள் பிறப்பு இறப்பு என்னும் பேதைமை நீங்கி மரணமில்லா பெருவாழ்வு வாழ்வதாகும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்களில் ஒன்று !

கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான் என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான --பண்ணிற்
கலந்தான் என் பாட்டிற் கலந்தான் உயிரிற்
கலந்தான் கருணை கலந்து !

என்கிறார் வள்ளலார்.                
அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக