அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

சனி, 9 ஜூலை, 2011

வள்ளலார் மற்றவர்கள் வழியில் வந்தவர் அல்ல !

வள்ளலார் மற்றவர்கள் வழியில் வந்தவர் அல்ல !


வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட
மரபினில் யான ஒருவன் அன்றோ வகை யறியேன் இந்த 
எழைபடும் போடு உனக்குத் திருவுளச சம்மதமோ 
இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ 
மாழை மணிப பொதுவில் நடஞ்செய் வள்ளால் யான் உமக்கு 
மகன் அலனோநீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ
கோழை உலக உயிர்த் துயரம் இனிப பொறுக்க மாட்டேன் 
கொடுத்தருள் நின அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே .!

என்ற பாடல் வரிகளை ஊன்றி கவனித்தால் நன்கு விளங்கும் .

வள்ளலார் இறைவனிடம் வேண்டுகிறார் எப்படி ?

நான் முன்னாடி வந்த திருக்கூட்ட மரபில் வந்தவன் அல்ல.அவர்கள் மாதிரி வந்தவனா நான் உமக்கு தெரியாதா ?அவர்களைப் போல் என்னை நினைத்து,அருள் வழங்குவதில் காலம் தாழ்த்த வேண்டாம்.நீங்கள் காலம் தாழ்த்துவது,தகுமா!முறையாகுமா!தருமமாகுமா ?நீங்கள் பொது நடம புரியும் வள்ளல அல்லவா!உமக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.

நான் உமக்கு மகன் அல்லவா! நீங்கள் தானே அனுப்பி வைத்தீர்கள் எனக்கு நீங்கள்தானே தந்தையாகும் அப்படி இருந்தும் எனக்கு அருள் வழங்குவதில் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்.

இந்த உலக உயிர்கள் படும் துன்பத்தை எல்லாம் பார்த்துக் கொண்டு என்னால் இருக்க முடியாது.உயிர்களின் துன்பத்தை உடனே போக்க வேண்டும்,ஆதலால் உன்னுடைய அருள் ஒளியை இப்பொழுதே கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறார் வள்ளலார் ,அதேபோல் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் உடனே அருள் ஒளியை வழங்குகிறார்.

ஆதலால் வாழையடி வாழை வரிசையில் வந்தவர் இல்லை வள்ளலார். இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார் என்பது அருட்பா படித்த அனைவருக்கும் தெரியும் .

அருட்பாவை அறிவு என்னும் அருள் உணர்வோடு,உண்மை ஒழுக்கத்தோடு ஊன்றி படித்தால் அனைத்து உண்மைகளும் திரிபு இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்.

அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக