சாமியார்கள்

23 ஜூன் 2011, 08:17 க்கு Kathir Kathirveluஆல்
Adam Arifin
பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்!

பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்!


JUNE 22, *இந்தியாவை ஆட்சி செய்யும் சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க
வைக்கும் ஒரு விடயமாகும்.*

இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்துகொண்டார்கள்
என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!

** காஞ்சி சங்கராச்சாரி:* காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும்
சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும்.

*புகழ்:* காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் *கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை*.
சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது. சென்னை திருவல்லிக்கேணி
மாதவன் என்பவரைத் தாக்கியது. காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக *நேபாள
பெண்மணி ஒருவருடன் தலைக் காவேரிக்கு ஓடியது. *

*அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து இழுத்ததால் *அவர்
டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக பேட்டி கொடுத்தது. *பெண்களுக்கு இடஒதுக்கீடு
கூடாது, தமிழில் குடமுழுக்கு கூடாது என்று சொன்னது.* சங்கரா பல்கலைக்
கழகத்துக்கு இந்தியன் வங்கியில் இருந்து தவறாக ரூ.1 கோடி நிதியுதவி பெற்றது. ரா
என்ற எழுத்தில் தொடங்கும் நடிகையோடு உல்லாசம் புரிந்தது.

** பிரேமானந்தா:* திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார்.
பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இவருக்கு உண்டு. பல நூறு ஏக்கர் நிலத்தில்
ஆசிரமம், மற்றும் நகைகள், பணம் என்று இவரிடம் கோடிகள் குவிந்து கிடந்தன.

*புகழ்:* *போதை பொருள் வியாபாரம், ஆசிரமத்தில் உள்ள இளம் ஏழை பெண்களை
வெளிநாட்டுகாரனுக்கு கூட்டி கொடுத்தது, கொலை செய்தது*. இதனால் அவர் மீது கொலை,
கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றத்துக்காக
சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

** நித்யானந்தா:* 32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணா மலையில்
பிறந்தவர். *33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின்
தலைவர்,*பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப்
பீடம். பெரும் செல்வாக்கு,

*புகழ்: * *நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் சல்லாபம். ஆசிரமத்து
பெண்களை அமெரிக்கா லாஸ்வேகாஸ் நகருக்கு அழைத்து சென்று நிர்வாண நடனம் நடக்கும்
கிளப்களில் அவர்களை நிர்வாணமாக்கி* அவர்களோடு நடனம் ஆடியது பின்னர் விடுதி
அறையில் அவர்களோடு செக்ஸ் வைத்து கொண்டது.

*சாப்ட்வேர் என்ஜீனியர் படித்த பெண்ணை மது வாங்கி வரச்சொன்னது, மதத்தின்
பெயரால் அவரை மது அருந்த* சொல்லி பலவந்தபடுத்தி அவர் மயக்கநிலையில் இருக்கும்
போது கற்பழித்தது. இப்படி பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்தது.

*வாழ்க்கைக்குத் தேவையான 64 தந்திரங்களில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ்
தொடர்பானவை* என்றும், அதைக் கற்றுத் தரும்போது நிர்வாணமாக இருப்பதும், உடலுறவு
போன்றவற்றில் ஈடுபட வேண்டி வரும்.

என்று கூறி தனது தியான பீடத்துக்கு வரும் *பெண்களிடம் ஒரு 10 பக்கம் கொண்ட
ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியது,* இதுபோல் கூறி அந்த பெண்களை ஏமாற்றி
செக்ஸ் உறவு கொண்டது.*அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் என்பவரின் மனைவி
ஷியாமளாவை அவரிடம் இருந்து அபகரித்தது*.

*சிவ் முரத்திவேதி:* இவர் சத்ய சாய்பாபாவின் சீடர். சொந்தமாக கோவில், புனே,
வாரணாசி, லக்னோ, பெங்களூர் நகரங்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள்.

*புகழ்:* *கோவில் சுரங்க அறையில் இளம் பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார
தொழிலில் ஈடுபடுத்தி வந்தது*. கல்லூரி மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் என பல
பெண்கள் கணவனை பிரிந்த பெண்கள் இவர்களை வைத்து கோவிலின் உள்ளே சுரங்க அறை
அமைத்து விபச்சாரம் நடத்தியது.

டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம்,
பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்),
மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார
விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசார் சீல்
வைக்கப்பட்டது. *டெல்லி
தவிர பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி
விபச்சாரத்தின்* மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்.

** கல்கி பகவான்:* விஜய்குமார் நாயுடு என்ற கல்கி பகவான். *தன்னை கல்கி அவதாரம்
என்றும், தன் மனைவியை அம்மா பகவான் என்றும் சொல்லிக்கொண்டவர்.* தன்னைக் காண
வரும் பக்தர்களிடம் கட்டாய கட்டணமாக ரூ 5000 வரை பெறுகிறார். சிறப்பு
தரிசனத்துக்கு ரூ 25000 கட்டணம். ஹோமம் செய்ய ரூ 60000 கட்டணம்.

*புகழ்:* *அம்மா பூஜை என்ற பெயரில் மட்டும் ரூ 240 கோடியும், விஜய்குமார்
நாயுடுவின் மகன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி ரூ 3000
கோடியும் அடித்தது*. இளம் ஆசிரம பெண்களை வெளிநாட்டவர்களுக்கு விருந்தாக
அளித்தது. போதைப் பொருள் பதுக்கல், பல கோடி ரூபாய் மோசடி செய்தது.

** பாபா ராம்தேவ்:* வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை
செய்யும் *பாபா ராம்தேவின் வணிகம் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. *பாபா
ராம்தேவின் மொத்த சொத்து மதிப்பு 1100 கோடிக்கு மேல்.

*அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம். மற்றொரு
நாட்டில் சொந்தமாக தீவு*. வெளிநாட்டு விலை உயர்ந்த கார்கள், தனிவிமானத்தில்
பவனி. *ஓட்ட சைக்களில் வலம் வந்தவர் இப்போது ஹெலிகாப்டரில் வலம் *வருகிறார்.

ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்கு வதற்கு
கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். *சாதாரண
உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ.
21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம்
ரூ. 1,00,000, *முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர்
கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி
அழைக்கிறார்கள்.

** ஸ்ரீ ஸ்வாமிஜி:* அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஸ்ரீ ஸ்வாமிஜி என்று
அழைக்கப்படும் பிரகாஷனந்த் சரஸ்வதி சாமியாரின் இருப்பிடம். அவருக்கு அங்கே *200
ஏக்கர் அளவில் ஆசிரமம் உள்ளது*. வெளி நாடுகளிலும் கோவில்கள், மருத்துவ மனைகள்
உண்டு.

*புகழ்:* இவர் தனது *ஆசிரமத்தில் இருந்த இரு பெண்களிடம் பாலியல் ரீதியான
தொல்லைகளைக் கொடுத்துள்ளார்*. சம்பந்தப்பட்ட இரு பெண்களும் காவல் துறையிடம்
புகார் கொடுத்தனர். வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. முடிவில் *இந்த
சாமியாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45 ஆயிரம் அபராதமும்*விதிக்கப்பட்டது.

*சத்திய சாய்பாபா:* ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர்.
*இவருக்கு 165 நாடுகளில் சொத்துக்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55
மில்லியன் டாலர்கள்*சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும் வருமானம்.

*புகழ்:* ஆசிரமத்தில் *நடந்த படுகொலைகள். அவர் இறப்புக்கு பின்னே அவரது அறையை
திறந்து பார்த்தால் கோடி கோடியாய் பணம் மற்றும் நகைகள், வைரங்கள் *இப்படி
புதையலாக கிடைத்தன. இணையதளங்களில் *சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி* என்று
தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன.

** ஸ்ரீஸ்ரீ இரவிசங்கர்:* பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99
வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு
கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி.

** ஆஸ்ரம் பாபு:* டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஓராண்டு
வரவு செலவு வர்த்தகம் 350 கோடி.

** சுதன்ஷன் மகராஜூ:* நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன்
மகராஜூக்கு ஓராண்டு வரவு செலவு 300 கோடி.

** அமிர்தானந்த மாயி:* பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை
வர்த்தக நோக்கில் நடத்திவரும் *மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு
400 கோடி.*அமிர்தானந்த மாயியின் மொத்த சொத்து மதிப்பு 1200 கோடிக்கு மேல்.

** முராரி பாபு:* பணக்காரர்களுக்காக மட்டும் பல ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக்
கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி.

இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். சொத்து மதிப்பு இதனினும்
பல மடங்கு அதிகம்.

** பங்காரு சாமியார்:* கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி
தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர்.

** தீபக் தாக்கூர்:* அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஆழ்நிலை தியானமும்,
யோகாசனமும் கற்றுத் தருகிறேன் என்று உலக ஆளவில் பல மோசடிகளை செய்து மில்லியன்
டாலர்கள் வருமானம் ஈட்டுபவர்.

*தீவிரவாத சாமியார்கள்:*

** சுவாமி ஆசிமானந்தா:* குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண்
ஆசிரமம் என்ற பெயரில் ஆசிரமம். பலகோடி ரூபாய் சொத்துக்கள்.

*புகழ்:* *மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய
இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் முக்கிய குற்றவாளி.* இப்போது
சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

** பெண் சாமியார் சாத்வி பிரக்யா:* இவர் ஹிந்துத்துவா சாமியார். இவருக்கும்
வழக்கமான சாமியார்கள் போல ஆசிரமங்கள் உள்ளது.

*புகழ்:* இந்தியாவில் நடந்த *தொடர் குண்டு வெடிப்புகளின் மூளையாக இருந்து
செயல்பட்டவர். மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி* போன்ற குண்டு வெடிப்புகளை
நிகழ்த்தியவர்களுக்கு ஆலோசனை மற்றும் பொருளாதார உதவி செய்தவர்.

*இதுவல்லாமல்* *மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள்,* *ரஜினீஷின்
ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா* கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி
மையங்கள், *ஜக்கி வாசுதேவ்,* பிரார்த்தனையிலேயே “*குணமாக்கி’ நற்செய்திக்
கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன்* முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர
சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.
 ·  · பகிர்தல் · நீக்க
  • Kwamsuk Kwamruk இதை விரும்புகிறார்.
    • Kwamsuk Kwamruk good
      43 நிமிடங்களுக்கு முன்பு ·  ·  ஒருவர்
    • Kathir Kathirvelu மிக்க மகிழ்ச்சி
      41 நிமிடங்களுக்கு முன்பு ·