அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 29 ஜூன், 2011

நண்பருக்கு கடிதம் !

ஒருவருக்கு மகிழ்ச்சி இல்லைஎன்றால் இன்னொருவருக்கு மகிழ்ச்சி தரமுடியாது ,நான் ம்கிழ்ச்சியோடுதான் இருக்கிறேன்,கணவனும் மனைவியும் மகிழ்ச்சியோடு இருந்தால்தான் குழைந்தை பிறக்கும்.அதுபோல் ஆன்மா மகிழ்ச்சியோடு இருந்தால்தான் அருள் சுரக்கும்.குற்றம் உள்ளவர் பயத்தோடு இருப்பார்,பயம் இல்லாதவர் குற்றம் அற்றவர் .ஆதலால்தான் பயம் {0}வாக இருக்கவேண்டும் பயம் எங்கு இருக்கிறதோ அங்கு துன்பமும் துயரமும் நிறைந்து இருக்கும் .எதிலும் பற்று இல்லாதவர்களுக்கு பயம் இருக்காது.பற்று அற்றான் பற்றினை பற்ற வேண்டும்.அது பற்று அற்றால் அன்றி பலியாது.உண்மைகளை தெரிந்து கொள்ள ஞான அறிவு வேண்டும்.மனிதனின் சாதாரண அறிவு போதாது.அறிவை அறிவால்தான் அறியமுடியும் உயிர் வந்த வழியும் தெரியாது உடம்பு வந்த வழியும் தெரியாது மற்றதை எப்படி தெரிந்து கொள்ள முடியும் .இந்த இரண்டையும் தெரிந்து கொண்டால் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம் .எதையும் வெளியில் தேடவேண்டிய அவசியம் இல்லை.ஒழுக்கம் முதலில் தேவை,ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.அந்த ஒழுக்கம் இந்திரியம்,கரணம்,ஜீவன்,ஆன்மா,இந்த நான்கையும் நம்முடைய வழியில் கொண்டு வர வேண்டும்.அப்படி கொண்டு வந்தால் அனைத்து உண்மைகளும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் .அந்த வழியில்தான் அடியேன் வாழ்கிறேன்.உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வந்து சோதித்து பார்த்து கொள்ளுங்கள் .அன்புடன் --ஆன்மநேயன் --கதிர்வேலு.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக