அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 14 ஜூன், 2011

வள்ளலார் உயர்ந்தவர் --நண்பருக்கு கடிதம்

அன்பரே நாம் படிக்கிறோம், கல்லூரிக்கு செல்கிறோம் முன்னாடி படித்ததெல்லாம் தவறு 
என்று எண்ணுவதில்லை,அதற்கு மேற்க கொண்டு படிக்கிறோம்,அதுபோல் வள்ளலார் கருத்துக்கள் .
உதாரணம் ';--முன்னாடியுள்ள பெரியவர்கள் சொன்னார்கள் எழுதினார்கள் ,ஆக்கபூரவமாக
சமுதாயத்திற்கு,என்ன செய்தார்கள்.வள்ளலார் சொல்லியதோடு நில்லாமல் ,உலகில் ஏழைகள் 
படும் துன்பங்களை தாங்காமல்,பசியினால் வருந்தும் மக்களுக்கு,சாதி சமயம் மதம் போன்ற 
பாகுபாடு இல்லாமல் அனைவரும் பசியாற வேண்டும் என்ற பொது நோக்கத்தோடு சத்திய 
தருமச்சாலையை தோற்றுவித்தார்.இன்றுவரை அனைத்து மக்களும் பசியாற்றிக் கொண்டு 
இருக்கிறார்கள்,இது ஒன்றே சான்றாகும்.

அடுத்து கடவுள் பெயரால் மக்கள் பிளவுபட்டு மோதிக் கொள்ளும் கொடிய பழக்கத்திற்கு 
முடிவுகட்டி கடவுளின் உண்மையை சமுதாயத்திற்கு காட்டவேண்டும் என்ற நோக்கத்தில்,
அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் படி ''சமரச சுத்தசன்மார்க்க சத்திய ஞான சபையை''
கட்டி,கடவுள் ஒளியாக உள்ளார் என்பதை உலகிற்கு விளக்கியுள்ளார் .இதைவிட வள்ளலார் 
உயர்ந்தவர் என்பதற்கு சான்று என்னவேண்டும்.இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

வள்ளலார் சொல்லியதோடு இல்லாமல்,செய்து காட்டினார்,வாழ்ந்து காட்டினார் .
மறுபடியும் சொல்கிறேன்,நான் யாரையும் குறை சொல்லவில்லை,மற்றவர்களை விட 
வள்ளலார் உயர்ந்தவர் என்பது என்னுடைய அறிவிற்கு விளங்குவதாகும்.
உங்களுக்கு,எவை பிடிக்குமோ அதை பிடித்துக் கொள்ளுங்கள்.நான் குறுக்கே 
வர தயாராக இல்லை.அவரவர் முயற்ச்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும் ..

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு

1 கருத்து:

  1. அய்யா
    நான் தங்கள் பேச்சுக்களைக் கேட்டு இருக்கிறேன்.வள்ளலார் மேல் உள்ள பற்றை தாங்கள் இன்னும் அதிகமானது .
    ஒரு நல்ல சன்மார்க்கியாக வாழ விரும்பி அதன் படி நடந்து வருகின்றேன்.

    நேற்று சைவம் பற்றிய ஒரு தளத்தை பார்வை இட்டேன். அதில் நம் வள்ளலார் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள்.அவற்றுக்கு பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை.
    சரியான பதில்களை எதிர்பார்த்து உங்களுக்கு இதை அனுப்புகிறேன்.
    http://www.saivaneri.org/eswaramoorthypillai/vallalar-arutpa-or-marutpa.htm

    நன்றி
    நல்லதம்பி
    nallathambi002@gmail.com
    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

    பதிலளிநீக்கு