அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 16 மே, 2011

சன்மார்க்க அன்பருக்கு கடிதம்


ஆன்மநேய அன்பரே வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை நன்கு படித்துவிட்டு உண்மை சேதிகளை வெளியிடுக்கள் எவனோ ஒருவன் எழுதியதை படித்துவிட்டு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடக் கூடாது .வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் எந்த இடத்தில் கடையை விரித்தேன் கேட்பாரில்லை கட்டிக் கொண்டேன் என்று இருக்கிறது .வள்ளலார் கட்டிகொலவதரறகா திருஅருட்பா எழுதினார் .கட்டிக்கொள்வதற்கா சமரச சுத்தசன்மார்க்கசத்திய சங்கத்தை துவங்கினார் ?கட்டிகொள்வதற்கா தருமச்சாலையை துவங்கினார் ?கட்டிகொலள்வதற்க்கா சத்திய ஞானசபையைக் கட்டினார் ?

எவனோ ஒரு அறிவில்லாதவன் எழுதியதை படித்து விட்டு கண்டபடி எழுதக்ககூடாது.திரு அருட்பாவை நன்றாகப் படியுங்கள்.படித்து உண்மையை உணருங்கள் மற்றவர்கள் சொல்லியதை கேட்காதீர்கள்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு. என்பதை உணருங்கள் .

வள்ளலார் கடையை எங்கு வைத்திருக்கிறார் என்பதை வள்ளலார் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார் ,
அந்த பாடல் வருமாறு ;--

ஆரண வீதிக்கடையும்---சுத்த 
ஆகம வீதிகளந்தக்கடையும்
சேர நடுக்கடை பாரீர் --திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி 

பாடல் மறைகளோர் கோடி--அருட் 
பாத வுருவ சொரூபங்கள் பாடி 
தேட இருந்தது பாரீர் --திருச் 
சிற்றம்பலத்தே திரு நடஜோதி 

என்று வள்ளலார் தெளிவாக எழுதியுள்ளார்கள் 

இந்த உலகத்தில் வேதம்,ஆகமம்,புராணம் ,இதிகாசம்,சாத்திரங்கள் யாவும், உண்மைக்கு புறம்பான கோடிக்கணக்காக பாடல்கள் பாடி ,கடவுளை கண்டு கொள்ளமுடியாமல் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.அப்படி பொய்யான பாடல்கள் எழுதி கடை விரித்து வைத்துள்ளார்கள் ,அந்தகடைகளை 
அப்புறப்படுத்த,அனைத்து கடைகளுக்கும் மத்தியில் (நடுவில் )என்னுடைய உண்மைக்கடையான் ''திரு அருட்பாவை'' மத்தியில் வைத்துள்ளேன்.அருட்பெரும்ஜோதியின் உண்மையை விளக்கியுள்ளேன் .
என்று ஆணித்தரமாக வள்ளலார் விளக்கியுள்ளார் .

ஆதலால் அன்பர்களே வள்ளலார் மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் அவர் பெருமையை,குலைக்க சமயவாதிகள் செய்த சூழ்ச்சியாகும்.அதனால் அப்படி எழுதியும் மேடையில் பேசியும் வருகிறார்கள்.அவர்களை இனம் கண்டு விரட்டி அடிக்கவேண்டும் அவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும்.இவை ஒவ்வொரு சுத்த சன்மார்க்கிகளின் கடமையாகும்.

சாதி சமயம் மதம் போன்ற பற்றுள்ளவர்கள் சுத்த சன்மார்க்கத்தை புரிந்து கொள்வது கடினமாகும்,அதையெல்லாம் விட்டு விட்டால்தான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் அறிவு பூர்வமாக விளங்கும்.பற்றிய பற்று அத்தனையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே என்கிறார் வள்ளலார்.

அறிவை அறிவால் அறிகின்ற பொழுது அனுபவமாகும்.அறிவைத் தேடுங்கள் அனுபவம் தானே வரும் .
வள்ளலார் கொள்கையை பின்பற்றுபவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி உண்மையானது.தூய்மையானது ஒழுக்கமானது,யாராலும் குறை சொல்லமுடியாதது.அதை பின் பற்றுபவர்கள் எப்படி இருக்க வேண்டும்.ஒழுக்கம் நிறைம்பி கருணையே வடிவமாக இருக்கவேண்டும் .

சீவகாருன்யமும், கடவுள் நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற சத்விசாரமும் அவசியம் தேவையாகும்.இவை இரண்டும் மிக முக்கியமானதாகும்.சீவகாருண்யம் விளங்கும்போது,அன்பும் அறிவும் தானாக விளங்கும்.சீவகாருண்யம் மறையும் போது அன்பும் அறிவும் தானாக மறையும்.இந்த உண்மையை உலகிற்கு யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை.

அன்பு,தயவு கருணை என்னும் மூன்றும் மிக முக்கியமானதாகும், தயவு என்னும் கருணைதான் என்னை மேலே தூக்கிவிட்டது வேறு எதுவும் என்னை தூக்கிவிடவில்லை,என்று தெளிவுபட தெரிவித்துள்ளார்கள்.
சீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்,சீவகாருண்யமே கடவுள் வழிபாடு.சீவகாருண்யமே ஆன்மநேய ஒருமைப்பாடு.என்னும் கொள்கையை கடைபிடித்தால் கடவுள் நமக்கு கொடுக்க வேண்டியதை கொடுப்பார் இதில் எந்த சந்தேகமும் இல்லை .

ஆன்மநேய அன்பர்களே திரு அருட்பா ஆறாம் திருமுறையை நன்கு படியுங்கள் உண்மையை உணருங்கள்.உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்.அனைத்துலக மக்களையும் ஒழுக்கமுள்ளவர்களாக தூய்மையுள்ளவர்களாக,கருணை யுள்ளவர்களாக மாற்றுங்கள் .அதுவே நாம் செய்யவேண்டிய கடமையாகும் .உயிர்க்கொலையும் புலால் உண்பதும் கொடுமையான பாதகச்செயல் என்பதை உணர்த்துங்கள்
எல்லாஉயிர்களும் இன்புற்று வாழ்க 
கொள்ளா நெறியே குவலயம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன்;--கதிர்வேலு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக